About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Thursday 21 July, 2011

சிங்கப்பூர் சூதாட்டக்கூடம் (CASINO) ஒரு பார்வை

உலக அளவில் சூதாட்டத்தின் (காசினோ) அதிகப்படி வருமானம் கிடைக்கும் ஸ்பாட், Macau (ஹாங்காங்). ஆனால்,  அங்கிருந்து 5 மணிநேர விமானப் பயணத்தில் உள்ள ஊர் தான் சிங்கப்பூர். இங்கு உள்ள (casino) பற்றி பார்ப்போம்.


மரீனா பே சான்ட்ஸ்( Marina Bay) கசீனோ, சிங்கப்பூரிலுள்ள இரு முக்கிய சூதாட்டக்கூடங்களில் ஒன்று. இது அமெரிக்க முதலீடு. லாஸ் வேகஸ் சான்ட்ஸின் ஆசியப் பதிப்பு.  இரண்டாவது காசினோ, ரிசாட்ஸ்(Resorts World)  வேர்ல்ட் சிங்கப்பூர். இது மலேசிய முதலீடு.

இரண்டும், ஒன்றுடன் ஒன்று போட்டியிடவில்லை. மிக எளிமையாக, கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள். அது எப்படி?


இரு நிறுவனங்களும் இலக்கு வைக்கும் கஸ்டமர்கள் வெவ்வேறு. மரீனா பே சான்ட்ஸ் இலக்கு வைப்பது, கன்வென்ஷன் ரக கஸ்டமர்களை. அதாவது எல்லாமே குரூப் கஸ்டமர்கள்தான் இவர்களது இலக்கு. பிசினெஸ் மீட்டிங்களுக்கான இடவசதி, ஹை -என்ட் ரெஸ்ட்டாரென்ட் என்று இவர்களது உலகம் தனியானது.

ஆனால், ரிசாட்ஸ் வேர்ல்ட் இலக்கு வைப்பது குடும்பங்களை. இங்கு கன்வென்ஷன் குரூப்களைக் காண முடியாது. தீம் பார்க், அந்த விளையாட்டு. இந்த விளையாட்டு என்று குடும்பம் குடும்பமாகக் கவர்வதுதான் இவர்களது பாணி.


இப்படி தம்மிடையே போட்டியில்லாமல் கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கி்ட்டுக் கொள்ளும் வர்த்தகங்கள், மிக அபூர்வம். அதனால்தான் சிங்கப்பூரின் காசினோ மாடலைப் பின்பற்ற மற்றைய ஆசிய நாடுகள் விரும்புகின்றன.இரு நிறுவனங்களின் குறிக்கோளும் ஒன்றே. சிங்கப்பூர் என்ற நாட்டின் குறிக்கோளும் அதுவே. அது என்ன குறிக்கோள்? உல்லாசப் பயணிகளிடமிருந்து சைட்-ட்டராக்காகப் பணம் சம்பாதிப்பது. 

உதாரணமாக, அமெரிக்காவின் லாஸ் வேகஸை, அல்லது ஹாங்காங்கின் மக்காவை எடுத்துக்கொண்டால் இந்த இரு இடங்களிலும் சூதாட்டம் சைட்-ட்ராக்காக இல்லை முக்கிய வர்த்தகமே அதுதான். அப்படியான தோற்றம், காலப்போக்கில் பல கஸ்டமர்களை அங்கிருந்து ஒதுங்க வைத்துவிடும்.

வேறு ஒரு நகரம் காசினோவுக்குப் புகழ்பெறத் தொடங்கினால், கஸ்டமர்களின் ஒருபகுதி அங்கே போய்விடுவார்கள். வேறு ஒரு பகுதியினருக்கு, இந்த செட்டப்பே அலுத்துப்போய், வேறு இடங்களை நாடத் தொடங்கிவிடுவார்கள். (கடந்த வருடம் லாஸ் வேகஸின் கசீனோ வருமானம், 2009ம் ஆண்டு வருமானத்தில் 74 சதவீதம்தான்!)

ஆனால், சிங்கப்பூருக்கு வருபவர்கள் சூதாட மாத்திரம் வருவதில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கின்றது சிங்கப்பூர் அரசு. வருபவர்களுக்கு மற்றைய ஆப்ஷன்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு டிப்பிக்கல் உல்லாசப் பயணியின் ‘பார்க்க வேண்டிய பட்டியலில்’ காசினோவும் ஒன்று.

பட்டியலில், இதைவிட வேறு விஷயங்களே அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றது.
இந்த இரு காசினோக்களுக்கும் வருட Turn over  3 பில்லியன் டாலர்.  இரு காசினோக்களும் சிங்கப்பூரில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டபின், உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்திருக்கின்றது.

நீங்கள் சிங்கப்பூர் வந்தால் மறவாமல் இந்த இரு சூதாட்ட கூடங்களுக்கும் வந்து செல்லுங்கள்.

4 comments:

  1. உங்கள் ப்ளாக் பார்க்க கலர் புல்லா இருக்கு! ரொம்ப அழகா இருக்கு பதிவும்தான்! நல்ல படங்களாக போட்டு அசத்திடீன்கள்! நன்றி!

    ReplyDelete
  2. உங்கள் ப்ளாக் பார்க்க கலர் புல்லா இருக்கு! ரொம்ப அழகா இருக்கு பதிவும்தான்! நல்ல படங்களாக போட்டு அசத்திடீன்கள்! நன்றி!

    please go to visit www.sinthikkavum.net

    ReplyDelete
  3. its very nice thank you. keep it up.

    please go to visit www.sinthikkavum.net

    ReplyDelete
  4. @ சிந்திக்கவும், என் தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி. உங்கள் தளத்தை ஏற்கனவே நானும் பார்வையிட்டுள்ளேன். தொடர்பில் இருங்கள். நன்றி

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க