About Me
- காந்தி பனங்கூர்
- அரியலூர், தமிழ்நாடு, India
- உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.
Thursday, 29 September 2011
ஏழைப்பெண்
மாதம் முடிந்தால் கையொப்பமிட்டு
சம்பளம் வாங்க எங்கப்பன்
ஒன்றும் படிக்கவில்லை
ஏர் உழுது அறுவடை செய்ய
எங்கப்பனுக்கு நிலமும் இல்லை
கூலி வேலை செய்யனும்னா
எங்கப்பனுக்கு குருதியும் குறைஞ்சுப்போச்சு
பார்க்க வரும் வரன்கள் எல்லாம்
பத்து சவரனாவது கேட்குறாங்க
இனிமேலும் இருக்க விரும்பவில்லை
எங்கப்பனுக்கு சுமையாக
இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
அழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே
Friday, 23 September 2011
உங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க
உங்கள் ஊரின் மேப்பை உங்கள் ப்ளாக்கில் கூகுள் வழியாக இணைக்கலாம். ஆனால் கூகுள் மேப்பை இணைக்கும் போது மேப்பின் அளவை தேவையான அளவிற்கு கூட்டி குறைக்க முடிய வில்லை. எனவே wikimapia.org என்ற முகவரிக்கு சென்று நீங்கள் Sign Up செய்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் Id யை கொடுத்து Sign In செய்துக்கொள்ளுங்கள். பின்பு மேப்பில் உங்கள் ஊர் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
அங்கு உங்கள் வீட்டை கூட பார்க்க முடியும். பின்பு மேப்பில் உள்ள Add place ல் க்ளிக் செய்து உங்கள் ஊர் இருக்கும் இடம் அல்லது உங்கள் வீடு இருக்கும் இடத்தை குறியுங்கள். அதில் உங்கள் வீட்டின் பெயரையும் கூட எழுதலாம். கீழே இருப்பது போன்று.

அதன்பின் மேப்பில் உங்கள் Id யை க்ளிக் செய்தால் Map on your page என்ற ஐகானை தேர்வு செய்யுங்கள். Map on your page யை க்ளிக் செய்ததும் சதுரமான பெட்டி ஒன்று உங்கள் மேப்பில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று. தோன்றும். அதை நீங்கள் தேவையான இடத்திற்கு மாற்றியும் தேவையான அளவிற்கு சரி செய்தும் கொள்ளலாம்.
தேவையான இடத்தை தேர்வு செய்த பின்பு தேர்வு செய்த இடத்திற்க்காண HTML CODE யை காபி செய்து உங்கள் Dashbord ல் உள்ள Design என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள். பின்பு add gadget ஐ க்ளிக் செய்து Html java script ற்கு சென்று இங்கு பேஸ்ட் செய்த பின் Save பண்ணுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் வீட்டின் மேப் உங்கள் ப்ளாக்கில் இணைக்கப்பட்டிருக்கும்.
Labels:
தொழில் நுட்பம்
Tuesday, 20 September 2011
மூடநம்பிக்கை எப்போது ஒழியும்?
இந்த பதிவு மூடநம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பற்றியது. மூடநம்பிக்கையுடையோர் படிக்க வேண்டாம்.
நம் நாட்டில் இந்துக்கள் முக்கால்வாசி பேருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பிள்ளை பிறந்ததும் பெயர் சூட்டுதல், பள்ளிக்கு சேர்த்தல், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெண்வீடு பார்க்க செல்லுதல் (அ) மாப்பிளை வீடு பார்க்க செல்லுதல், திருமண நாள், முதலிரவு நாள், வீடு கட்ட மனை முகூர்த்தம் நாள், குடிபுகுதல் நாள் என ஒவ்வொன்றுக்கும் நாள் பார்த்து ஜாதகம் பார்த்து தான் செய்கிறார்கள்.
அப்படி பார்த்து பார்த்து செய்யும் அனைத்து குடும்பங்களும் சந்தோசமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கிறார்களா? இல்லை என்று தான் சொல்லுவேன்.
மூடநம்பிக்கை சம்பவம் 1.
சுபமுகூர்த்த நாளில் முகூர்த்தம் செய்து வீடு கட்ட ஆரம்பித்து, நல்ல முறையில் வீட்டை கட்டி முடித்தார்கள். கிட்ட தட்ட 5 அல்லது 6 வருடமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்போ அந்த வீட்டு பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குதாம். அதனால் பூசாரியை கூட்டி வந்து பேய் ஓட்டினார்கள். அப்பவும் சரியாக வரல. அதனால் அவர்கள் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தார்கள். இன்னும் 2 மாதத்திற்கு வீட்டுக்கு கிரகம் சரியில்லை அதனால் வேறு வீட்டில் 2 மாதம் குடியிருங்கள் என்கிறார்.

மூடநம்பிக்கை சம்பவம் 2.
