About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Friday 23 September, 2011

உங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க

உங்கள் ஊரின் மேப்பை உங்கள் ப்ளாக்கில் கூகுள் வழியாக இணைக்கலாம். ஆனால் கூகுள் மேப்பை இணைக்கும் போது மேப்பின் அளவை தேவையான அளவிற்கு கூட்டி குறைக்க முடிய வில்லை. எனவே wikimapia.org  என்ற முகவரிக்கு சென்று நீங்கள் Sign Up செய்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் Id யை கொடுத்து Sign In செய்துக்கொள்ளுங்கள். பின்பு மேப்பில் உங்கள் ஊர் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.

அங்கு உங்கள் வீட்டை கூட பார்க்க முடியும். பின்பு மேப்பில் உள்ள Add place ல் க்ளிக் செய்து உங்கள் ஊர் இருக்கும் இடம் அல்லது உங்கள் வீடு இருக்கும் இடத்தை குறியுங்கள். அதில் உங்கள் வீட்டின் பெயரையும் கூட எழுதலாம். கீழே இருப்பது போன்று.


அதன்பின் மேப்பில் உங்கள் Id யை க்ளிக் செய்தால் Map on your page என்ற ஐகானை தேர்வு செய்யுங்கள்.  Map on your page யை க்ளிக் செய்ததும் சதுரமான பெட்டி ஒன்று உங்கள் மேப்பில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று. தோன்றும். அதை நீங்கள் தேவையான இடத்திற்கு மாற்றியும் தேவையான அளவிற்கு சரி செய்தும் கொள்ளலாம். 


தேவையான இடத்தை தேர்வு செய்த பின்பு தேர்வு செய்த இடத்திற்க்காண HTML CODE யை காபி செய்து உங்கள் Dashbord ல் உள்ள Design என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள். பின்பு add gadget ஐ க்ளிக் செய்து Html java script ற்கு சென்று இங்கு பேஸ்ட் செய்த பின் Save பண்ணுங்கள். 



அவ்வளவு தான். இப்போது உங்கள் வீட்டின் மேப் உங்கள் ப்ளாக்கில் இணைக்கப்பட்டிருக்கும். 

49 comments:

  1. நல்ல தகவல்...........ஆனா.இனைச்சுட்டு அப்பறம் யாரு..துன்பப்படுறது..ஹி.ஹி.ஹி.ஹி

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா, ஏன் பாஸ், வீடு தேடி வந்து அடிப்பாங்கன்னு பயமா?

    கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு
    எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி
    விளக்கி இருக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நீங்க எவ்வளவு சொன்னாலும் நான் எங்க ஊரை காட்டிக் கொடுக்க மாட்டேங்க...

    எற்கனவே எனக்கு எதிரா பாகிஸ்தான் சதி செய்ய காத்துகிட்டு இருக்கு...

    ReplyDelete
  5. பதிவர்களுக்கு தேவையான தகவல்..

    நன்றி...

    ReplyDelete
  6. @ Mr.Ramani,

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  7. ///# கவிதை வீதி # சௌந்தர் said...
    நீங்க எவ்வளவு சொன்னாலும் நான் எங்க ஊரை காட்டிக் கொடுக்க மாட்டேங்க...

    எற்கனவே எனக்கு எதிரா பாகிஸ்தான் சதி செய்ய காத்துகிட்டு இருக்கு...///

    இது தான் எங்க ஊரு, முடிந்தால் அடித்து பாருன்னு தில்லா நில்லுங்க நண்பா.

    தங்களின் ஜாலியான கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. @ Suryajeeva,

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழா

    ReplyDelete
  9. //Mohamed Faaique said...
    superb information. thnks a lot//

    Thanks for Comment Mr Mohamed Faaique.

    ReplyDelete
  10. சூப்பர் புதுசா இருக்கு

    ReplyDelete
  11. தேவையான பயனுள்ள பதிவு
    நண்பரே,
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. இவங்கல்லாம் சொல்ற மாதிரி பயமா தான் இருக்கு.நாம ஏதோ எழுத போய் வீடு தேடி வந்துட்டா?
    ஹிஹி.

    நிச்சயமா பயனுள்ள பகிர்வு.வீட்ல அப்பா அம்மா கிட்ட காட்டினேன்.சந்தோசப்பட்டாங்க!

    ReplyDelete
  13. சூப்பர் நண்பா... நல்ல தகவல் வாழ்த்துக்களுடன் நன்றி

    ReplyDelete
  14. வணக்கம் பாஸ்,
    நல்லதோர் தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நானும் என் வீட்டு மேப்பை இணைக்கலாம்...

    ஆனால் ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்தா எந்தப் பக்கம் ஓடி ஒளிப்பது?

    ReplyDelete
  15. hello maams where is my house.... in this post....only u r house..... i am crying...

    ReplyDelete
  16. @ கவி அழகன்

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  17. //மகேந்திரன் said...
    தேவையான பயனுள்ள பதிவு
    நண்பரே,
    பகிர்வுக்கு நன்றி.//

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. உங்களின் கவி வரிரிகள் கிராமத்து நடையில் இருப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பரே.

    ReplyDelete
  18. //stalin said...
    எங்க ஊரும் வாருமா

    தேங்க்ஸ் சார் .........//

    எல்லா ஊரும் தெரியும் ஸ்டாலின்.

    தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  19. //கோகுல் said...
    இவங்கல்லாம் சொல்ற மாதிரி பயமா தான் இருக்கு.நாம ஏதோ எழுத போய் வீடு தேடி வந்துட்டா?
    ஹிஹி.

