About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Tuesday 20 September, 2011

மூடநம்பிக்கை எப்போது ஒழியும்?


இந்த பதிவு மூடநம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பற்றியது. மூடநம்பிக்கையுடையோர் படிக்க வேண்டாம்.

நம் நாட்டில் இந்துக்கள் முக்கால்வாசி பேருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பிள்ளை பிறந்ததும் பெயர் சூட்டுதல், பள்ளிக்கு சேர்த்தல், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெண்வீடு பார்க்க செல்லுதல் (அ) மாப்பிளை வீடு பார்க்க செல்லுதல், திருமண நாள், முதலிரவு நாள், வீடு கட்ட மனை முகூர்த்தம் நாள், குடிபுகுதல் நாள் என ஒவ்வொன்றுக்கும் நாள் பார்த்து ஜாதகம் பார்த்து தான் செய்கிறார்கள்.

அப்படி பார்த்து பார்த்து செய்யும் அனைத்து குடும்பங்களும் சந்தோசமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கிறார்களா? இல்லை என்று தான் சொல்லுவேன்.


மூடநம்பிக்கை சம்பவம் 1.

சுபமுகூர்த்த நாளில் முகூர்த்தம் செய்து  வீடு கட்ட ஆரம்பித்து, நல்ல முறையில் வீட்டை கட்டி முடித்தார்கள். கிட்ட தட்ட 5 அல்லது 6 வருடமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்போ அந்த வீட்டு பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குதாம். அதனால் பூசாரியை கூட்டி வந்து பேய் ஓட்டினார்கள். அப்பவும் சரியாக வரல. அதனால் அவர்கள் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தார்கள். இன்னும் 2 மாதத்திற்கு வீட்டுக்கு கிரகம் சரியில்லை அதனால் வேறு வீட்டில் 2 மாதம் குடியிருங்கள் என்கிறார். 


மூடநம்பிக்கை சம்பவம் 2.

என் நண்பனின் அக்காவுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்கு வீட்டை விட்டு கிளம்பினார்கள், அப்போது ஒரு பூனை குறுக்கே வந்தது. அதனால் அந்த வரன் வேண்டாம் என்று சொல்லி விட்டார் நண்பனின் அப்பா. ஆனால் அவருக்கு அந்த மாப்பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் ரொம்ப பிடித்திருந்தது. இருந்தும் பூனை குறுக்கே வந்ததால் அந்த வரனை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

மூடநம்பிக்கை சம்பவம் 3.

 ஒருவருக்கு பயங்கர வயிற்று வலி. ஏன் ஆஸ்பத்திரிக்கு போக வில்லைன்னு கேட்டால் இன்னக்கி நாள் சரியில்லை என்றும் அப்படி மீறி போனால் இவர் உயிருக்கு ஆபத்தாகி விடுமாம். அதனால் உள்ளூர் மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு வரவைத்து வலி நிற்க ஊசிப்போட்டுக்கொண்டுள்ளார்.

மூடநம்பிக்கை சம்பவம் 4.

 நண்பர் ஒருவரிடம் அவசரமாக பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டிருந்தேன். காலையில் சரி என்றவர், மாலையில் நாளைக்கு வாங்கிக்கலாம் என்றார். ஏனென்றால் அன்று செவ்வாய் கிழமையாம்.

மழை வேண்டி கழுதையை திருமணம் செய்வது, குழந்தையை நரபலி கொடுப்பது என்று இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் எப்பவோ நடந்த சம்பவம் அல்ல . இப்பொழுதும் நடந்துகொண்டு இருப்பவை தான்.


திருமணம் செய்வதற்கு ஜாதகம் பார்த்தால் அது நம்பிக்கை. ஆனால் அந்த ஜாதகம் பார்ப்பதற்க்கு கூட அவர் வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் நல்ல நேரம் பார்த்து கிளம்புகிறார்களே அதை என்ன சொல்வது. அதை தான் மூடநம்பிக்கை என்கிறேன்.

மேலை நாடுகளில் ஜாதகம் பார்ப்பது கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் நம்மூரிலும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையோர் ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது கிடையாது. அவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இந்துக்களாகிய நம் மக்கள் தான் பையன் அல்லது பெண்ணை பிடிச்சிருந்தாலும் கூட ஜாதகம் சரியில்லையென்றால் ஒதுக்கி விடுகிறார்கள்.

