About Me
- காந்தி பனங்கூர்
- அரியலூர், தமிழ்நாடு, India
- உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.
Thursday, 29 September 2011
ஏழைப்பெண்
மாதம் முடிந்தால் கையொப்பமிட்டு
சம்பளம் வாங்க எங்கப்பன்
ஒன்றும் படிக்கவில்லை
ஏர் உழுது அறுவடை செய்ய
எங்கப்பனுக்கு நிலமும் இல்லை
கூலி வேலை செய்யனும்னா
எங்கப்பனுக்கு குருதியும் குறைஞ்சுப்போச்சு
பார்க்க வரும் வரன்கள் எல்லாம்
பத்து சவரனாவது கேட்குறாங்க
இனிமேலும் இருக்க விரும்பவில்லை
எங்கப்பனுக்கு சுமையாக
இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
அழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே
Subscribe to:
Post Comments (Atom)
இன்னும் தான் தீரவில்லை இந்தக் கொடுமைகள்..
ReplyDeleteதங்கத்தின் முன் மனிதர்கள் மதிப்பிழந்துபோகிறார்கள்..
ReplyDeleteநான் படித்து இரசித்த கவிதை ஒன்று..
ReplyDeleteஎன் வீட்டுக்கு மாப்பிள்ளை
வீட்டார் வரும்போதே...
நாய் குரைத்துவிட்டது..
அவர்கள் வந்து
அதுவேண்டும்
இதுவேண்டும்
என்று பட்டியலிட்டபோதுதான்
எங்களுக்குப் புரிந்தது..
இவர்கள்..
கொள்ளைக் காரர்கள் என்று..
ஏழ்மையின் சோகம் உணர்த்தும் கவிதை நண்பரே
ReplyDeleteமனதை மட்டும் பார்க்கும் காலம் எப்பொழுது
நண்பர்களே, யாராவது இன்ட்லியில் இணைத்துவிடுங்கள். நன்றி.
ReplyDelete///முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteதங்கத்தின் முன் மனிதர்கள் மதிப்பிழந்துபோகிறார்கள்..///
எப்போது தீரும் தங்க மோகம்???
நீங்கள் ரசித்த கவிதை அருமை முனைவரே.
ஒவ்வோறு ஏழை வீட்டிலும் நடக்கும் சகிக்க முடியாத அவலம்....
ReplyDeleteஏழைப் பெண்களின் கண்ணீர் என்று தான் மாறுமோ...
நெகிழ வைக்கும் கவிதை
சுடும் கவிதை!
ReplyDeleteஇன்ட்லியில் இணைத்து விட்டேன் நண்பா!
ReplyDelete//M.R said...
ReplyDeleteஏழ்மையின் சோகம் உணர்த்தும் கவிதை நண்பரே
மனதை மட்டும் பார்க்கும் காலம் எப்பொழுது//
மனதை மட்டும் பார்க்கும் காலத்தை நிச்சயமாக நாம் பார்க்க முடியாது நண்பரே. கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.
கவிதை நெஞ்சை தொட்டது.. மனதில் சுட்டது
ReplyDelete// # கவிதை வீதி # சௌந்தர் said...
ReplyDeleteஒவ்வோறு ஏழை வீட்டிலும் நடக்கும் சகிக்க முடியாத அவலம்....
ஏழைப் பெண்களின் கண்ணீர் என்று தான் மாறுமோ...
நெகிழ வைக்கும் கவிதை//
ஒவ்வொரு ஆண்களும் மாறினால் இந்த நிலமை கண்டிப்பா மாறிடும் நண்பா. கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.
@ கோகுல்,
ReplyDeleteஇன்ட்லியில் இணைத்தமைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி கோகுல்.
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகவிதை நெஞ்சை தொட்டது.. மனதில் சுட்டது//
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி தல.
கல்வியிலும் அரசியலிலும் நாம் முன்னேற்றம் காணாதவரை இதுபோன்ற அவலங்கள் தொடரத்தான் செய்யும்
ReplyDeleteநல்லதொரு படைப்பு
ReplyDeleteநெஞ்சை உருக்கும் கவிதை.
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//அம்பலத்தார் said...
ReplyDeleteகல்வியிலும் அரசியலிலும் நாம் முன்னேற்றம் காணாதவரை இதுபோன்ற அவலங்கள் தொடரத்தான் செய்யும்//
சில படித்த ....களும் இப்படித்தான் இருக்கிறது சகோ.
