படம் : பழங்கள்
இந்த எழாவது மாதத்தில் தான் பேய்களுக்கான வாசல் திறந்திருக்குமாம். அப்போது தான் இந்த பேய்கள் எல்லாம் வெளியில் நடமாடுமாம். அதனால் தான் இந்த மாதத்தில் பூஜை செய்து பேய்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.
படம் : முழுசாக பொறித்த பன்றி
நம்ம ஊரில் பேய் பிடித்திருந்தால், அவர்களுக்கு பேய் விரட்டும் போது மந்திரவாதி உனக்கு என்ன வேனும்னு கேட்டு வாங்கிட்டு போ என்பார்கள். அது ஆண் பேயாக இருந்தால் சாராயம், வேட்டி சட்டை என கேட்கும், பெண் பேயாக இருந்தால் சேலை, பூ, வலையல், பொட்டு என கேட்கும். அதுபோல இந்த பேய்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்து படைப்பார்கள்.
இங்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மதுபானம் (பீர்) மற்றும் பன்றி போன்றவை வைத்து படைப்பார்கள். முழுப்பன்றியை அப்படியே எண்ணெயில் பொறித்து வைத்திருப்பார்கள். சீனர்கள் பன்றியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பிறகு பேப்பர் எரித்தல் முக்கியமாக இடம்பெற்றிருக்கும். மேலே உள்ளது போன்று அடுக்கி பிறகு அதை எரிப்பார்கள். அதன் பிறகு சாப்பாடும் உண்டு.
பேய்க்கு படைத்தாலும், சாமிக்கு படைத்தாலும் சாப்பிடுவது என்னவோ நாம் தான்.
பேய்க்கு படைத்தாலும், சாமிக்கு படைத்தாலும் சாப்பிடுவது என்னவோ நாம் தான்.