மூட நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் 5 வருடத்திற்கு ஒருமுறை கிரகம் மாறுகிறதா ?

சகோதர சகோதரிகளே, இந்த பதிவின் நோக்கம் ஜோதிடம் பார்ப்பவர்களை புண்படுத்துவதற்காக அல்ல. ஆனால் ஜோதிடம் சொல்வது தான் நூறு சதவீதம் சரி என்று நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என்று தான் நான் கூறுகிறேன்.


32 comments:

  1. மற்றவர் நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது...
    இருந்தாலும் இந்த கலியுலகில் இவைகளை தவிர்த்தால் நல்லது...

    ReplyDelete
  2. மூட நம்பிக்கையை பற்றி செமையா சாடி இருக்கீங்க சூப்பர்....!!!

    ReplyDelete
  3. பட்டய கிளப்ப வேண்டியது தானே, மடமைகளை மோதி மிதித்து விடு பாப்பா என்று கூறிய பாரதியையும் நாம் மதிப்பதில்லை... தன மீதே நம்பிக்கை அற்றவர்கள் செய்யும் செயல் இது தோழா..

    ReplyDelete
  4. மூட நம்பிக்கை பற்றி..செமபதிவு....

    ReplyDelete
  5. மூட நம்பிக்கையாளர்கள் எப்போதும் திருந்தப்போவதில்லை...

    நல்ல சாட்டையடி பதிவு

    ReplyDelete
  6. தெளிவான பதிவு
    உதாரணங்களும் விள்க்கிப்போகும் விதமும் அருமை
    எதுவும் நம்பிக்கையானாலும் மூட நம்பிக்கையானாலும்
    அள்வோடு இருப்பதே நல்லது

    ReplyDelete
  7. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

    மருந்தை விருந்தாக்க முடியுமா....

    மேற்சொன்னவையே மூடநம்பிகைகளுக்கும்...

    ReplyDelete
  8. சபாஷ்........

    நம்மை முன்னேற விடாமல் தடுப்பதே இந்தகைய முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் தான்

    ReplyDelete
  9. ஆயிரம் முறை கூவி சொன்னாலும் நம் மக்களின் காதுகளில் சேராது அண்ணே ..
    அந்த அளவுக்கு ஊறி இருக்கிறார்கள் .. இதில் கொடுமை என்னவென்றால் நன்கு படித்த மக்களும் இதில் முதல் ஆளாக இருக்கின்றார்கள் அதான் வேதனை ..
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  10. மூட நம்பிக்கையை விட்டுத் தொலைக்கவும் நல்ல நேரம் பாப்பாங்க...

    ReplyDelete
  11. தெளிவான பதிவு. நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும், உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் தானும் குழம்பி, பிறரையும் குழப்பும் தன்மை உடையவர்களாக பலர் இருப்பது தான் இப்போதைய பிரச்சனையாக இருக்கிறது.
    முழுமையான கல்வியும், தன்னம்பிக்கையும் மட்டுமே மூட நம்பிக்கைகளின் பிடியிலிருந்து நம் மக்களை காப்பாற்ற இயலும்.

    ReplyDelete
  12. சுயநம்பிக்கை உள்ளவர்கள், தம்மை நம்புவார்கள், தன்னம்பிக்கைக்காரர்கள் மூடநம்பிக்கை கொள்ள மாட்டார்கள். சாத்திலமும் பார்க்க மாட்டார்கள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    மற்றவர் நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது...
    இருந்தாலும் இந்த கலியுலகில் இவைகளை தவிர்த்தால் நல்லது...//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  14. //MANO நாஞ்சில் மனோ said...
    மூட நம்பிக்கையை பற்றி செமையா சாடி இருக்கீங்க சூப்பர்....!!!//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி திரு நாஞ்சில் மனோ

    ReplyDelete
  15. //suryajeeva said...
    பட்டய கிளப்ப வேண்டியது தானே, மடமைகளை மோதி மிதித்து விடு பாப்பா என்று கூறிய பாரதியையும் நாம் மதிப்பதில்லை... தன மீதே நம்பிக்கை அற்றவர்கள் செய்யும் செயல் இது தோழா..//

    ஆமாம் தோழா, சில விசயங்களில் நேர்மறையாக சிந்தித்தால் அது நடக்க வாய்ப்புண்டு என்று சொல்வார்கள். அதற்காக நேர்மறையாக சிந்திப்பது எல்லாமே நடந்துவிடுமென நம்புகிறவர்கள் முன்னேறுவது கடினமே.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தோழா.

