About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Tuesday 26 July, 2011

வெளி நாட்டில் இருக்கும் கணவனுக்காக ஏங்கும் மனைவியின் கவிதை

நண்பர்களே, இந்த கவைதை என் நண்பர் ஒருவர் எனக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒவ்வொரு திருமணமான மனைவியும் இந்த கவிதையில் இருப்பதைப்போல தான் ஏங்குவாள். அதேபோல அந்த கணவனும் ஏங்குவான். ஆனால் கவிஞர்கள் ஏனோ பெண்களின் ஏக்கத்தை மட்டுமே அதிகமாக பதிவு செய்கிறார்கள்.


திரும்பி வந்துவிடு என் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!


சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு
கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்
சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...
பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...
என் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....
2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

திரும்பி வந்துவிடு என் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?
விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்
ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் வெளி நாட்டு தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!
விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! 

Monday 25 July, 2011

சிங்கப்பூரில் 30 நிமிட இணையம் பயன்படுத்தி ரூ 3500 (S$100) பில் கட்டிய அப்பாவி

 நன்பர்களே இது எனக்கு நடந்த சம்பவம். அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்களும் என்னைப்போல் ஏமாறாமல் இருப்பதற்காக.


நான் சிங்கபூரில் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக பணிபுரிகிறேன்.   எனக்கு கிடைப்பதோ சுமாரான சம்பளம் தான். அதனால் இதுவரை சாதாரண கைத்தொலைப்பேசியைதான் பயன்படுத்தி வந்தேன்.


என் நண்பரும் என்னை போலவே சாதாரண கைத்தொலைப்பேசி தான் வைத்திருந்தார். ஆகவே இருவரும் புதியதாக கைத்தொலைப்பேசி வாங்க முடிவெடுத்தோம்.


இருவரும் கைத்தொலைப்பேசி விற்கும் நிறுவனம் ஒன்றிற்கு சென்று ஆளுக்கு ஒரு 3G கைப்பேசி( SAMSUNG GALAXY ACE) யை 2 வருட ஒப்பந்தத்தில் வாங்கினோம். ஆனால் அதில் இணைய சேவை (Internet Connection) வேண்டாம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் கூறி கைப்பேசியை வாங்கி வந்துவிட்டோம்.


கைப்பேசி வாங்கிய ஆர்வத்தில் அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஆர்வமாக செயல்படுத்தி பார்ப்போம். அப்படி நாங்களும் Map- ஐ திறந்து அதில் நாம் எங்கு இருக்கிறோம் நம் வீடு எங்கு இறுக்கிறது என சுமார் 30 நிமிடம் பயன்படுத்தினோம்.


என் நன்பர் என்னைவிட கொஞ்சம் அதிக நேரம் பயன்படுத்தினார். பிறகு இருவருமே அந்த Mobile-லில் உள்ள SIM Card-ஐ கழட்டிவிட்டோம். ஏனென்றால் நான்கள் பழைய சிம்கார்டையே உபயோகிக்க விரும்பினோம்.


நீங்கள் நினைக்கலாம் Internet connection இல்லாமல் எப்படி Map பார்க்க முடிந்தது என்று. அங்கு தான் நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம். எங்களுக்கு தெரியாது GPRS Automatically connect ஆகும் என்று. அதனால் நாங்களும் எப்படி internet Connection இல்லாமல் open ஆகுது என்று யோசித்துக்கொண்டே பயன்படுத்தி முடித்துவிட்டோம்.


முதல் மாத பில் என் நன்பருக்கு முதலில் வந்தது. அவருக்கு வந்த தொகை $402(சிங்கப்பூர் டாலர்). அதாவது 14000 ரூபாய். இதில் இணையம் பயன்ப்டுத்தியதற்க்காக S$ 310. எனக்கு வந்ததோ மொத்தம் 190 சிங்கபூர் டாலர், இதில் இணையம்  பயன்ப்டுத்தியதற்க்காக மட்டும் 100 சிங்கப்பூர் டாலர் . ஆனால் அந்த கைப்பெசியின் மொத்த மதிப்பு 360 சிங்கப்பூர் டாலர் மட்டுமே.


 கட்ட வேண்டிய தொகையை பார்த்ததும் நானும் நண்பரும் ரொம்பவே அதிர்ச்சியடைந்தோம். பிறகு Customer Care-க்கு அழைத்து கேட்டால் அவர்கள் கூறினார்கள்  நாங்கள் GPRS உபயோகப்படுத்தியிருப்பதை பற்றி.