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.
//Kannan said...
ReplyDeleteநெஞ்சை உருக்கும் கவிதை.
நன்றி,
கண்ணன் //
வாங்க கண்ணன், தங்களின் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.
அருமையான கவிதை நண்பா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமணம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி வகுக்காது என்ற உண்மை மிகவும் தாமதமாகவே சுடும்...
ReplyDeleteஅருமையான சொல்லாடல்
ReplyDelete//க.அசோக்குமார் said...
ReplyDeleteஅருமையான கவிதை நண்பா. வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி முனைவரே.
கவிதை கண்ணில் கண்ணீர் வர வச்சிடுச்சி, என்று தீரும் இந்த வரதட்சனை அவலம்...?
ReplyDeleteமனதை தொட்ட கவிதை இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கை.இருக்கின்றது.....சூப்பர் கவிதை
ReplyDelete//suryajeeva said...
ReplyDeleteதிருமணம் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழி வகுக்காது என்ற உண்மை மிகவும் தாமதமாகவே சுடும்...//
உங்கள் கருத்துடன் உடன்படுகிறென் தோழா, ஆனால், வாழ்வில் திருமணம் என்ற ஒன்று இல்லையென்றால், சுவையும் சுவாரஸ்யமும் இருக்காது தோழா.
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழா.
படித்து முடிக்கும் போது மனம் கனத்து விடுகிறது நண்பரே...
ReplyDeleteகவிதை அருமை...
வாழ்த்துகள்...
//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteகவிதை கண்ணில் கண்ணீர் வர வச்சிடுச்சி, என்று தீரும் இந்த வரதட்சனை அவலம்...? //
நாமும் னம்மை சுற்றியிருப்பவர்களும் மாறினால் கண்டிப்பாக இந்த நிலமை மாறிடும் நண்பா.
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.
///K.s.s.Rajh said...
ReplyDeleteமனதை தொட்ட கவிதை இப்படி எத்தனை பெண்களின் வாழ்க்கை.இருக்கின்றது.....சூப்பர் கவிதை///
மிக்க நன்றிங்க பாஸ்.
///ராஜா MVS said...
ReplyDeleteபடித்து முடிக்கும் போது மனம் கனத்து விடுகிறது நண்பரே...
கவிதை அருமை...
வாழ்த்துகள்...///
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா.
இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
ReplyDeleteஅழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே//
அருமையான வரிகள்..
மனதை நெகிழ வைத்த கவிதை...
///@ !* வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteஇறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
அழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே//
அருமையான வரிகள்..
மனதை நெகிழ வைத்த கவிதை...///
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க கருன்.
அழகான வார்த்தை நடை !
ReplyDeleteரசித்து எழுதி உள்ளீர்கள் .
மாப்ளை! கலக்குங்க !
ReplyDeleteஎங்கப்பன் !
என்ன தமிழ் !
இது நம்ம தமிழ் !
வழக்கு மொழி உங்கள்கு
வாக்க பட்டது.
வாழ்த்தக்கள்
இன்றைய அவல நிலையை அழகான கவிதையில் சாடி உள்ளீர் ..
ReplyDeleteபெரும்பான்மையான பெண்களின் நிலை இதுதான் இன்றைய சூழலில் ..
உணர வேண்டிய மனிதங்கள் இன்னும் பித்து பிடித்து அலையும் போதுதான் மனது வலிக்கிறது ...
நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணே
///யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
ReplyDeleteமாப்ளை! கலக்குங்க !
எங்கப்பன் !
என்ன தமிழ் !
இது நம்ம தமிழ் !
வழக்கு மொழி உங்கள்கு
வாக்க பட்டது.
வாழ்த்தக்கள் ///
எதோ நம்மால முடிஞ்சது. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க திரு யானைக்குட்டி @ ஞானேந்திரன்.
ஆமாம் மாப்ள, உங்க பெயர் வித்தியாசமா இருக்கே. அதனால அதற்கு பெயர்க்காரணம் அல்லது பெயர் விளக்கம் சொல்லியே ஆகனும்.
///அரசன் said...
ReplyDeleteஇன்றைய அவல நிலையை அழகான கவிதையில் சாடி உள்ளீர் ..
பெரும்பான்மையான பெண்களின் நிலை இதுதான் இன்றைய சூழலில் ..
