About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 20 August, 2011

சிங்கப்பூரில் பேய் பூஜை

            சிங்கப்பூரில் இது பேய் மாதமாகும். அதாவது சீன மாதத்தில் ஏழாவது மாதம் பேய் மாதமாக கொண்டாடுவார்கள். சிங்கப்பூரில் உள்ள கிட்டதட்ட அனைத்து சிறிய, பெரிய நிறுவனகள் கடைகள் மற்றும் வீட்டமைப்பு பகுதிகளில் கூட இந்த பூஜை நடக்கும்.
                                                       
                                                     படம் : பழங்கள்

இந்த எழாவது மாதத்தில் தான் பேய்களுக்கான வாசல் திறந்திருக்குமாம். அப்போது தான் இந்த பேய்கள் எல்லாம் வெளியில் நடமாடுமாம். அதனால் தான் இந்த மாதத்தில் பூஜை செய்து பேய்களை சந்தோசப்படுத்துகிறார்கள்.

                                      படம் : முழுசாக பொறித்த பன்றி

நம்ம ஊரில் பேய் பிடித்திருந்தால், அவர்களுக்கு பேய் விரட்டும் போது மந்திரவாதி உனக்கு என்ன வேனும்னு கேட்டு வாங்கிட்டு போ என்பார்கள். அது ஆண் பேயாக இருந்தால் சாராயம், வேட்டி சட்டை என கேட்கும், பெண் பேயாக இருந்தால் சேலை, பூ, வலையல், பொட்டு என கேட்கும்.  அதுபோல இந்த பேய்களுக்கு பிடித்ததை வாங்கி வைத்து படைப்பார்கள்.

                                             படம் : பேப்பர் எரித்தல்

இங்கு ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மதுபானம் (பீர்) மற்றும் பன்றி போன்றவை வைத்து படைப்பார்கள். முழுப்பன்றியை அப்படியே எண்ணெயில் பொறித்து வைத்திருப்பார்கள். சீனர்கள் பன்றியை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பிறகு பேப்பர் எரித்தல் முக்கியமாக இடம்பெற்றிருக்கும். மேலே உள்ளது போன்று அடுக்கி பிறகு அதை எரிப்பார்கள். அதன் பிறகு சாப்பாடும் உண்டு.

                                                 
பேய்க்கு படைத்தாலும், சாமிக்கு படைத்தாலும் சாப்பிடுவது என்னவோ நாம் தான்.



11 comments:

  1. அட வித்தியாசமா இருக்கே?

    ReplyDelete
  2. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அட வித்தியாசமா இருக்கே? //

    ஆமாம் நண்பா. இது போல் தான் இங்கு நடக்கிறது.
    தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  3. //ரியாஸ் அஹமது said...
    அட கொடுமை ...//

    இதுக்கு நம்ம மக்களே பரவாயில்லை சகோ.

    ReplyDelete
  4. முழு பன்றிக்காக பேய் வந்தாலும் வரும்.

    ReplyDelete
  5. // தமிழ்வாசி - Prakash said...
    முழு பன்றிக்காக பேய் வந்தாலும் வரும்.//

    தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  6. வித்தியாசமான பதிவு.
    நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  7. // Rathnavel said...
    வித்தியாசமான பதிவு.
    நன்றி.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html//

    தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. பேய் என்றால் பேயல்ல.........அவர்களின் முன்னோர்களுக்கு படையல் போட்டு செய்கின்றார்கள்.

    முன்னோர்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியாது? அதனால், பழங்கள், பலவகையான சாப்பாடு, சாராயம், பீர், சுருட்டு, பன்றி சீனர்களின் முக்கிய உணவுகளில் ஒன்று, அதனால் பன்றி என்று படைப்பார்கள்.

    அது வெறும் பேப்பர் அல்ல, பேப்பர் பணம்.

    இத்தனை படைத்தாலும்,முன்னோர்களின் அனுமதி இல்லாமல் சாப்பிட மாட்டார்கள்.காசை சுண்டிவிட்டு அனுமதி கேட்பார்கள். சில நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் அனுமதி கிடைக்க.

    அவர்கள் முன்னோர்களை அவமதிக்கவில்லை.

    உங்கள் முன்னோர்களை நீங்கள் பேயாகப் பார்க்கின்றீர்கள்.

    ReplyDelete
  9. @ ராவணன்,

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  10. Titanium Fishing Pliers | TITanium Art & Crafts
    TITONIC STRIKING PLATINY GALAXY GALAXY GOLF STRIKING PLATINY titanium pipes GALAXY titanium body jewelry GOLF does titanium set off metal detectors STRIKING PLATINY titanium watch GALAXY titanium piercing jewelry GOLF STRIKING PLATINY GOLF STRIKING PLATINY GOLF STRIKING PLATINY GOLF STRIKING

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க