என் நண்பனின் அக்காவுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்கு வீட்டை விட்டு கிளம்பினார்கள், அப்போது ஒரு பூனை குறுக்கே வந்தது. அதனால் அந்த வரன் வேண்டாம் என்று சொல்லி விட்டார் நண்பனின் அப்பா. ஆனால் அவருக்கு அந்த மாப்பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் ரொம்ப பிடித்திருந்தது. இருந்தும் பூனை குறுக்கே வந்ததால் அந்த வரனை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
மூடநம்பிக்கை சம்பவம் 3.
ஒருவருக்கு பயங்கர வயிற்று வலி. ஏன் ஆஸ்பத்திரிக்கு போக வில்லைன்னு கேட்டால் இன்னக்கி நாள் சரியில்லை என்றும் அப்படி மீறி போனால் இவர் உயிருக்கு ஆபத்தாகி விடுமாம். அதனால் உள்ளூர் மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு வரவைத்து வலி நிற்க ஊசிப்போட்டுக்கொண்டுள்ளார்.
மூடநம்பிக்கை சம்பவம் 4.
நண்பர் ஒருவரிடம் அவசரமாக பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டிருந்தேன். காலையில் சரி என்றவர், மாலையில் நாளைக்கு வாங்கிக்கலாம் என்றார். ஏனென்றால் அன்று செவ்வாய் கிழமையாம்.
மழை வேண்டி கழுதையை திருமணம் செய்வது, குழந்தையை நரபலி கொடுப்பது என்று இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் எப்பவோ நடந்த சம்பவம் அல்ல . இப்பொழுதும் நடந்துகொண்டு இருப்பவை தான்.
திருமணம் செய்வதற்கு ஜாதகம் பார்த்தால் அது நம்பிக்கை. ஆனால் அந்த ஜாதகம் பார்ப்பதற்க்கு கூட அவர் வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் நல்ல நேரம் பார்த்து கிளம்புகிறார்களே அதை என்ன சொல்வது. அதை தான் மூடநம்பிக்கை என்கிறேன்.
மேலை நாடுகளில் ஜாதகம் பார்ப்பது கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் நம்மூரிலும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையோர் ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது கிடையாது. அவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இந்துக்களாகிய நம் மக்கள் தான் பையன் அல்லது பெண்ணை பிடிச்சிருந்தாலும் கூட ஜாதகம் சரியில்லையென்றால் ஒதுக்கி விடுகிறார்கள்.
மூட நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் 5 வருடத்திற்கு ஒருமுறை கிரகம் மாறுகிறதா ?
சகோதர சகோதரிகளே, இந்த பதிவின் நோக்கம் ஜோதிடம் பார்ப்பவர்களை புண்படுத்துவதற்காக அல்ல. ஆனால் ஜோதிடம் சொல்வது தான் நூறு சதவீதம் சரி என்று நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என்று தான் நான் கூறுகிறேன்.
Labels:
மூடநம்பிக்கை,
ஜோதிடம்
Monday, 5 September 2011
நண்பரின் இழப்பு
நண்பர்களே இது ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவம்.
ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் தன்னுடன் ஒரே அக்காவுடன் பிறந்த நண்பர் ஒருவர் தன்னுடைய 19 வது வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் சொந்த ஊரில் இருந்தால் முன்னேற முடியாது என்பதால் எல்லோரைப்போலவும் வெளிநாட்டு கனவு அவருக்கும் வந்தது. அவரும் வெளி நாடு ( சிங்கப்பூர்) சென்றார்.
சிங்கப்பூரில் கிட்டதட்ட 11 வருடம் வேலை செய்தார். தனக்கு 27 வயதாக இருக்கும் போது சொந்தம் இல்லாத ஒருப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பணத்திற்க்காக 4 வருடம் சிங்கப்பூரில் தன் வாழ்க்கையை ஓட்டினார். திருமணத்திற்கு பிந்தைய இந்த 4 வருட சிங்கப்பூர் வாழ்க்கையின் போது அவரின் மனைவிக்கு குழந்தை உருவாகவில்லை. அதனால் தனது சிங்கப்பூர் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு 2008 ஆம் ஆண்டு கடைசியில் தாய் நாடான தமிழகம் நோக்கி புறப்பட்டார். 2009 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அவரின் மனைவி. எல்லா விசயங்களிலும் நன்றாக யோசித்து தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் இவர்.
அதே போலவே யோசித்து 2009-ல் சிறுதொழில் ஒன்றை தொடங்கினார். மினிவேன் வாடகைக்கும், கைத்தொலைப்பேசி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல், மீன் வளர்த்தல் போன்ற தொழில் நடத்தி வந்தார். தொழில் நன்றாக போனது. எல்லா செலவுகளும் போக வருடத்திற்கு 2 லட்சம் மீதம் பண்ண முடிந்தது. இது கிட்ட தட்ட சிங்கப்பூரில் சம்பாதிக்கும் சம்பாத்தியம் அளவுக்கு ஈடானது என்றே சொல்லலாம்.