    நிச்சயமா பயனுள்ள பகிர்வு.வீட்ல அப்பா அம்மா கிட்ட காட்டினேன்.சந்தோசப்பட்டாங்க!//

    ரொம்ப சந்தோசம் கோகுல். கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  20. //மாய உலகம் said...
    சூப்பர் நண்பா... நல்ல தகவல் வாழ்த்துக்களுடன் நன்றி//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  21. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    அருமை..//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  22. //நிரூபன் said...
    வணக்கம் பாஸ்,
    நல்லதோர் தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நானும் என் வீட்டு மேப்பை இணைக்கலாம்...

    ஆனால் ஆட்டோ வீட்டு வாசலுக்கு வந்தா எந்தப் பக்கம் ஓடி ஒளிப்பது?///

    ஹா ஹா ஹா, ஆட்டோ வீடுக்கு வந்தா, நீங்க அவங்களுக்கு விருந்து வச்சு அனுப்புங்க தலைவா.

    ReplyDelete
  23. //srithar said...
    hello maams where is my house.... in this post....only u r house..... i am crying...//

    அழாத மச்சான், உங்க வீடு தப்பான இடத்தில் இருந்தது. அதனால் அப்படியே தூக்கி கொண்டு போய் சரியான இடத்தில் வச்சுட்டேன். இப்போ போய்ட்டு பாரு மச்சான்.

    ReplyDelete
  24. //அமைதி அப்பா said...
    நல்ல தகவல்.
    நன்றி.//

    வாங்க சார், தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  25. அருமையான தகவல் பாஸ்...
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  26. //மதுரன் said...
    அருமையான தகவல் பாஸ்...
    பகிர்வுக்கு நன்றி//

    வாங்க பாஸ், கருத்துரைக்கு மிக்க நன்றி பாஸ்.

    ReplyDelete
  27. நூட்பமான பலவற்றை தருகின்றீர்
    பயன் படுத்துவோருக்கு நல்ல பதிவு

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. @ புலவர் சா இராமாநுசம்,

    தங்களின் மேலான வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  29. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்:.

    ReplyDelete
  30. எங்கள் ஊர் பெரிய ஊர் ஆனால் கூகுல் மேப்பில் இல்லை அதைவிட சிறிய ஊர் பெயர் எல்லாம் உள்ளது.எங்கள் ஊர் பெயரை பதிய என்ன செய்ய வேண்டும்.நண்பா விளக்கமளிக்கவேண்டும்

    ReplyDelete
  31. ///இராஜராஜேஸ்வரி said... 34
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்:.///

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  32. @ பாளை.தணிகா

    கூகுள் மேப்பில் சில ஊர் பெயர்கள் காமிக்கவில்லை என்பது உண்மை. அதனால் நீங்கள் wikimapia.org ல் முயற்சியுங்கள். கண்டிப்பாக இருக்கும். உங்கள் ஊர் பாளையப்பாடியா?

    ReplyDelete
  33. எல்லாரும் சொல்றதை போல.. கொஞ்சம் சூதானமாதான் இருக்கனும் பாஸ்.. ஆனா என்னோட வீடு தேடி வரவங்களுக்கு டங்குவாறு அந்துரும்.. அவ்ளோ கஷ்டமாக்கும்..

    ReplyDelete
  34. //குடிமகன் said...
    எல்லாரும் சொல்றதை போல.. கொஞ்சம் சூதானமாதான் இருக்கனும் பாஸ்.. ஆனா என்னோட வீடு தேடி வரவங்களுக்கு டங்குவாறு அந்துரும்.. அவ்ளோ கஷ்டமாக்கும்..//

    அப்புறம் என்ன இணைச்சிட வேண்டியது தானே.

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  35. //முனைவர்.இரா.குணசீலன் said...
    நல்ல குறிப்பு நண்பா..//

    வாங்க முனைவரே....

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. மாப்ள தகவல் பகிர்வுக்கு நன்றிய்யா!

    ReplyDelete
  38. நல்ல தகவல் நண்பரே

    என் வீட்ட தனியா காமிக்கனுமா வேண்டாமே .

    உங்கள் வீட்டிலிருந்து இரண்டு மணி நேர டிராவல் தான்
    என் வீட்டிற்கு .

    அதனால உங்க வீட மத்தவங்க பார்த்தாலே போதும்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  39. எங்க ஊரை வலை வீசி தேடிட்டிருக்கேன் நண்பரே..

    பக்கத்துக்கு ஊரு தெரியுது...

    அதை போடலாம்...சாதி சண்டைல நம்ம வலையை அறுத்துருவாங்களே...-:)

    ReplyDelete
  40. @ M.R,

    எங்க வீட்டை பார்த்தா உங்க வீட்டை பார்த்தது மாதிரி தானே நண்பா.

    தங்களின் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  41. ///ரெவெரி said...
    எங்க ஊரை வலை வீசி தேடிட்டிருக்கேன் நண்பரே..

    பக்கத்துக்கு ஊரு தெரியுது...

    அதை போடலாம்...சாதி சண்டைல நம்ம வலையை அறுத்துருவாங்களே...-:)///

    உங்க வலையில எப்படியும் உங்க ஊர் சிக்கிடும் நண்பரே.

    தங்களின் மீள்வருகைக்கு மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  42. தகவலிற்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  43. பயனுள்ள தகவல்

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க