    ReplyDelete
  16. //K.s.s.Rajh said...
    மூட நம்பிக்கை பற்றி..செமபதிவு....//

    மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  17. //மதுரன் said...
    மூட நம்பிக்கையாளர்கள் எப்போதும் திருந்தப்போவதில்லை...

    நல்ல சாட்டையடி பதிவு//

    அவர்கள் திருந்தாததால் நமக்கும் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை நண்பா.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  18. //Ramani said...
    தெளிவான பதிவு
    உதாரணங்களும் விள்க்கிப்போகும் விதமும் அருமை
    எதுவும் நம்பிக்கையானாலும் மூட நம்பிக்கையானாலும்
    அள்வோடு இருப்பதே நல்லது//

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  19. //துபாய் ராஜா said...
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

    மருந்தை விருந்தாக்க முடியுமா....

    மேற்சொன்னவையே மூடநம்பிகைகளுக்கும்...//

    சரியா சொன்னீங்க சகோ.

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  20. //kamal said...
    செமபதிவு....//

    வாங்க கமல், எதாவது திட்டுவீங்கன்னு பார்த்தால், செமபதிவுன்னு சொல்லிட்டீங்க.

    தங்களின் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள் என் மொக்கை பதிவை வாசிக்க.

    ReplyDelete
  21. //ஆமினா said...
    சபாஷ்........

    நம்மை முன்னேற விடாமல் தடுப்பதே இந்தகைய முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் தான்//

    என்னைப் போலவே நீங்களும் ரொம்பவே சூடா இருக்கீங்க என்பது தங்களின் காட்டமான கருத்துரையில் தெரியுது.

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.

    ReplyDelete
  22. //அரசன் said...
    ஆயிரம் முறை கூவி சொன்னாலும் நம் மக்களின் காதுகளில் சேராது அண்ணே ..
    அந்த அளவுக்கு ஊறி இருக்கிறார்கள் .. இதில் கொடுமை என்னவென்றால் நன்கு படித்த மக்களும் இதில் முதல் ஆளாக இருக்கின்றார்கள் அதான் வேதனை ..
    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே//

    ஆமாம் ராஜா, படித்தவர்களும் இப்படி இருப்பதுதான் வேதனையா இருக்கு.

    ReplyDelete
  23. ///தமிழ்வாசி - Prakash said...
    மூட நம்பிக்கையை விட்டுத் தொலைக்கவும் நல்ல நேரம் பாப்பாங்க...///

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி பிரகாஷ்.

    ReplyDelete
  24. ///பாரத்... பாரதி... said...
    தெளிவான பதிவு. நம்பிக்கைக்கும், மூட நம்பிக்கைக்கும், உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியாமல் தானும் குழம்பி, பிறரையும் குழப்பும் தன்மை உடையவர்களாக பலர் இருப்பது தான் இப்போதைய பிரச்சனையாக இருக்கிறது.
    முழுமையான கல்வியும், தன்னம்பிக்கையும் மட்டுமே மூட நம்பிக்கைகளின் பிடியிலிருந்து நம் மக்களை காப்பாற்ற இயலும்.///

    முழுமையான கல்வி இருப்பவங்களும் இப்படிதான் இருக்காங்க. தன்னம்பிக்கை இருந்தால் மாறுவதற்கு வாய்ப்புள்ளதி சகோ.