உணர வேண்டிய மனிதங்கள் இன்னும் பித்து பிடித்து அலையும் போதுதான் மனது வலிக்கிறது ...
நல்ல படைப்புக்கு வாழ்த்துக்கள் அண்ணே///
எல்லாமே கால ஓட்டத்தில் மாறும்ன்னு நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம். கருத்துரைக்கு மிக்க நன்றி ராஜா.
திருமணத்திற்காக காத்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை இதை விட அழகாய் எளிமையாய் சொல்லி இருக்க முடியாது காந்தி....
ReplyDeleteசொத்தும் இல்லை... கவர்மெண்ட் வேலையும் இல்லை.... உழுது பிழைத்து பணம் சேர்க்க நிலமும் இல்லை... இனி எந்த தைரியத்தில் பெண்ணை கரை சேர்ப்பது? அதுவும் எப்போது? விடையில்லா கேள்வியாக கேள்விக்குறியாக அமைந்துவிட்ட தன் வாழ்க்கையை நினைத்து ஒரு பெண் வேதனையுடன் தன் உயிரை கூட விட தயாராகிவிட்டாள்.... அன்னையில்லா தன் வாழ்க்கை தன் வயது தன் கல்யாண ஆசை அப்பாவால் புரிந்துக்கொள்ள முடிந்தாலும் வசதி இல்லா நிலையில் பூமிக்கு பாரமாக இருக்கவிரும்பவில்லை என்று முடித்திருப்பது மனதை என்னவோ செய்கிறது....
பணம் இல்லைன்னா பெண்களின் நிலை இது தானா இறுதியில் :(
மிக அருமையான வரிகளில் அற்புதமான ஒரு கவிதை படைப்பு காந்தி.. அன்பு வாழ்த்துகள்பா..
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கவிதைகள் சூப்பர் நண்பா
ReplyDeleteஇந்த வரதட்சணைக் கொடுமை அழியாத.......!!!! மிகவும் மனதை நெகிழ வைதத்தது சகோ தங்கள் கவிதை வரிகள் .நன்றி பகிர்வுக்கு .
ReplyDeleteஅருமையான கவிதை
ReplyDeleteஎளிமையான சொற்களைக் கொண்டு
மிக வலிமையாகச் சொல்லப்பட்ட கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
இனிய இரவு வணக்கம் நண்பா,
ReplyDeleteநலமா?
வாழ்வில் ஏற்படும் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக தன்னைப் பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பாத பெண்..
திருமணச் சந்தையில் அதிக விலை பேசப்படும் வரதட்சணை காரணமாக வாழ வழியின்றித் தன் உயிரினை எடுக்கச் சொல்லி இறைவனிடம் இரஞ்சும் நிலையினைக் கவிதை சொல்லி நிற்கிறது.
வேதனையைச் சுமந்து வந்த வலி நிறைந்த வரிகள் நண்பா.
http://www.vandhemadharam.com/2010/10/vote-button_08.html
ReplyDeleteநண்பா,
இந்த இணைப்பில் சென்று தமிழ் மண ஓட்டுப் பட்டையினையும் பெற்று இணைக்கலாம் அல்லவா.
வரதட்சணை கொடுமையை எடுத்துரைத்த அருமையான கவிதை..
ReplyDeleteவாழ்த்துக்கள்
இன்றைய பெண்களின் நிலை இதுதான்,
ReplyDeleteஏழைப் பெண்கள் மட்டுமல்ல அந்தந்த
நிலைக்கேற்ப வரதட்சணையின் தாக்கத்தால்
புலம்புவோர் ஆயிரம் ஆயிரம்..
திருமணத்திற்கு பெருந்தடை விதிக்கும்
இதுபோன்ற சமுதாயக் கொடுமைகள்
அழிய வேண்டும்...
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வீணே மாய்வதற்கல்ல. வேண்டாம் இந்த அவலம். ஒவ்வொரு பெண்ணும் இப்படி இறப்பே என்று முடிவு எடுத்தால்.......ஆண்டு 2011. வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கக் கோழைகளாய் மாள்வதில் ஆவது ஒன்றுமில்லை. நிஜம் தாங்கிவந்த கவிதை வாழ்த்துகள்.
ReplyDeleteசுடும் கவிதை...சூடில்லாத சமூகம்...
ReplyDeleteஅருமை... அதுவும் அந்த பெண் என் காதில் சொல்வது போன்ற பிரமை...
