About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Monday 25 July, 2011

சிங்கப்பூரில் 30 நிமிட இணையம் பயன்படுத்தி ரூ 3500 (S$100) பில் கட்டிய அப்பாவி

 நன்பர்களே இது எனக்கு நடந்த சம்பவம். அதை உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்களும் என்னைப்போல் ஏமாறாமல் இருப்பதற்காக.


நான் சிங்கபூரில் ஒரு நிறுவனத்தில் 6 ஆண்டுகளாக பணிபுரிகிறேன்.   எனக்கு கிடைப்பதோ சுமாரான சம்பளம் தான். அதனால் இதுவரை சாதாரண கைத்தொலைப்பேசியைதான் பயன்படுத்தி வந்தேன்.


என் நண்பரும் என்னை போலவே சாதாரண கைத்தொலைப்பேசி தான் வைத்திருந்தார். ஆகவே இருவரும் புதியதாக கைத்தொலைப்பேசி வாங்க முடிவெடுத்தோம்.


இருவரும் கைத்தொலைப்பேசி விற்கும் நிறுவனம் ஒன்றிற்கு சென்று ஆளுக்கு ஒரு 3G கைப்பேசி( SAMSUNG GALAXY ACE) யை 2 வருட ஒப்பந்தத்தில் வாங்கினோம். ஆனால் அதில் இணைய சேவை (Internet Connection) வேண்டாம் என்ற ஒப்பந்தத்தின் பேரில் கூறி கைப்பேசியை வாங்கி வந்துவிட்டோம்.


கைப்பேசி வாங்கிய ஆர்வத்தில் அதில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை நாம் எல்லோரும் ஆர்வமாக செயல்படுத்தி பார்ப்போம். அப்படி நாங்களும் Map- ஐ திறந்து அதில் நாம் எங்கு இருக்கிறோம் நம் வீடு எங்கு இறுக்கிறது என சுமார் 30 நிமிடம் பயன்படுத்தினோம்.


என் நன்பர் என்னைவிட கொஞ்சம் அதிக நேரம் பயன்படுத்தினார். பிறகு இருவருமே அந்த Mobile-லில் உள்ள SIM Card-ஐ கழட்டிவிட்டோம். ஏனென்றால் நான்கள் பழைய சிம்கார்டையே உபயோகிக்க விரும்பினோம்.


நீங்கள் நினைக்கலாம் Internet connection இல்லாமல் எப்படி Map பார்க்க முடிந்தது என்று. அங்கு தான் நாங்கள் தெரியாமல் தவறு செய்து விட்டோம். எங்களுக்கு தெரியாது GPRS Automatically connect ஆகும் என்று. அதனால் நாங்களும் எப்படி internet Connection இல்லாமல் open ஆகுது என்று யோசித்துக்கொண்டே பயன்படுத்தி முடித்துவிட்டோம்.


முதல் மாத பில் என் நன்பருக்கு முதலில் வந்தது. அவருக்கு வந்த தொகை $402(சிங்கப்பூர் டாலர்). அதாவது 14000 ரூபாய். இதில் இணையம் பயன்ப்டுத்தியதற்க்காக S$ 310. எனக்கு வந்ததோ மொத்தம் 190 சிங்கபூர் டாலர், இதில் இணையம்  பயன்ப்டுத்தியதற்க்காக மட்டும் 100 சிங்கப்பூர் டாலர் . ஆனால் அந்த கைப்பெசியின் மொத்த மதிப்பு 360 சிங்கப்பூர் டாலர் மட்டுமே.


 கட்ட வேண்டிய தொகையை பார்த்ததும் நானும் நண்பரும் ரொம்பவே அதிர்ச்சியடைந்தோம். பிறகு Customer Care-க்கு அழைத்து கேட்டால் அவர்கள் கூறினார்கள்  நாங்கள் GPRS உபயோகப்படுத்தியிருப்பதை பற்றி.


எனவே நன்பர்களே உங்களுக்கும் இதுபோல நடந்துவிடக்கூடாது என்பது தான் இந்த பதிவின் நோக்கம். நன்றி

3 comments:

  1. ஏமாற்றுதல் என்பது எங்கும் நிறைந்ததே!
    ஏமாறியதே தப்பு, ஏமாற்றியது தப்பல்ல என்பது தேசிய வியாதியாக உலகெங்கும்
    தொற்றி விட்டது. ஏமாற்றத் தெரிந்தவன் கெட்டிக்காரன், அது சாருவாக இருக்கலாம், நித்தியாக இருக்கலாம்.
    கூச்சநாச்சமில்லாமல் ஏமாற்றுகிறார்கள்.
    பிடுங்கிவிட்டார்களா? திரும்ப வாங்குவது இலகுவல்ல!
    ஒன்றுக்கு நூறு தரம் யோசித்தே ஆகவேண்டும். அவர்கள் கதவையும் பூட்டி திறப்பையும் விட்டுச் செல்லும்
    அதி புத்திசாலிப் பகற் கொள்ளையர்கள்.
    இதை ஒரு நல்ல படிப்பினையாகக் கொள்ளவும்.

    ReplyDelete
  2. YESS.....SURE.....

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே,

    தாங்கள் சொல்வதுபோன்று என் நண்பருக்கும் ஒருமுறை நிகழ்ந்துள்ளது, GPRS விசயத்தில் சற்று கவனமாகத்தான் இருக்க வேண்டும் சாதரண கைப்பேசிகளில் GPRS செட்டிங்க்ஸ் நாம் மேனுவலாக செய்தால்தான் இண்டர்நெட் கனெக்ட் ஆகும், ஆனால் நீங்கள் பயன்படுத்தியதுபோன்ற 3G வசதியுடைய கேலக்ஸி டேப்களில் ஆட்டோவாகவே இண்டர்நெட் கனெக்ட் ஆகும் அதை கவனிக்காமல்தான் நாம் தவறு செய்துவிடுகிறோம்....

    நண்பர்களுக்கு இதுபோன்று நிகழாமல் இருக்க உங்களுக்கு நேர்ந்த நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க