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  25. //kovaikkavi said...
    சுயநம்பிக்கை உள்ளவர்கள், தம்மை நம்புவார்கள், தன்னம்பிக்கைக்காரர்கள் மூடநம்பிக்கை கொள்ள மாட்டார்கள். சாத்திலமும் பார்க்க மாட்டார்கள்.
    வேதா. இலங்காதிலகம்.///

    சரியா சொன்னீங்க அக்கா. தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  26. மூட நம்பிக்கையை பற்றி நல்லதொரு பதிவு செய்துள்ளீர். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. //க‌.அசோக்குமார் said...
    மூட நம்பிக்கையை பற்றி நல்லதொரு பதிவு செய்துள்ளீர். வாழ்த்துக்கள்.//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி முனைவரே.

    ReplyDelete
  28. மற்றவர் நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது...

    ஆனானும் நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  29. ஹை சவாசு புள்ள.....

    நல்லா அருமையா தான் சொல்லிக்கிட்டே வந்தீங்க.. உங்க கேள்வியும் நியாயமாவே இருந்திச்சு...... ஒப்புக்கொள்ளும்படியும் இருந்தது....

    ஜோதிடம் ஜாதகம் சகுனம் பார்ப்பது இதெல்லாம் அவரவர் நம்பிக்கை பொறுத்த விஷயம்....

    ஆனால் அது எதுவரை? அடுத்தவர் மனம் புண்படாதவரை....

    ஏன் இப்டி சொல்றேன்னு கேக்குறீங்க தானே? சொல்றேன் சொல்றேன்...

    பாதிக்கப்பட்டிருக்கேன்ல??

    சின்ன வயசுல கோவக்காரி, சண்டைக்காரி, முசுடு இப்படி எல்லா நல்லப்பெயரும் ஒன்னா அவார்ட் போல வாங்கின பிரஹஸ்பதி வேற யாருமில்லங்காணும் நானே தான்....

    என் தங்கை இதற்கு நேர் எதிர்..... அன்பு, அமைதி, அடக்கம், கருணை, கனிவு.... அதனால சின்னப்பிள்ளையில் இருந்தே எங்க பாட்டி ஆபிசுக்கு போகும்போது எதிர்ல எப்பவும் என் தங்கையை வரச்சொல்லி பார்த்துட்டு போவாங்க.

    நானே சண்டக்காரி எதையும் எடுத்து போட்டு உடைச்சிடுவேன்... இதை விட்டு வைப்பேனா? வேணும்னே எதிர்ல போய் போய் வருவேன் எங்க பாட்டி எதிர்ல.... அவங்களும் அத்தனை முறை வீட்டுக்குள் வந்து ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சிட்டு போவாங்க. அப்புறம் சலிச்சு என்னை சபிச்சிட்டு போய்ருவாங்க....

    இப்ப அப்படி இல்லை... சின்னப்ப ஒரு கோபம் எனக்கு.. என்னை இப்படி ராசி அடிப்படைல ஒதுக்குவது.....

    நமக்குள் இருக்கும் கெட்டதை எல்லாம் ஒதுக்கினாலே போதும் நம்க்குள் தெய்வம் குடிக்கொள்ளும்.. நமக்குள் தெய்வம் குடிக்கொண்டப்பின் மூடநம்பிக்கையாவது ஒன்றாவது?

    ஆனா கடைசி வரி அது என்னப்பா :) நச்.... நல்லா மண்டைல சுத்தில அடிக்கிற மாதிரி கேட்டுப்புட்டீங்க :)

    ரசிக்கவைத்த பகிர்வு காந்தி...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு காந்தி...

    ReplyDelete
  30. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    மற்றவர் நம்பிக்கையில் நாம் தலையிட முடியாது...

    ஆனானும் நல்லதொரு பதிவை தந்தமைக்கு நன்றிகள்..//

    மற்றவர் நம்பிக்கை என்பது நம்மை பாதிக்காதவரை தான், நம்மை பாதிக்கும் போது? அதற்கு உதாரணமாக, கருத்துரையில் அக்கா மஞ்சுபாஷினி விளக்கமாக கூறியிருக்காங்க.

    தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  31. @ அக்கா மஞ்சுபாஷினி,

    உங்க பாட்டி உங்க தங்கையை எதிர்ல வரசொல்லி தண்ணி குடிச்சிட்டு போவது போன்ற இன்னும் சில விசயங்கள் இருக்குது. அதையும் எழுதினால் பதிவு ரொம்ப பெருசாகிடும்னு தான் எழுதல.

    தங்களின் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றி அக்கா.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க