About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 18 February, 2012

வெளிநாட்டு வாழ்க்கை மதில்மேல் பூனை.

 வணக்கம் நண்பர்களே, வெளி நாட்டுக்கு வரனும்னு நினைப்போர் இதைப் படிங்க அல்லது உங்கள் நண்பர் வெளி நாடு வரனும்னு நினைச்சா அவங்ககிட்ட சொல்லுங்க.

                                                               

  நான் சிங்கப்பூரில் வேலைப்பார்க்கிறேன். 6 வருடம் முடிந்து 7 வது வருடம் போய்க்கொண்டு இருக்கிறது. 4 வருடம் முடிந்ததும் சிங்கப்பூர் வேலையே வேண்டாம் என வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து விட்டேன். இந்த நாலு வருடத்தில் பல நண்பர்களுடைய தொடர்பு குறைந்தும் சில நண்பர்களுடைய தொடர்பு துண்டித்தும் போயின.

தொடர்பிலிருந்த ஒன்றிரண்டு நண்பர்களின் உதவியுடன் வேலைத்தேடி அலைந்தேன். 4 மாத அலைச்சலுக்குப் பிறகு ஒருவழியாக சென்னையில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்துவிட்டது, ஆனால் தங்குவது எப்படி? அதற்கு 3 நாட்கள் அலைந்த பிறகு ஒரு ரூம் வாடகைக்கு கிடைத்தது. வேலைக்கு சென்ற 1 வருடத்திற்குள் திருமணம் முடிந்தது. ஆனால் குடும்பம் நடத்தும் அளவிற்கு அங்கு சம்பளம் தரவில்லை. அதனால் மீண்டும் சிங்கப்பூர் வந்து விட்டேன்.

  முதல் தடவை சிங்கப்பூர் வராமல் நம்ம ஊரிலேயே இருந்திருந்தால் நம்ம ஊரிலேயே நல்ல சம்பளமும் நல்ல கம்பெனியிலும் வேலைக்கு சேர்ந்திருக்கலாம். மற்றும் பல நண்பர்களின் நட்பு கிடைத்திருக்கும், அவர்கள் மூலமாக பல நல்ல கம்பெனிகளுக்கு மாறுதலாகி போயிருக்கலாம்.

அதேபோல வெளி நாட்டில் வேலைபார்த்துவிட்டு நம்மூரில் வேலைதேடும் போது, வெளி நாட்டில் வேலைப்பார்த்ததால் நமக்கு நிறய தெரிந்திருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படி அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போது நமக்கு வேலை கிடைப்பதில்லை.

சரி, வெளி நாட்டிலேயே தங்கிவிடலாம் என்றால், இங்கு வாங்கும் சம்பளம் இங்கேயே செலவுக்குகூட பத்தாது. அப்புறம் எப்படி குடும்பத்துடன் சேர்ந்து இருப்பது. கண்டிப்பாக ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்ற சூழ் நிலையில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

 நண்பர்களே, இந்த மாதிரி நிலமையெல்லாம் வராமலும், சொந்த பந்தங்களுடனும் இருக்கனும் மற்றும் சந்தோசமாகவும் இருக்கனும் என்றால் நம்ம ஊரிலேயே தொடர்ந்து இருக்க முயற்சி செய்யுங்கள். நம்ம ஊரும் தொழில் துறையில் நல்ல வளர்ச்சியடைந்துக்கொண்டு வருகிறது. அதனால் நம்ம ஊரிலேயே வேலை செய்தால் சொந்த பந்தங்களின் விசேஷத்துக்குப் போகலாம், குடும்பத்துடன் பொங்கல் தீபாவளி கொண்டாடலாம். இன்னும் பல சந்தோசங்களை அனுபவிக்கலாம்.

இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக தான் இருக்கிறார்கள்.

27 comments:

  1. thambi....... neenga singapore vandha oru varudathileye vunmai therindhirukkumay ? you were too late

    ReplyDelete
  2. வாங்க காந்தி வாங்க
    ஏன் இவ்வளவு இடைவெளி..
    காத்து காத்து பூத்துப் போனேன்..

    உங்கள் பதிவைக் கண்டதும் மகிழ்ச்சி..

    சரியாச் சொன்னீங்க நண்பரே..
    எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சை தான்..
    வெளிநாடு போனால் கொஞ்ச நாள் வேலை பார்த்தால்
    போதும் அப்புறம் நம்ம ஊருக்கு வந்து நிம்மதியா இருக்கலாம்
    என்று நினைப்பவர்கள் இதை படிக்க வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் வேலைப்பளு மற்றும் மனைவி மகன் இங்கு வந்திருந்தனர். அதனால் வலைப்பக்கம் வரவில்லை. இனிமேல் தொடர்ந்து வர முடியுமென நம்புகிறேன். தங்களின் மேலான வரவுக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.

      Delete
  3. இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக தான் இருக்கிறார்கள்.