எனவே நன்பர்களே உங்களுக்கும் இதுபோல நடந்துவிடக்கூடாது என்பது தான் இந்த பதிவின் நோக்கம். நன்றி

Saturday 23 July, 2011

மனிதாபிமாணம், இன்னும் எங்கோ ஒரு மூளையில் இருக்கத்தான் செய்கிறது !!!(வீடியோ இணைப்பு)

       நான் படித்த கல்லூரியில் எனக்கு ஜூனியராக படித்த மாணவன் மனிதாபிமாணத்தை பற்றி ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார், அந்த படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. 


      மனிதாபிமாணம் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூளையில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது இந்த குறும்படம்.




வயதான பெரியவர் ஒருவர் ரோட்டில் நடந்து செல்கிறார். நல்ல வெய்யில் நேரம். அந்த நேரத்தில் அந்த வழியே வரும் சில இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோரிடம் இவரை ஏற்றிக்கொள்ளுமாறு கேட்கிறார்.


ஆனால் அவர்களோ இவரை ஏற்றாமல் சென்றுவிடுகின்றார்கள். பிறகு மயக்கமடைந்து கிடந்தவரை மூன்று சக்கரத்தில் வரும் ஒரு ஊனமுற்ற பையன் அழைத்து செல்கிறான். காரில் செல்வோருக்கும், மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கும் இல்லாத இரக்க குணம் மூன்று சக்கர சைக்கிளில் செல்லும் பையனுக்கு இருக்கிறது என்பதை சொல்வது தான் இந்த படத்தின் கதை. 


மனதை வருடும் இந்த குறும்படத்திற்கு பின்னனி இசை நம்மை மெய்மறக்க வைக்கிறது. ஓளிப்பதிவு மிகவும் நன்றாகவும் நேர்த்தியாகவும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.  

Thursday 21 July, 2011

சிங்கப்பூர் சூதாட்டக்கூடம் (CASINO) ஒரு பார்வை

உலக அளவில் சூதாட்டத்தின் (காசினோ) அதிகப்படி வருமானம் கிடைக்கும் ஸ்பாட், Macau (ஹாங்காங்). ஆனால்,  அங்கிருந்து 5 மணிநேர விமானப் பயணத்தில் உள்ள ஊர் தான் சிங்கப்பூர். இங்கு உள்ள (casino) பற்றி பார்ப்போம்.


மரீனா பே சான்ட்ஸ்( Marina Bay) கசீனோ, சிங்கப்பூரிலுள்ள இரு முக்கிய சூதாட்டக்கூடங்களில் ஒன்று. இது அமெரிக்க முதலீடு. லாஸ் வேகஸ் சான்ட்ஸின் ஆசியப் பதிப்பு.  இரண்டாவது காசினோ, ரிசாட்ஸ்(Resorts World)  வேர்ல்ட் சிங்கப்பூர். இது மலேசிய முதலீடு.

இரண்டும், ஒன்றுடன் ஒன்று போட்டியிடவில்லை. மிக எளிமையாக, கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது எப்படி?


இரு நிறுவனங்களும் இலக்கு வைக்கும் கஸ்டமர்கள் வெவ்வேறு. மரீனா பே சான்ட்ஸ் இலக்கு வைப்பது, கன்வென்ஷன் ரக கஸ்டமர்களை. அதாவது எல்லாமே குரூப் கஸ்டமர்கள்தான் இவர்களது இலக்கு. பிசினெஸ் மீட்டிங்களுக்கான இடவசதி, ஹை -என்ட் ரெஸ்ட்டாரென்ட் என்று இவர்களது உலகம் தனியானது.

ஆனால், ரிசாட்ஸ் வேர்ல்ட் இலக்கு வைப்பது குடும்பங்களை. இங்கு கன்வென்ஷன் குரூப்களைக் காண முடியாது. தீம் பார்க், அந்த விளையாட்டு. இந்த விளையாட்டு என்று குடும்பம் குடும்பமாகக் கவர்வதுதான் இவர்களது பாணி.


இப்படி தம்மிடையே போட்டியில்லாமல் கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கி்ட்டுக் கொள்ளும் வர்த்தகங்கள், மிக அபூர்வம். அதனால்தான் சிங்கப்பூரின் காசினோ மாடலைப் பின்பற்ற மற்றைய ஆசிய நாடுகள் விரும்புகின்றன.இரு நிறுவனங்களின் குறிக்கோளும் ஒன்றே. சிங்கப்பூர் என்ற நாட்டின் குறிக்கோளும் அதுவே. அது என்ன குறிக்கோள்? உல்லாசப் பயணிகளிடமிருந்து சைட்-ட்டராக்காகப் பணம் சம்பாதிப்பது. 