இப்படி சந்தோசமாக போனவரின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடியுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் வழக்கம் போல தனது மொபைல் கடையை மூடிவிட்டு தனது மீன்குளத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக (இவருக்கு எலக்ட்ரிக்கல் வேலையும் தெரியும்) தனியாளாக போனவர் அங்கேயே மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார்.
இன்று இரவு கடையிலே தூங்கிவிட்டார் போல என்று நினைத்திருந்த மனைவிக்கு தெரியாது அவர் நிரந்தரமாக தூங்கிவிட்டார் என்பது. காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு அவரின் மனைவிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
11 வருடம் தாயை பிரிந்தும் 4 வருடம் மனைவியை பிரிந்தும் வாழ்ந்த அவருக்கு, தன் வாழ்க்கையின் வசந்தகாலம் ஆரம்பமாகும்போது இப்படி உலகத்தை விட்டே போய் விட்டாரே. எல்லோரிடத்திலும் சிரித்த முகத்தோடு பேசுபவர், வீண் வம்புக்கு போகாதவர், தாய்க்கு நல்ல பிள்ளையாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருந்த இவருக்கு ஏன் இப்படி நடந்தது. இப்போது இவரின் மனைவி இரண்டாவது முறையாக 7 மாத கற்பிணியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு யார்? வயதான மாமியார் இன்னும் எவ்வளவு காலம் இவருக்கு ஆதரவளிப்பார்.
ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் குறித்து, கடவுள் சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்த இவருக்கு நேர்ந்த கதியை பாருங்கள் நண்பர்களே. என்னத்த சொல்லி அழுவது, எப்படி மனதை தேற்றிக்கொள்வது என்றே தெரியாமல், மீளாத துக்கம் தாளாத சோகத்தில் நடுக்கடலில் சூறாவளியில் சிக்கிக்கொண்ட படகைப்போல தத்தளிக்கிறார்கள். கடவுளுக்கு கண்ணிருந்தால் இதுபோல இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளட்டும் (அ) பார்த்து பார்த்து நல்லவர்களையே கொல்லட்டும்.
Sunday, 28 August 2011
கிராமத்து சொர்க்கம்
இரவு நிலா வெளிச்சத்தினில்
எல்லோரும் கூடி உணவருந்தும் சுகம்
இப்போது இல்லையே
உலகக் கதை பேசும் சுகம்
இப்போது இல்லையே
இப்போது இல்லையே
திருவிழா காலங்களில் ஆண்களும்
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே
கார்த்திகை தீபத்திற்கு பெண்களெல்லாம்
ஏரியில் விளக்கு விடுவது
இப்போது இல்லையே
நம் வீட்டு குழம்பு ருசிக்காதபோது
பக்கத்துவீட்டு குழம்பு வாங்கி சாப்பிடும் சுகம்
இப்போது இல்லையே
வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே
எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!
இப்போது இல்லையே
வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே
எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!
Saturday, 20 August 2011
சிங்கப்பூரில் பேய் பூஜை
சிங்கப்பூரில் இது பேய் மாதமாகும். அதாவது சீன மாதத்தில் ஏழாவது மாதம் பேய் மாதமாக கொண்டாடுவார்கள். சிங்கப்பூரில் உள்ள கிட்டதட்ட அனைத்து சிறிய, பெரிய நிறுவனகள் கடைகள் மற்றும் வீட்டமைப்பு பகுதிகளில் கூட இந்த பூஜை நடக்கும்.
படம் : பழங்கள்
இந்த எழாவது மாதத்தில் தான் பேய்களுக்கான வாசல் திறந்திருக்குமாம். அப்போது தான் இந்த பேய்கள் எல்லாம் வெளியில் நடமாடுமாம். அதனால் தான் இந்த மாதத்தில் பூஜை செய்து பேய்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.
நம்ம ஊரில் பேய் பிடித்திருந்தால், அவர்களுக்கு பேய் விரட்டும் போது மந்திரவாதி உனக்கு என்ன வேனும்னு கேட்டு வாங்கிட்டு போ என்பார்கள். அது ஆண் பேயாக இருந்தால் சாராயம், வேட்டி சட்டை என கேட்கும், பெண் பேயாக இருந்தால் சேலை, பூ, வலையல், பொட்டு என கேட்கும். அதுபோல இந்த பேய்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்து படைப்பார்கள்.

படம் : முழுசாக பொறித்த பன்றி

இங்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மதுபானம் (பீர்) மற்றும் பன்றி போன்றவை வைத்து படைப்பார்கள். முழுப்பன்றியை அப்படியே எண்ணெயில் பொறித்து வைத்திருப்பார்கள். சீனர்கள் பன்றியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பிறகு பேப்பர் எரித்தல் முக்கியமாக இடம்பெற்றிருக்கும். மேலே உள்ளது போன்று அடுக்கி பிறகு அதை எரிப்பார்கள். அதன் பிறகு சாப்பாடும் உண்டு.
