About Me
- காந்தி பனங்கூர்
- அரியலூர், தமிழ்நாடு, India
- உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.
Monday, 5 September 2011
நண்பரின் இழப்பு
நண்பர்களே இது ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவம்.
ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் தன்னுடன் ஒரே அக்காவுடன் பிறந்த நண்பர் ஒருவர் தன்னுடைய 19 வது வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் சொந்த ஊரில் இருந்தால் முன்னேற முடியாது என்பதால் எல்லோரைப்போலவும் வெளிநாட்டு கனவு அவருக்கும் வந்தது. அவரும் வெளி நாடு ( சிங்கப்பூர்) சென்றார்.
சிங்கப்பூரில் கிட்டதட்ட 11 வருடம் வேலை செய்தார். தனக்கு 27 வயதாக இருக்கும் போது சொந்தம் இல்லாத ஒருப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பணத்திற்க்காக 4 வருடம் சிங்கப்பூரில் தன் வாழ்க்கையை ஓட்டினார். திருமணத்திற்கு பிந்தைய இந்த 4 வருட சிங்கப்பூர் வாழ்க்கையின் போது அவரின் மனைவிக்கு குழந்தை உருவாகவில்லை. அதனால் தனது சிங்கப்பூர் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு 2008 ஆம் ஆண்டு கடைசியில் தாய் நாடான தமிழகம் நோக்கி புறப்பட்டார். 2009 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அவரின் மனைவி. எல்லா விசயங்களிலும் நன்றாக யோசித்து தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் இவர்.
அதே போலவே யோசித்து 2009-ல் சிறுதொழில் ஒன்றை தொடங்கினார். மினிவேன் வாடகைக்கும், கைத்தொலைப்பேசி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல், மீன் வளர்த்தல் போன்ற தொழில் நடத்தி வந்தார். தொழில் நன்றாக போனது. எல்லா செலவுகளும் போக வருடத்திற்கு 2 லட்சம் மீதம் பண்ண முடிந்தது. இது கிட்ட தட்ட சிங்கப்பூரில் சம்பாதிக்கும் சம்பாத்தியம் அளவுக்கு ஈடானது என்றே சொல்லலாம்.
இப்படி சந்தோசமாக போனவரின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடியுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் வழக்கம் போல தனது மொபைல் கடையை மூடிவிட்டு தனது மீன்குளத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக (இவருக்கு எலக்ட்ரிக்கல் வேலையும் தெரியும்) தனியாளாக போனவர் அங்கேயே மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார்.
இன்று இரவு கடையிலே தூங்கிவிட்டார் போல என்று நினைத்திருந்த மனைவிக்கு தெரியாது அவர் நிரந்தரமாக தூங்கிவிட்டார் என்பது. காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு அவரின் மனைவிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
11 வருடம் தாயை பிரிந்தும் 4 வருடம் மனைவியை பிரிந்தும் வாழ்ந்த அவருக்கு, தன் வாழ்க்கையின் வசந்தகாலம் ஆரம்பமாகும்போது இப்படி உலகத்தை விட்டே போய் விட்டாரே. எல்லோரிடத்திலும் சிரித்த முகத்தோடு பேசுபவர், வீண் வம்புக்கு போகாதவர், தாய்க்கு நல்ல பிள்ளையாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருந்த இவருக்கு ஏன் இப்படி நடந்தது. இப்போது இவரின் மனைவி இரண்டாவது முறையாக 7 மாத கற்பிணியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு யார்? வயதான மாமியார் இன்னும் எவ்வளவு காலம் இவருக்கு ஆதரவளிப்பார்.
ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் குறித்து, கடவுள் சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்த இவருக்கு நேர்ந்த கதியை பாருங்கள் நண்பர்களே. என்னத்த சொல்லி அழுவது, எப்படி மனதை தேற்றிக்கொள்வது என்றே தெரியாமல், மீளாத துக்கம் தாளாத சோகத்தில் நடுக்கடலில் சூறாவளியில் சிக்கிக்கொண்ட படகைப்போல தத்தளிக்கிறார்கள். கடவுளுக்கு கண்ணிருந்தால் இதுபோல இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளட்டும் (அ) பார்த்து பார்த்து நல்லவர்களையே கொல்லட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
kadavulukku kannillai enbathu unmai. illaiyenral en arumaiyana makanai, appalukkarra ,thuymaiyana oru punitha athmavai parippaaraa?) பார்த்து பார்த்து நல்லவர்களையே கொல்லட்டும்.am.athuthaan seykirar.antha kadavul.enenral nallavarkalthaan kelvi ketka maattarkal.
ReplyDeletekarthik amma
vijayanagar.blogspot.com
kalakarthik1411@gmail.com
கடவுளுக்கு கண்ணிருந்தால் இதுபோல இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளட்டும் (அ) பார்த்து பார்த்து நல்லவர்களையே கொல்லட்டும்.
ReplyDeleteவருத்தமாக இருக்கிறது நண்பா.
மனதை நெகிழச்செயகிறது..
ReplyDeleteமனதை வருந்த செய்தது நண்பா... நல்லவர்களுக்கு தானே சோதனை இந்த லோகத்தில்.. இதில் இயற்கையும் விதிவில்கல்லாமல் நம்மை வருந்த செய்கிறது....
ReplyDeleteமனதை வருடவைத்து விட்டீர்கள்.அந்த நண்பரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ReplyDeleteஅதிர்ச்சியில் எனக்கு வார்த்தைகளில்லை காந்தி....
ReplyDeleteஎன்ன சொல்லி எப்படி தேற்றுவது கர்ப்பிணிப்பெண் எதிர்க்காலம் கேள்விக்குறியாய் :( இரண்டு குழந்தைகளுடன் வயதான மாமியார்.. இனி இந்த குடும்பத்துக்கு யார் சம்பாதித்து கொடுப்பார் :( இனி அன்பை பகிர கடவுள் எந்த நல்ல உள்ளத்தை காண்பிப்பார்....
உங்கள் நண்பனின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன் காந்தி....
ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் குறித்து, கடவுள் சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்த இவருக்கு நேர்ந்த கதியை பாருங்கள்
ReplyDeleteமனதை நெகிழச்செயகிறது.
இழப்புக்கள் என்றாலே துயரம் நிறைந்தவைதான். உங்கள் நண்பரை இழந்த அவரது குடும்ப உறவுகளிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteநிச்சயம் கடவுளின் கருணை ஏதாவது ரூபத்தில் கிடைக்கும்.
கதையென்று சொன்னால் இது மிக சோகமான முடிவு
ReplyDeleteஎன்ச் சொல்லி பின்னூட்டமிட்டுவிட்டு வேறு வேலைகளைப்
பார்க்கலாம்.இது நேரடியாக வாழ்வைப் பற்றியதாக இருக்கையில்
என்ன சொல்வது ?
நண்பனின் ஆத்மா சந்தியடையட்டும் எனச் சொல்லலாம்
எப்படிச் சாந்தியடையும் ?
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ.......
ReplyDeleteஉங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும் .
அவர் குடும்பத்தினருக்கு .நின்மதி கிட்ட பிரார்த்திக்கின்றேன் .நன்றி பகிர்வுக்கு ..