உதாரணமாக, அமெரிக்காவின் லாஸ் வேகஸை, அல்லது ஹாங்காங்கின் மக்காவை எடுத்துக்கொண்டால் இந்த இரு இடங்களிலும் சூதாட்டம் சைட்-ட்ராக்காக இல்லை முக்கிய வர்த்தகமே அதுதான். அப்படியான தோற்றம், காலப்போக்கில் பல கஸ்டமர்களை அங்கிருந்து ஒதுங்க வைத்துவிடும்.

வேறு ஒரு நகரம் காசினோவுக்குப் புகழ்பெறத் தொடங்கினால், கஸ்டமர்களின் ஒருபகுதி அங்கே போய்விடுவார்கள். வேறு ஒரு பகுதியினருக்கு, இந்த செட்டப்பே அலுத்துப்போய், வேறு இடங்களை நாடத் தொடங்கிவிடுவார்கள். (கடந்த வருடம் லாஸ் வேகஸின் கசீனோ வருமானம், 2009ம் ஆண்டு வருமானத்தில் 74 சதவீதம்தான்!)

ஆனால், சிங்கப்பூருக்கு வருபவர்கள் சூதாட மாத்திரம் வருவதில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கின்றது சிங்கப்பூர் அரசு. வருபவர்களுக்கு மற்றைய ஆப்ஷன்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு டிப்பிக்கல் உல்லாசப் பயணியின் ‘பார்க்க வேண்டிய பட்டியலில்’ காசினோவும் ஒன்று.

பட்டியலில், இதைவிட வேறு விஷயங்களே அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றது.
இந்த இரு காசினோக்களுக்கும் வருட Turn over  3 பில்லியன் டாலர்.  இரு காசினோக்களும் சிங்கப்பூரில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டபின், உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்திருக்கின்றது.

நீங்கள் சிங்கப்பூர் வந்தால் மறவாமல் இந்த இரு சூதாட்ட கூடங்களுக்கும் வந்து செல்லுங்கள்.

Thursday 14 July, 2011

நீங்கள் தவறுதலாக அழித்துவிட்ட File - களை மீண்டும் பெறுவதற்கு

        நீங்கள் CD அல்லது Pen drive -ல் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு File - ஐ தவறுதலாக அழித்து விட்டீர்கள் என்றால் இழந்த File - களை மிக சுலபமாக மீட்கலாம்.
        இதற்கான Software பல இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் மிக சிறப்பு மிக்கது டிஸ்க் டிக்கர்(Disk Digger) மற்றும் ரெகுவா(Recuva).
           1. டிஸ்க் டிக்கர் (Disk Digger): கணிணியின் CD மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், கைத்தொலைபேசி Memory Card, டிஜிட்டல் கேமரா Memory card மற்றும் பிற Memory card களில் அழித்த File - களை மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
           Format செய்யப்பட்ட அல்லது சரியாக Format செய்யப்படாத செய்யப்படாத CD-களில் இருந்தும் File - களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு.
          2. ரெகுவா(Recuva): இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்து போன கோப்பு குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.

          எடுத்துக்காட்டாக Recycle Bin - லிருந்தும் அழிந்த File - களை மீண்டும் பெறலாம். இழந்த File - களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.

Wednesday 13 July, 2011

பென்டிரைவ் ( Pen drive) பற்றி தெரிந்ததும் தெரியாததும்

         பென்டிரைவ் என்பது இப்பொழுது கணிணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும்.
இதன் மூலம் நமக்கு தேவையான File -களை அல்லது புகைப்படங்களை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகபடுத்தப்படுகிறது.
இந்த பென்டிரைவ்களில் என்ன பிரச்சினை என்றால் இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணிணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்டிரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் (Software)  கீழே தரப்பட்டுள்ளன.
1. USB WRITE PROTECTOR: இந்த மென்பொருள் உங்களுடைய பென்டிரைவ்களில் உள்ள  File -களை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த  File -களை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.
இதனால் உங்கள் பென்டிரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம் மற்றும் வைரசினால் இந்த பென்டிரைவ்களை கண்டறிய முடியவில்லை.
2. USB FIREWALL: பென்டிரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USBயில் இருந்து கணிணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.
ஏதேனும் வைரஸ் உங்கள் கணிணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.
3. PANDA USB VACCINATION TOOL: பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்டிரைவில் உள்ள autorun.inf  File -களை  முற்றிலுமாக தடைசெய்கிறது.
உங்கள் பென்டிரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான Short cut தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.
4. USB GUARDIAN: இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான  File -களை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.