பேய்க்கு படைத்தாலும், சாமிக்கு படைத்தாலும் சாப்பிடுவது என்னவோ நாம் தான்.
பேய்க்கு படைத்தாலும், சாமிக்கு படைத்தாலும் சாப்பிடுவது என்னவோ நாம் தான்.
Labels:
சிங்கப்பூர்,
பேய் பூஜை
Friday, 19 August 2011
பிரம்மச்சாரி
வேலை முடிந்து வரும்போது
மனைவிக்கு மல்லிகைப்பூ
வீட்டுக்கு வந்ததும்
குழந்தைகளின் குதூகல சிரிப்பு
இரவானால் கிடைக்கும் மனைவியின்
அன்பான அரவணைப்பு
குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா
செல்லும்போது கிடைக்கும் பூரிப்பு
இவையெல்லாம் எங்கே கிடைக்கப்போகிறது என் பிரம்மச்சாரி நண்பனுக்கு.
Labels:
கவிதை
Tuesday, 16 August 2011
!!! கவிதை எழுத !!!
எட்டி எட்டி பார்க்கும்
நிலவை உற்று நோக்கினேன்
எதிர்வீட்டு ஜன்னலை
ஏக்கத்துடன் பார்த்தேன்
கடற்கரை காற்றில்
தனிமையில் நடந்தேன்
குளத்தங்கரை தண்ணீரில்
கல்வீசிப் பார்த்தேன்
அவளாய் நினைத்து
மலரை காதலித்தேன்
சுட்டுப் போட்டாலும் வரவில்லை கவிதை எழுத!!!
Labels:
கவிதை
Sunday, 14 August 2011
மறைந்து போன மரத்தடி சலூன்கள்
"ஏசி' அறையில் உட்கார்ந்து "ஸ்டெப் கட்டிங்' போடும் மோகம் அதிகரித்ததால், மாறும் உலகில் மரத்தடி சலூன்கள் மறைந்து போனது.அப்பாவின் கூடை வைத்த சைக்கிளில் அமர்ந்து கொண்டு, வழியில் விளையாடும் நண்பர்களிடம் உற்சாகமாய், "நான் முடிவெட்ட போறேன்...' என்று கத்தும் பூரிப்பை 25 ஆண்டுக்கு முன் சிறுவர்களிடம் பார்த்திருப்போம்.
இன்று நடைமுறையில் இருப்பதை போல, "பரந்த கண்ணாடி, "ஏசி' அறை, "வீல்' நாற்காலிகள், அலங்காரா திரவங்கள்,' அன்று இல்லை. இருந்தும், ஆர்வம் தந்தன மரத்தடி சலூன்கள். அவை தான் அன்றைய இளைஞர் பட்டாளத்தின் பியூட்டி பார்லர்.
"பாகவதர் ஹிப்பி, எம்.ஜி.ஆர்., கர்லிங், சுதாகர் ஸ்டெப், டி.ராஜேந்தர் பங்க், கமல் அட்டாக், மிஷின் கட்டிங், சிசர் கட்டிங்' என, பலவகை கட்டிங் முறை பிறந்ததும் அங்கு தான். சட்டையை கழற்றியதும், முகம் பார்க்கும் கண்ணாடியை கையில் கொடுத்து நம்மை நாமே ரசிக்க செய்து, முடிவெட்டியது அந்த காலம். பாட்டில் தண்ணீரை "ஸ்பிரே' மூலம் முகத்தில் "புஸ்" "புஸ்' என அடித்து விட்டு, தீட்டிய கத்தியில், தாடியை பறிகொடுக்க பெருங்கூட்டம் காத்திருக்கும்.
முகம் மழுமழுவென இருக்க கத்தியில் "ஷேவ்' செய்து விட்டு, வெள்ளை காரக்கல்லை வைத்து முகத்தில் தேய்க்கும் போது, சுர்ர்ரென்ற சுகம் இருக்கிறதே...அது எல்லாம் அந்த காலம்.
இன்று "ஏசி', "டிவி', வைத்து, அலறும் பாடல்களை ஓடவிட்டு அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கின்றனர். பாரம்பரியத்தை அழித்த நவீனம், இந்த தொழிலிலும் புகுந்ததால் மரத்தடி சலூன்கள் மறையத்தொடங்கின. தென்மாவட்டத்தில் ஆங்காங்கே கிராமங்களில், விரல் விட்டு எண்ணும் அளவில் தான் மரத்தடி சலூன்கள் உள்ளன.
நகரத்தில் கட்டிங், ஷேவிங் செய்ய 50 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதே பணிக்கு மரத்தடி சலூனில் 15 ரூபாய். இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவிருக்கும் மரத்தடி சலூன்களை (மரம் இருந்தால் தானே மரத்தடி சலூன் இருக்கும்), வரும்காலத்தில் நாம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினாலே பெரிய விஷயம்.