ReplyDeleteசில நேரங்களில் ஊர் செல்லும்பாதையில் இருந்து மாறியும் செல்லலாம்... நம் நல் உள்ள முன்னோர்கள் எத்தனையோ வழிகாட்டியாக அமைந்திருக்கிறார்கள்.. அவர்களை பின்பற்றுவோம் பெண்ணே...
ReplyDelete// மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteமிக அருமையான வரிகளில் அற்புதமான ஒரு கவிதை படைப்பு காந்தி.. அன்பு வாழ்த்துகள்பா..//
வழக்கம் போல தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி அக்கா.
///Rathnavel said...
ReplyDeleteநல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.///
தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
//வைரை சதிஷ் said...
ReplyDeleteகவிதைகள் சூப்பர் நண்பா//
மிக்க நன்றி நண்பா...
//அம்பாளடியாள் said...
ReplyDeleteஇந்த வரதட்சணைக் கொடுமை அழியாத.......!!!! மிகவும் மனதை நெகிழ வைதத்தது சகோ தங்கள் கவிதை வரிகள் .நன்றி பகிர்வுக்கு .//
தங்கலின் ஆசீர்வாதம் கிட்டட்டும். தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.
///Ramani said...
ReplyDeleteஅருமையான கவிதை
எளிமையான சொற்களைக் கொண்டு
மிக வலிமையாகச் சொல்லப்பட்ட கவிதை
அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்///
தங்களின் தொடர் கருத்துரை என்னை ஊக்கப்படுத்துகிறது.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
///நிரூபன் said...
ReplyDeleteஇனிய இரவு வணக்கம் நண்பா,
நலமா?
வாழ்வில் ஏற்படும் பொருளாதாரக் கஷ்டம் காரணமாக தன்னைப் பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பாத பெண்..
திருமணச் சந்தையில் அதிக விலை பேசப்படும் வரதட்சணை காரணமாக வாழ வழியின்றித் தன் உயிரினை எடுக்கச் சொல்லி இறைவனிடம் இரஞ்சும் நிலையினைக் கவிதை சொல்லி நிற்கிறது.
வேதனையைச் சுமந்து வந்த வலி நிறைந்த வரிகள் நண்பா.///
நான் நலம், நீங்கள் நலமா நட்பே? தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.
தமிழ் மணம் ஓட்டுப்பட்டைக்காண HTML CODE ஐ இணைத்துவிட்டேன். ஆனாலும் ஓட்டுப்பட்டை வர மறுக்கிறது. என்ன பிரச்சினையென்று தெரியவில்லை.
//மதுரன் said...
ReplyDeleteவரதட்சணை கொடுமையை எடுத்துரைத்த அருமையான கவிதை..//
தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.
///மகேந்திரன் said...
ReplyDeleteஇன்றைய பெண்களின் நிலை இதுதான்,
ஏழைப் பெண்கள் மட்டுமல்ல அந்தந்த
நிலைக்கேற்ப வரதட்சணையின் தாக்கத்தால்
புலம்புவோர் ஆயிரம் ஆயிரம்..
திருமணத்திற்கு பெருந்தடை விதிக்கும்
இதுபோன்ற சமுதாயக் கொடுமைகள்
அழிய வேண்டும்...///
நீங்கள் சொல்வதுபோல அந்தந்த நிலைக்கேற்ப வரதட்சனையின் அளவுகோள் மாறுகிறது. ஆனால் கொஞ்சம் வசதியுள்ளோர் மாப்பிள்ள வீட்டில் கேட்கும் அளவில் முக்கால்வாசி கொடுத்து சரி செய்து விடுகிறார்கள். ஆனால் கொடுக்க ஒன்றுமே இல்லாத என் கவிதையின் நாயகி என்ன செய்வாள்?
இந்த கொடுமைகள் அழிய வேண்டும் அல்லது அவற்றை நாம் அழிக்க வேண்டும்.
///சந்திரகௌரி said...
ReplyDeleteவாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வீணே மாய்வதற்கல்ல. வேண்டாம் இந்த அவலம். ஒவ்வொரு பெண்ணும் இப்படி இறப்பே என்று முடிவு எடுத்தால்.......ஆண்டு 2011. வாழ்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கக் கோழைகளாய் மாள்வதில் ஆவது ஒன்றுமில்லை. நிஜம் தாங்கிவந்த கவிதை வாழ்த்துகள்.///
படித்த பெண்கள் எப்படியும் எங்கும் வாழமுடியும், படிக்காத கிராமத்து ஏழைகளின் நிலமை??????