    சரியான கோணத்தில் அலசியிருக்கும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க

      Delete
  4. வணக்கம் அண்ணே ..
    நெடு நாட்களுக்கு பிறகு
    வந்து இருக்கின்றிர்கள் ..
    உங்களின் வாழ்வை உதாரணமாய் காட்டி
    உணர்த்திய விதம் சிறப்பு ..
    நானும் ஆரம்பித்தில் அப்படி எண்ணியவன் தான் என்னை திரு. கருணாகரசு
    அவர்கள் தான் அதன் மறுபக்கத்தை உணர்த்தியவர் ,. ஆதலால் கைவிட்டுவிட்டேன் ..
    நல்ல பகிர்வுக்கு நன்றிங்க அண்ணே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ராஜா. பரவாயில்லை நீங்க சரியான முடிவெடுத்து தப்பிச்சிட்டீங்க.

      Delete
  5. லடே ஆக வந்தாலும் நல்ல பதிவாக தந்துள்ளிர்கள்

    ReplyDelete
  6. அண்ணே நல்லா உணர்திடிங்க..வந்தாரே வாழ வைப்பது தமிழகம் தான் அண்ணே...

    நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...

    ReplyDelete
  7. என்னுடைய நேரத்துக்கு தகுந்த ஒருபதிவு.
    அபுதாபி வந்தபோது இந்த ஒரு விசாவுடன் ஓடி போய்விட வேண்டும் என்று நினைத்தேன்.
    நாளையுடன் இரண்டாவது விசா முடிகிறது (ஆறு வருடம் ). வாழ்க்கை சக்கரம் ஓடி கொண்டு இருக்கிறது.
    காலையில் அலுவலகத்துக்கு வந்துடன் நடந்தவற்றை நினைத்து பார்த்துகொண்டு இருந்தேன், அப்பொழுதான் உங்க பதிவை படிக்க வாயிப்பு கிடைத்தது.
    இன்னும் எத்தனை விசா அடிக்க வேண்டி வரும் என்று தெரியவில்லை கண்முன்னே இருக்கும் கடமைகளை நினைக்கும் பொழுது.
    அன்புடன்
    பத்மநாபன்

    ReplyDelete
  8. @ Padmanaban,
    என்ன பண்ணுவது அண்ணே, இது தான் நம்மை போன்ற நடுத்தர மக்களின் நிலமை. வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி அண்ணே.

    ReplyDelete
  9. வெளிநாட்டு மோகத்தில் இருப்போருக்கு சரியான பதிலாக இருக்கிறது தங்களின் இந்த பதிவு. உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் சகோதரரே! வருத்தமாக இருந்தாலும் உங்களை போன்றோர் இப்படி எடுத்து சொன்னால் மேலும் இது போன்றதொரு அவலநிலைமை மற்றவருக்கு ஏற்படாது. சீக்கிரம் நம் தாய்நாட்டிற்கு திரும்பி வந்து இங்கேயே தங்களின் வாழ்க்கை நல்லமுறையில் செடிலாக என் ப்ரார்த்தனைகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete
  10. தேவையான சிங்கப்பூர் பகிர்வு

    ReplyDelete
  11. email mulam pathivu perum sevaiyai eearpatuththinaal payanullathaaga irukkum.pathivil unmaiyaana karuththu ullathu.nandri.
    malaithural.blogspot.com

    ReplyDelete
  12. ஒரு அனுபவப் பகிர்வு .உண்மையை உரக்கச்
    சொன்னமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு .

    ReplyDelete
  13. பதிவு நெத்தி அடி...எல்லோரையும் சந்தோசப்படுத்துவது என்பது நடக்காத காரியம்...என்னவோ போங்க ஆரம்பிச்ச எடத்துல இருக்கறாப்லயே தான் இருக்கு....காலம் உருண்டு கொண்டு இருக்கிறது....பயணங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கு...நன்றி மாப்ளே

    ReplyDelete
  14. இப்பவாது நம்ம நாட்டோட பெருமைய உணரிந்திங்களே அதுவே போதும்......

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    வலைப்பூ தலையங்க அட்டவணை
    info@ezedcal.com
    http//www.ezedcal.com

    ReplyDelete
  15. இரண்டு மூன்று வருடம் சம்பாதித்து விட்டு பிறகு ஊரில் வந்து செட்டிலாகிடலாம் என்ற தப்பான கணக்கைப் போட்டு விடாதீர்கள் நண்பர்களே. அப்படி நினைத்து வெளி நாடு வந்தவர்கள் நிறயபேர் மதில்மேல் பூனையாக தான் இருக்கிறார்கள்.////


    8 வருசம் ஆச்சு..ஆனால் இப்போ பழகிடுச்சு...

    http://priyamudan-prabu.blogspot.com/2012/08/pothanur-singapore.html

    ReplyDelete
  16. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2015/01/3_22.html?showComment=1421884364302#c3407256640317110087
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. திருமதி மனோ சாமிநாதன் அவர்கள் தங்களது வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
  18. வணக்கம்!
    இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com
    (குழலின்னிசையினை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க