நன்றி : தினமலர், 14-08-2011
Friday, 12 August 2011
செக்ஸ் கல்வியின் அவசியம் பற்றிய ஒரு பார்வை
நன்பர்களே, இன்றைய உலகில் செக்ஸ் கல்வியின் அவசியத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் மிகுந்த சிரமமாக உள்ளது. நம் வீட்டில் பெற்றோருடனும், அக்கா தங்கையுடனும் ஒன்றாக உட்கார்ந்து ஒரு குத்துப்பாட்டு பார்க்க முடியாத நிலமையில் தான் நாம் உள்ளோம்.
பிறகு எப்படி செக்ஸ் பற்றிய விஷயங்களை நாம் நம் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ள போகிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். நான் +2 படிக்கும் போது எங்களுடைய ஆசிரியர் உயிரியியலில் பெண்களுக்கு வரும் மாதவிடாயை பற்றி வகுப்பு எடுக்கும் போது, மாணவிகளை வெளியில் அனுப்பிவிட்டு எங்களுக்கு பாடம் எடுத்தார்.
பிறகு மாணவிகளிடம் இதுபற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும், அதனால் இந்த பகுதையை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஒரு ஆசிரியரே இதுபோன்ற செக்ஸ் பற்றிய விஷயங்களை மாணவ மாணவிகள் இருக்கும் இடத்தில் தவிர்க்கும்போது, பெற்றோர்கள் எப்படி குழந்தைகளிடம் வெளிப்படுத்துவர்.
செக்ஸ் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் நம்மை பக்குவபடுத்திக்க வேண்டும், அப்போது தான் நம்முடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூற முடியும்.
நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்த்தால் 6 வயது, 7 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை என்று படிக்கிறோம். இந்த மாதிரி நடந்துக்கொள்ளும் காமக்கொடூரங்கள் புதிதாக முளைத்து வருவதில்லை. நம் அக்கம் பக்கம் வீட்டில், அல்லது நம் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோகும் நபர்கள் தான்.
மேலை நாடுகளில், ஏன் சிங்கப்பூரிலும் இந்தமாதிரி சம்பவங்கள் நிறய நடக்கின்றன. அங்கு வீட்டிற்குள் இருக்கும் வளர்ப்பு தந்தைகளாலேயே பல குழந்தைகளின் வாழ்க்கை சூறையாடப்பட்டுவிடுகிறது. இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறும் போது அந்த குழந்தகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமலே நடந்து முடிந்து விடுகின்றன.
சிங்கப்பூரில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு நாடகம் ஒளிபரப்புகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக விழிப்புணர்வுள்ள நாடகம் எடுப்பதில் ஒருவரும் அக்கறை காட்டுவதில்லை.
அதனால் நாம் தான் நம் குழந்தைகளிடம் எந்த மாதிரி தொடுதல் சரியானது, எது தவறானது என்பதை சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு எளிதாக சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று.
எந்த மாதிரி தொடுதல் சரி, எந்த தொடுதல் தவறு என்றும் அது எந்த சூழ்நிலையில் நடந்தால் சரி, தவறு என்பதையும், அப்படி மற்றவர்கள் தவறாக
நடக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும் அழகாக சொல்லிக்கொடுக்கிறார்.
ஒவ்வொரு பெற்றோடும் தங்கள் பிள்ளைகளை நண்பர்களாக நினைத்து அவர்களிடம் மனம்விட்டு செக்ஸ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொண்டால், நம் பிள்ளகளுக்கு பாதுகாப்பும், பெற்றோர் பிள்ளைகளுக்குள்ள உறவும் மேம்படும்.
செக்ஸ் கல்வியை கற்றுக்கொடுங்கள், காமக்கொடூரன்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள்.

பொது,
விழிப்புணர்வு
Saturday, 6 August 2011
கணிணி பிரச்சினைக்கு தீர்வுகாணும் வலைப்பதிவாளர்களின் வலைத்தளங்கள்.
நண்பர்களே, கணிணி இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விஷயங்கள் இருக்கின்றன. தெரிந்த விஷயங்களை பற்றி பிரச்சினை இல்லை. தெரியாத விஷயங்களை பற்றி தான் பிரச்சினை.
தெரியாத விஷயங்களை அனேகமாக கூகுள் தேடுபொறியில் தான் தேடுவோம். அவற்றில் அனைத்து விஷயங்களும் கிடைக்கும். ஆனால் அவை அனைத்தையும் புரிந்துக்கொள்வது சற்று கடினம்.
அதுவே நம் தாய்மொழியான தமிழில் கிடைத்தால் மிகவும் எளிதாக இருக்கும். அதற்காக தான் நம்ம வலைபதிவு நண்பர்கள் நமக்காக தேடி தேடி அவர்களுக்கு தெரிந்த விஷயங்களை நம் தமிழ்மொழியில் பதிவிடுகிறார்கள்.
