About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Sunday, 14 August, 2011

மறைந்து போன மரத்தடி சலூன்கள்


"ஏசி' அறையில் உட்கார்ந்து "ஸ்டெப் கட்டிங்' போடும் மோகம் அதிகரித்ததால், மாறும் உலகில் மரத்தடி சலூன்கள் மறைந்து போனது.அப்பாவின் கூடை வைத்த சைக்கிளில் அமர்ந்து கொண்டு, வழியில் விளையாடும் நண்பர்களிடம் உற்சாகமாய், "நான் முடிவெட்ட போறேன்...' என்று கத்தும் பூரிப்பை 25 ஆண்டுக்கு முன் சிறுவர்களிடம் பார்த்திருப்போம்.

இன்று நடைமுறையில் இருப்பதை போல, "பரந்த கண்ணாடி, "ஏசி' அறை, "வீல்' நாற்காலிகள், அலங்காரா திரவங்கள்,' அன்று இல்லை. இருந்தும், ஆர்வம் தந்தன மரத்தடி சலூன்கள். அவை தான் அன்றைய இளைஞர் பட்டாளத்தின் பியூட்டி பார்லர்.

 "பாகவதர் ஹிப்பி, எம்.ஜி.ஆர்., கர்லிங், சுதாகர் ஸ்டெப், டி.ராஜேந்தர் பங்க், கமல் அட்டாக், மிஷின் கட்டிங், சிசர் கட்டிங்' என, பலவகை கட்டிங் முறை பிறந்ததும் அங்கு தான். சட்டையை கழற்றியதும், முகம் பார்க்கும் கண்ணாடியை கையில் கொடுத்து நம்மை நாமே ரசிக்க செய்து, முடிவெட்டியது அந்த காலம். பாட்டில் தண்ணீரை "ஸ்பிரே' மூலம் முகத்தில் "புஸ்" "புஸ்' என அடித்து விட்டு, தீட்டிய கத்தியில், தாடியை பறிகொடுக்க பெருங்கூட்டம் காத்திருக்கும்.

முகம் மழுமழுவென இருக்க கத்தியில் "ஷேவ்' செய்து விட்டு, வெள்ளை காரக்கல்லை வைத்து முகத்தில் தேய்க்கும் போது, சுர்ர்ரென்ற சுகம் இருக்கிறதே...அது எல்லாம் அந்த காலம். 

இன்று "ஏசி', "டிவி', வைத்து, அலறும் பாடல்களை ஓடவிட்டு அதற்கேற்ப கட்டணம் வசூலிக்கின்றனர். பாரம்பரியத்தை அழித்த நவீனம், இந்த தொழிலிலும் புகுந்ததால் மரத்தடி சலூன்கள் மறையத்தொடங்கின. தென்மாவட்டத்தில் ஆங்காங்கே கிராமங்களில், விரல் விட்டு எண்ணும் அளவில் தான் மரத்தடி சலூன்கள் உள்ளன.

நகரத்தில் கட்டிங், ஷேவிங் செய்ய 50 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதே பணிக்கு மரத்தடி சலூனில் 15 ரூபாய். இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவிருக்கும் மரத்தடி சலூன்களை (மரம் இருந்தால் தானே மரத்தடி சலூன் இருக்கும்), வரும்காலத்தில் நாம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினாலே பெரிய விஷயம்.

நன்றி : தினமலர், 14-08-2011

7 comments:

 1. இவை காலமாற்றத்தின் நியதிகள்... இவை வெறும் நினைவுகளாகவே எஞ்சியிக்கும்.
  கிராமத்து நினைவுகளை மீட்கும் பதிவு :)

  ReplyDelete
 2. @ சாய் பிரசாத் said...
  // இவை காலமாற்றத்தின் நியதிகள்... இவை வெறும் நினைவுகளாகவே எஞ்சியிக்கும்.
  கிராமத்து நினைவுகளை மீட்கும் பதிவு :)//

  கிராமத்து வாழ்க்கைக்கு ஈடு இணையே இல்லை.
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 3. ஆப்பசைத்து மாட்டிக் கொண்ட குரங்குபோல நாமே
  ஒரு தொழிலுக்கான செலவை கூடும்படியாகச் செய்துவிட்டு
  பின் விலைவாசி ஏற்றம் என சங்கடப் படுகிறோமோ
  எனத் தோன்றுகிறது
  வித்தியாசமான விஷயத்தை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நகரத்தில் கட்டிங், ஷேவிங் செய்ய 50 ரூபாய் முதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதே பணிக்கு மரத்தடி சலூனில் 15 ரூபாய். இந்த தலைமுறையுடன் முடிவுக்கு வரவிருக்கும் மரத்தடி சலூன்களை (மரம் இருந்தால் தானே மரத்தடி சலூன் இருக்கும்), வரும்காலத்தில் நாம் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினாலே பெரிய விஷயம்.
  கடந்தகால நினைவுகளை நினைத்துப்பார்க்க வைக்கும் அருமையான பகிர்வு தொட வாழ்த்துகள்............ .

  ReplyDelete
 5. @ அம்பாளடியாள்,

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 6. உண்மை தான் சார் ..
  நான் துள்ளி குதித்து ஓடிய காலம் மனதில் நிழலாடுகிறது

  ReplyDelete
 7. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அரசன் அவர்களே.

  ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க