தங்களின் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
///ரெவெரி said...
ReplyDeleteசுடும் கவிதை...சூடில்லாத சமூகம்...///
முடிந்த அளவு நம்மை சுற்றியுள்ளவர்களை நாம் மாற்ற வேண்டும் நண்பா. தங்களின் சூடான கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.
///மாய உலகம் said...
ReplyDeleteசில நேரங்களில் ஊர் செல்லும்பாதையில் இருந்து மாறியும் செல்லலாம்... நம் நல் உள்ள முன்னோர்கள் எத்தனையோ வழிகாட்டியாக அமைந்திருக்கிறார்கள்.. அவர்களை பின்பற்றுவோம் பெண்ணே...///
வாங்க ராஜேஷ், தங்களின் தொடர் வருகைக்கு மிக்க நன்றிங்க.
குக்கிராமத்து ஏழைப்பெண்களின், குறிப்பாக கல்வியறிவு எட்டாத பெண்களின் தற்கால நிலைமையை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வரிகள்.
ReplyDeleteபாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் காந்தி.
///சத்ரியன் said...
ReplyDeleteகுக்கிராமத்து ஏழைப்பெண்களின், குறிப்பாக கல்வியறிவு எட்டாத பெண்களின் தற்கால நிலைமையை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும் வரிகள்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் காந்தி.///
தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா.
கிராமங்களில் இன்னும் சில பெண்களை இப்படி பார்க்க முடிகிறது.இதவிட கொடுமை எப்படியாவது கஷ்டபட்டு கல்யாணம் செய்து வச்சபின்பும் போன ஒரு மாதத்திற்குள ஆயிரம் பிரச்சனையோடு வந்து நிற்கும்போது பெண்ணை பெற்றவரின் மனநிலை உலகின் மிகப்பெரிய கொடுமையானதாக இருக்கும்.
ReplyDeleteசமூகத்தின் அவலத்தை உணர்த்தும் அருமையான வரிகள்.மனம் கனத்துப்போகிறது.
ReplyDelete@thirumathi bs sridhar,
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.
// விமலன் said...
ReplyDeleteசமூகத்தின் அவலத்தை உணர்த்தும் அருமையான வரிகள்.மனம் கனத்துப்போகிறது.//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
அருமையான கவிதை! இனிய வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇன்றுதான் இதனைப் படித்தேன்
ReplyDeleteஇதயத்துள் கண்ணீர் வடித்தேன்
என்றுமே தீராக் மடமை
ஏழையாய் இருத்தல் கொடுமை
நன்றிங்கு சொன்னீர் எடுத்தே
நயமிக கவிதை படைத்தே
சென்றெட்டு திக்கும் காண
செப்பினீர் வாழ்க!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வலைப்பக்கம் காணோமே!
//மனோ சாமிநாதன் said...
ReplyDeleteஅருமையான கவிதை! இனிய வாழ்த்துக்கள்!!//
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அம்மா.
//புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteவலைப்பக்கம் காணோமே!//
கொஞ்சம் வேலைப்பளு. அதனால் வலைப்பக்கம் வர இயலவில்லை.
தங்கள் கருத்துரைக்கும் விசாரிப்புக்கும் மிக்க நன்றிங்க ஐயா.
//அம்பாளடியாள் said...
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் மிக்க நன்றி பகிர்வுக்கு ......//
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியான தீப ஒளி வாழ்த்துக்கள்.
நெகிழ வைக்கும் கவிதை
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சியான தீப ஒளி வாழ்த்துக்கள்.
அன்புநிறை நண்பரே
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
அருமையான வரிகள்.
ReplyDeleteமகேஷ்
மிக்க நன்றி தோழரே.
ReplyDeleteமேலும் மெருகேற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்னை.
அருமையான வரிகள்.
http://www.neerodai.com/2011/09/naavaranda-sorkkam-hell-poem-child.html-
ஏழைச் சிறுமியின் நாவறண்ட சொர்க்கம்
மகேஷ்
அருமையான வலிமிகுந்த வரிகள்...
ReplyDeleteமூகத்தின் அவலத்தை உணர்த்தும் அருமையான வரிகள்...நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com