அப்படி கணிணி பற்றி பதிவிடும் அனைத்து வலைத்தளங்களையும் நாம் தேடுவது சிரமம். அதனால் தான் கொஞ்ச நேரம் செலவிட்டு எனக்கு தெரிந்த சில முன்னணி வலைத்தளங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
இதை விட கணிணியை பற்றிய செய்திகளை சிறப்பாக தரும் சிறந்த வலைப்பதிவர்களும் இருக்கலாம். அப்படி இருக்கும் நண்பர்கள் தயவு செய்து வருத்தப்படாமல் உங்கள் வலைத்தள முகவரியை என் பின்னூட்டத்தில் இடுங்கள். நான் சேமித்துக்கொள்கிறேன்.
Labels:
கம்ப்யூட்டர்,
தொழில் நுட்பம்
Tuesday, 26 July 2011
வெளி நாட்டில் இருக்கும் கணவனுக்காக ஏங்கும் மனைவியின் கவிதை
நண்பர்களே, இந்த கவைதை என் நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு திருமணமான மனைவியும் இந்த கவிதையில் இருப்பதைப்போல தான் ஏங்குவாள். அதேபோல அந்த கணவனும் ஏங்குவான். ஆனால் கவிஞர்கள் ஏனோ பெண்களின் ஏக்கத்தை மட்டுமே அதிகமாக பதிவு செய்கிறார்கள்.
திரும்பி வந்துவிடு என் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!
சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!
சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!
அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !
மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் கணவா! கணவா - எல்லாமே கனவா?
கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?
அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
திரும்பி வந்துவிடு என் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்
இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!
தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?
நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!
வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் வெளி நாட்டு தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!

Monday, 25 July 2011
சிங்கப்பூரில் 30 நிமிட இணையம் பயன்படுத்தி ரூ 3500 (S$100) பில் கட்டிய அப்பாவி
நன்பர்களே இது எனக்கு நடந்த சம்பவம். அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்களும் என்னைப்போல் ஏமாறாமல் இருப்பதற்காக.
நான் சிங்கபூரில் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். எனக்கு கிடைப்பதோ சுமாரான சம்பளம் தான். அதனால் இதுவரை சாதாரண கைத்தொலைப்பேசியைதான் பயன்படுத்தி வந்தேன்.
என் நண்பரும் என்னை போலவே சாதாரண கைத்தொலைப்பேசி தான் வைத்திருந்தார். ஆகவே இருவரும் புதியதாக கைத்தொலைப்பேசி வாங்க முடிவெடுத்தோம்.
இருவரும் கைத்தொலைப்பேசி விற்கும் நிறுவனம் ஒன்றிற்கு சென்று ஆளுக்கு ஒரு 3G கைப்பேசி( SAMSUNG GALAXY ACE) யை 2 வருட ஒப்பந்தத்தில் வாங்கினோம். ஆனால் அதில் இணைய சேவை (Internet Connection) வேண்டாம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் கூறி கைப்பேசியை வாங்கி வந்துவிட்டோம்.
கைப்பேசி வாங்கிய ஆர்வத்தில் அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஆர்வமாக செயல்படுத்தி பார்ப்போம். அப்படி நாங்களும் Map- ஐ திறந்து அதில் நாம் எங்கு இருக்கிறோம் நம் வீடு எங்கு இறுக்கிறது என சுமார் 30 நிமிடம் பயன்படுத்தினோம்.
என் நன்பர் என்னைவிட கொஞ்சம் அதிக நேரம் பயன்படுத்தினார். பிறகு இருவருமே அந்த Mobile-லில் உள்ள SIM Card-ஐ கழட்டிவிட்டோம். ஏனென்றால் நான்கள் பழைய சிம்கார்டையே உபயோகிக்க விரும்பினோம்.
நீங்கள் நினைக்கலாம் Internet connection இல்லாமல் எப்படி Map பார்க்க முடிந்தது என்று. அங்கு தான் நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம். எங்களுக்கு தெரியாது GPRS Automatically connect ஆகும் என்று. அதனால் நாங்களும் எப்படி internet Connection இல்லாமல் open ஆகுது என்று யோசித்துக்கொண்டே பயன்படுத்தி முடித்துவிட்டோம்.
முதல் மாத பில் என் நன்பருக்கு முதலில் வந்தது. அவருக்கு வந்த தொகை $402(சிங்கப்பூர் டாலர்). அதாவது 14000 ரூபாய். இதில் இணையம் பயன்ப்டுத்தியதற்க்காக S$ 310. எனக்கு வந்ததோ மொத்தம் 190 சிங்கபூர் டாலர், இதில் இணையம் பயன்ப்டுத்தியதற்க்காக மட்டும் 100 சிங்கப்பூர் டாலர் . ஆனால் அந்த கைப்பெசியின் மொத்த மதிப்பு 360 சிங்கப்பூர் டாலர் மட்டுமே.
கட்ட வேண்டிய தொகையை பார்த்ததும் நானும் நண்பரும் ரொம்பவே அதிர்ச்சியடைந்தோம். பிறகு Customer Care-க்கு அழைத்து கேட்டால் அவர்கள் கூறினார்கள் நாங்கள் GPRS உபயோகப்படுத்தியிருப்பதை பற்றி.
