About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Friday 12 August, 2011

செக்ஸ் கல்வியின் அவசியம் பற்றிய ஒரு பார்வை

 நன்பர்களே, இன்றைய உலகில் செக்ஸ் கல்வியின் அவசியத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் தான் மிகுந்த சிரமமாக உள்ளது. நம் வீட்டில் பெற்றோருடனும், அக்கா தங்கையுடனும் ஒன்றாக உட்கார்ந்து ஒரு குத்துப்பாட்டு பார்க்க முடியாத நிலமையில் தான் நாம் உள்ளோம்.

பிறகு எப்படி செக்ஸ் பற்றிய விஷயங்களை நாம் நம் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ள போகிறோம். இந்த நிலைமை மாற வேண்டும். நான் +2 படிக்கும் போது எங்களுடைய ஆசிரியர் உயிரியியலில் பெண்களுக்கு வரும் மாதவிடாயை பற்றி வகுப்பு எடுக்கும் போது, மாணவிகளை வெளியில் அனுப்பிவிட்டு எங்களுக்கு பாடம் எடுத்தார்.

பிறகு மாணவிகளிடம் இதுபற்றியெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும், அதனால் இந்த பகுதையை நீங்களே படித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். ஒரு ஆசிரியரே இதுபோன்ற செக்ஸ் பற்றிய விஷயங்களை மாணவ மாணவிகள் இருக்கும் இடத்தில் தவிர்க்கும்போது, பெற்றோர்கள் எப்படி குழந்தைகளிடம் வெளிப்படுத்துவர்.

செக்ஸ் பற்றிய விஷயங்களை வெளிப்படையாக பேசுவதற்கு நாம் நம்மை பக்குவபடுத்திக்க வேண்டும், அப்போது தான் நம்முடைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை எடுத்துக்கூற முடியும்.

 நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் பார்த்தால் 6 வயது, 7 வயது சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை என்று படிக்கிறோம். இந்த மாதிரி நடந்துக்கொள்ளும் காமக்கொடூரங்கள் புதிதாக முளைத்து வருவதில்லை. நம் அக்கம் பக்கம் வீட்டில், அல்லது நம் வீட்டிற்கு அடிக்கடி வந்துபோகும் நபர்கள் தான்.

மேலை நாடுகளில், ஏன் சிங்கப்பூரிலும் இந்தமாதிரி சம்பவங்கள் நிறய நடக்கின்றன. அங்கு வீட்டிற்குள் இருக்கும் வளர்ப்பு தந்தைகளாலேயே பல குழந்தைகளின் வாழ்க்கை சூறையாடப்பட்டுவிடுகிறது. இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறும் போது அந்த குழந்தகளுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமலே நடந்து முடிந்து விடுகின்றன.

சிங்கப்பூரில் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு நாடகம் ஒளிபரப்புகிறார்கள். நம் நாட்டில் இது போன்ற சமூக விழிப்புணர்வுள்ள நாடகம் எடுப்பதில் ஒருவரும் அக்கறை காட்டுவதில்லை.

அதனால் நாம் தான் நம் குழந்தைகளிடம் எந்த மாதிரி தொடுதல் சரியானது, எது தவறானது என்பதை சொல்லிக்கொடுத்து வளர்க்கனும். இந்த வீடியோவை பாருங்கள் எவ்வளவு எளிதாக சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று.



எந்த மாதிரி தொடுதல் சரி, எந்த தொடுதல் தவறு என்றும் அது எந்த சூழ்நிலையில் நடந்தால் சரி, தவறு என்பதையும், அப்படி மற்றவர்கள் தவறாக
நடக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும் அழகாக சொல்லிக்கொடுக்கிறார்.

ஒவ்வொரு பெற்றோடும் தங்கள் பிள்ளைகளை நண்பர்களாக நினைத்து அவர்களிடம் மனம்விட்டு செக்ஸ் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பகிர்ந்துகொண்டால், நம் பிள்ளகளுக்கு பாதுகாப்பும், பெற்றோர் பிள்ளைகளுக்குள்ள உறவும் மேம்படும்.

செக்ஸ் கல்வியை கற்றுக்கொடுங்கள், காமக்கொடூரன்களிடம் இருந்து பிள்ளைகளை காப்பாற்றுங்கள்.


4 comments:

  1. மிக மிக பயனுள்ள பதிவு
    முதலில் இந்த வீடியோ காட்சியைப் பார்த்து
    பெற்றோர்கள்/ பெரியவர்கள் புரிந்து கொள்ள
    முயல வேண்டும்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Ramani sir,

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  3. பனங்கூர் காந்தி அவர்களுக்கு நன்றிகள் பல! பெட்டகம் வலைப்பூ உங்களுக்கு நாளும் உதவும். அன்புடன் முஹம்மது அலி

    ReplyDelete
  4. // Mohamed Ali Blog said...
    பனங்கூர் காந்தி அவர்களுக்கு நன்றிகள் பல! பெட்டகம் வலைப்பூ உங்களுக்கு நாளும் உதவும். அன்புடன் முஹம்மது அலி //

    தங்கள் வருகைக்கு நன்றி. கண்டிப்பாக பெட்டகம் பக்கம் வருகிறேன்.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க