எனவே நன்பர்களே உங்களுக்கும் இதுபோல நடந்துவிடக்கூடாது என்பது தான் இந்த பதிவின் நோக்கம். நன்றி

Saturday, 23 July 2011
மனிதாபிமாணம், இன்னும் எங்கோ ஒரு மூளையில் இருக்கத்தான் செய்கிறது !!!(வீடியோ இணைப்பு)
நான் படித்த கல்லூரியில் எனக்கு ஜூனியராக படித்த மாணவன் மனிதாபிமாணத்தை பற்றி ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார், அந்த படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமாணம் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூளையில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த குறும்படம்.
வயதான பெரியவர் ஒருவர் ரோட்டில் நடந்து செல்கிறார். நல்ல வெய்யில் நேரம். அந்த நேரத்தில் அந்த வழியே வரும் சில இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரிடம் இவரை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்கிறார்.
ஆனால் அவர்களோ இவரை ஏற்றாமல் சென்றுவிடுகின்றார்கள். பிறகு மயக்கமடைந்து கிடந்தவரை மூன்று சக்கரத்தில் வரும் ஒரு ஊனமுற்ற பையன் அழைத்து செல்கிறான். காரில் செல்வோருக்கும், மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கும் இல்லாத இரக்க குணம் மூன்று சக்கர சைக்கிளில் செல்லும் பையனுக்கு இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த படத்தின் கதை.
மனதை வருடும் இந்த குறும்படத்திற்கு பின்னனி இசை நம்மை மெய்மறக்க வைக்கிறது. ஓளிப்பதிவு மிகவும் நன்றாகவும் நேர்த்தியாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

குறும்படம்
Thursday, 21 July 2011
சிங்கப்பூர் சூதாட்டக்கூடம் (CASINO) ஒரு பார்வை
உலக அளவில் சூதாட்டத்தின் (காசினோ) அதிகப்படி வருமானம் கிடைக்கும் ஸ்பாட், Macau (ஹாங்காங்). ஆனால், அங்கிருந்து 5 மணிநேர விமானப் பயணத்தில் உள்ள ஊர் தான் சிங்கப்பூர். இங்கு உள்ள (casino) பற்றி பார்ப்போம்.
இரு நிறுவனங்களும் இலக்கு வைக்கும் கஸ்டமர்கள் வெவ்வேறு. மரீனா பே சான்ட்ஸ் இலக்கு வைப்பது, கன்வென்ஷன் ரக கஸ்டமர்களை. அதாவது எல்லாமே குரூப் கஸ்டமர்கள்தான் இவர்களது இலக்கு. பிசினெஸ் மீட்டிங்களுக்கான இடவசதி, ஹை -என்ட் ரெஸ்ட்டாரென்ட் என்று இவர்களது உலகம் தனியானது.
இப்படி தம்மிடையே போட்டியில்லாமல் கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கி்ட்டுக் கொள்ளும் வர்த்தகங்கள், மிக அபூர்வம். அதனால்தான் சிங்கப்பூரின் காசினோ மாடலைப் பின்பற்ற மற்றைய ஆசிய நாடுகள் விரும்புகின்றன.இரு நிறுவனங்களின் குறிக்கோளும் ஒன்றே. சிங்கப்பூர் என்ற நாட்டின் குறிக்கோளும் அதுவே. அது என்ன குறிக்கோள்? உல்லாசப் பயணிகளிடமிருந்து சைட்-ட்டராக்காகப் பணம் சம்பாதிப்பது.
மரீனா பே சான்ட்ஸ்( Marina Bay) கசீனோ, சிங்கப்பூரிலுள்ள இரு முக்கிய சூதாட்டக்கூடங்களில் ஒன்று. இது அமெரிக்க முதலீடு. லாஸ் வேகஸ் சான்ட்ஸின் ஆசியப் பதிப்பு. இரண்டாவது காசினோ, ரிசாட்ஸ்(Resorts World) வேர்ல்ட் சிங்கப்பூர். இது மலேசிய முதலீடு.
இரண்டும், ஒன்றுடன் ஒன்று போட்டியிடவில்லை. மிக எளிமையாக, கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது எப்படி?
இரு நிறுவனங்களும் இலக்கு வைக்கும் கஸ்டமர்கள் வெவ்வேறு. மரீனா பே சான்ட்ஸ் இலக்கு வைப்பது, கன்வென்ஷன் ரக கஸ்டமர்களை. அதாவது எல்லாமே குரூப் கஸ்டமர்கள்தான் இவர்களது இலக்கு. பிசினெஸ் மீட்டிங்களுக்கான இடவசதி, ஹை -என்ட் ரெஸ்ட்டாரென்ட் என்று இவர்களது உலகம் தனியானது.
ஆனால், ரிசாட்ஸ் வேர்ல்ட் இலக்கு வைப்பது குடும்பங்களை. இங்கு கன்வென்ஷன் குரூப்களைக் காண முடியாது. தீம் பார்க், அந்த விளையாட்டு. இந்த விளையாட்டு என்று குடும்பம் குடும்பமாகக் கவர்வதுதான் இவர்களது பாணி.
இப்படி தம்மிடையே போட்டியில்லாமல் கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கி்ட்டுக் கொள்ளும் வர்த்தகங்கள், மிக அபூர்வம். அதனால்தான் சிங்கப்பூரின் காசினோ மாடலைப் பின்பற்ற மற்றைய ஆசிய நாடுகள் விரும்புகின்றன.இரு நிறுவனங்களின் குறிக்கோளும் ஒன்றே. சிங்கப்பூர் என்ற நாட்டின் குறிக்கோளும் அதுவே. அது என்ன குறிக்கோள்? உல்லாசப் பயணிகளிடமிருந்து சைட்-ட்டராக்காகப் பணம் சம்பாதிப்பது.
உதாரணமாக, அமெரிக்காவின் லாஸ் வேகஸை, அல்லது ஹாங்காங்கின் மக்காவை எடுத்துக்கொண்டால் இந்த இரு இடங்களிலும் சூதாட்டம் சைட்-ட்ராக்காக இல்லை முக்கிய வர்த்தகமே அதுதான். அப்படியான தோற்றம், காலப்போக்கில் பல கஸ்டமர்களை அங்கிருந்து ஒதுங்க வைத்துவிடும்.
வேறு ஒரு நகரம் காசினோவுக்குப் புகழ்பெறத் தொடங்கினால், கஸ்டமர்களின் ஒருபகுதி அங்கே போய்விடுவார்கள். வேறு ஒரு பகுதியினருக்கு, இந்த செட்டப்பே அலுத்துப்போய், வேறு இடங்களை நாடத் தொடங்கிவிடுவார்கள். (கடந்த வருடம் லாஸ் வேகஸின் கசீனோ வருமானம், 2009ம் ஆண்டு வருமானத்தில் 74 சதவீதம்தான்!)
ஆனால், சிங்கப்பூருக்கு வருபவர்கள் சூதாட மாத்திரம் வருவதில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கின்றது சிங்கப்பூர் அரசு. வருபவர்களுக்கு மற்றைய ஆப்ஷன்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு டிப்பிக்கல் உல்லாசப் பயணியின் ‘பார்க்க வேண்டிய பட்டியலில்’ காசினோவும் ஒன்று.
பட்டியலில், இதைவிட வேறு விஷயங்களே அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றது.
இந்த இரு காசினோக்களுக்கும் வருட Turn over 3 பில்லியன் டாலர். இரு காசினோக்களும் சிங்கப்பூரில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டபின், உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்திருக்கின்றது.
நீங்கள் சிங்கப்பூர் வந்தால் மறவாமல் இந்த இரு சூதாட்ட கூடங்களுக்கும் வந்து செல்லுங்கள்.
Labels:
சிங்கப்பூர்
Thursday, 14 July 2011
நீங்கள் தவறுதலாக அழித்துவிட்ட File - களை மீண்டும் பெறுவதற்கு
நீங்கள் CD அல்லது Pen drive -ல் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு File - ஐ தவறுதலாக அழித்து விட்டீர்கள் என்றால் இழந்த File - களை மிக சுலபமாக மீட்கலாம்.
இதற்கான Software பல இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் மிக சிறப்பு மிக்கது டிஸ்க் டிக்கர்(Disk Digger) மற்றும் ரெகுவா(Recuva).
1. டிஸ்க் டிக்கர் (Disk Digger): கணிணியின் CD மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், கைத்தொலைபேசி Memory Card, டிஜிட்டல் கேமரா Memory card மற்றும் பிற Memory card களில் அழித்த File - களை மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
Format செய்யப்பட்ட அல்லது சரியாக Format செய்யப்படாத செய்யப்படாத CD-களில் இருந்தும் File - களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு.
2. ரெகுவா(Recuva): இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்து போன கோப்பு குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.
எடுத்துக்காட்டாக Recycle Bin - லிருந்தும் அழிந்த File - களை மீண்டும் பெறலாம். இழந்த File - களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.
Wednesday, 13 July 2011
பென்டிரைவ் ( Pen drive) பற்றி தெரிந்ததும் தெரியாததும்
பென்டிரைவ் என்பது இப்பொழுது கணிணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும்.
இதன் மூலம் நமக்கு தேவையான File -களை அல்லது புகைப்படங்களை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது.
இந்த பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணிணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்டிரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் (Software) கீழே தரப்பட்டுள்ளன.
1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள File -களை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த File -களை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.
இதனால் உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை.
2. USB FIREWALL: பென்டிரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில் இருந்து கணிணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.
ஏதேனும் வைரஸ் உங்கள் கணிணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf File -களை முற்றிலுமாக தடைசெய்கிறது.
உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான Short cut தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான File -களை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.
Labels:
கம்ப்யூட்டர்
Subscribe to:
Posts (Atom)