About Me
- காந்தி பனங்கூர்
- அரியலூர், தமிழ்நாடு, India
- உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.
Thursday, 29 September 2011
ஏழைப்பெண்
மாதம் முடிந்தால் கையொப்பமிட்டு
சம்பளம் வாங்க எங்கப்பன்
ஒன்றும் படிக்கவில்லை
ஏர் உழுது அறுவடை செய்ய
எங்கப்பனுக்கு நிலமும் இல்லை
கூலி வேலை செய்யனும்னா
எங்கப்பனுக்கு குருதியும் குறைஞ்சுப்போச்சு
பார்க்க வரும் வரன்கள் எல்லாம்
பத்து சவரனாவது கேட்குறாங்க
இனிமேலும் இருக்க விரும்பவில்லை
எங்கப்பனுக்கு சுமையாக
இறைவனிடம் கெஞ்சுகிறேன் என்னையும்
அழைத்துக்கொள் என் தாயைப்போல உன்னிடமே
Friday, 23 September 2011
உங்கள் ஊர் மேப்பை உங்கள் ப்ளாக்கில் இணைக்க
உங்கள் ஊரின் மேப்பை உங்கள் ப்ளாக்கில் கூகுள் வழியாக இணைக்கலாம். ஆனால் கூகுள் மேப்பை இணைக்கும் போது மேப்பின் அளவை தேவையான அளவிற்கு கூட்டி குறைக்க முடிய வில்லை. எனவே wikimapia.org என்ற முகவரிக்கு சென்று நீங்கள் Sign Up செய்துக்கொள்ளுங்கள். அதன் பின் உங்கள் Id யை கொடுத்து Sign In செய்துக்கொள்ளுங்கள். பின்பு மேப்பில் உங்கள் ஊர் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
அங்கு உங்கள் வீட்டை கூட பார்க்க முடியும். பின்பு மேப்பில் உள்ள Add place ல் க்ளிக் செய்து உங்கள் ஊர் இருக்கும் இடம் அல்லது உங்கள் வீடு இருக்கும் இடத்தை குறியுங்கள். அதில் உங்கள் வீட்டின் பெயரையும் கூட எழுதலாம். கீழே இருப்பது போன்று.
அங்கு உங்கள் வீட்டை கூட பார்க்க முடியும். பின்பு மேப்பில் உள்ள Add place ல் க்ளிக் செய்து உங்கள் ஊர் இருக்கும் இடம் அல்லது உங்கள் வீடு இருக்கும் இடத்தை குறியுங்கள். அதில் உங்கள் வீட்டின் பெயரையும் கூட எழுதலாம். கீழே இருப்பது போன்று.
அதன்பின் மேப்பில் உங்கள் Id யை க்ளிக் செய்தால் Map on your page என்ற ஐகானை தேர்வு செய்யுங்கள். Map on your page யை க்ளிக் செய்ததும் சதுரமான பெட்டி ஒன்று உங்கள் மேப்பில் கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று. தோன்றும். அதை நீங்கள் தேவையான இடத்திற்கு மாற்றியும் தேவையான அளவிற்கு சரி செய்தும் கொள்ளலாம்.
தேவையான இடத்தை தேர்வு செய்த பின்பு தேர்வு செய்த இடத்திற்க்காண HTML CODE யை காபி செய்து உங்கள் Dashbord ல் உள்ள Design என்ற பகுதியை க்ளிக் செய்யுங்கள். பின்பு add gadget ஐ க்ளிக் செய்து Html java script ற்கு சென்று இங்கு பேஸ்ட் செய்த பின் Save பண்ணுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் வீட்டின் மேப் உங்கள் ப்ளாக்கில் இணைக்கப்பட்டிருக்கும்.
Labels:
தொழில் நுட்பம்
Tuesday, 20 September 2011
மூடநம்பிக்கை எப்போது ஒழியும்?
இந்த பதிவு மூடநம்பிக்கையுடன் இருப்பவர்களைப் பற்றியது. மூடநம்பிக்கையுடையோர் படிக்க வேண்டாம்.
நம் நாட்டில் இந்துக்கள் முக்கால்வாசி பேருக்கு ஜாதகம் பார்க்கும் பழக்கம் இருக்கிறது. பிள்ளை பிறந்ததும் பெயர் சூட்டுதல், பள்ளிக்கு சேர்த்தல், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, பெண்வீடு பார்க்க செல்லுதல் (அ) மாப்பிளை வீடு பார்க்க செல்லுதல், திருமண நாள், முதலிரவு நாள், வீடு கட்ட மனை முகூர்த்தம் நாள், குடிபுகுதல் நாள் என ஒவ்வொன்றுக்கும் நாள் பார்த்து ஜாதகம் பார்த்து தான் செய்கிறார்கள்.
அப்படி பார்த்து பார்த்து செய்யும் அனைத்து குடும்பங்களும் சந்தோசமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கிறார்களா? இல்லை என்று தான் சொல்லுவேன்.
மூடநம்பிக்கை சம்பவம் 1.
சுபமுகூர்த்த நாளில் முகூர்த்தம் செய்து வீடு கட்ட ஆரம்பித்து, நல்ல முறையில் வீட்டை கட்டி முடித்தார்கள். கிட்ட தட்ட 5 அல்லது 6 வருடமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்போ அந்த வீட்டு பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குதாம். அதனால் பூசாரியை கூட்டி வந்து பேய் ஓட்டினார்கள். அப்பவும் சரியாக வரல. அதனால் அவர்கள் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தார்கள். இன்னும் 2 மாதத்திற்கு வீட்டுக்கு கிரகம் சரியில்லை அதனால் வேறு வீட்டில் 2 மாதம் குடியிருங்கள் என்கிறார்.
சுபமுகூர்த்த நாளில் முகூர்த்தம் செய்து வீடு கட்ட ஆரம்பித்து, நல்ல முறையில் வீட்டை கட்டி முடித்தார்கள். கிட்ட தட்ட 5 அல்லது 6 வருடமாக ஒரு பிரச்சினையும் இல்லாமல் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்போ அந்த வீட்டு பெண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குதாம். அதனால் பூசாரியை கூட்டி வந்து பேய் ஓட்டினார்கள். அப்பவும் சரியாக வரல. அதனால் அவர்கள் ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்தார்கள். இன்னும் 2 மாதத்திற்கு வீட்டுக்கு கிரகம் சரியில்லை அதனால் வேறு வீட்டில் 2 மாதம் குடியிருங்கள் என்கிறார்.
மூடநம்பிக்கை சம்பவம் 2.
என் நண்பனின் அக்காவுக்கு மாப்பிள்ளை வீடு பார்ப்பதற்கு வீட்டை விட்டு கிளம்பினார்கள், அப்போது ஒரு பூனை குறுக்கே வந்தது. அதனால் அந்த வரன் வேண்டாம் என்று சொல்லி விட்டார் நண்பனின் அப்பா. ஆனால் அவருக்கு அந்த மாப்பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் ரொம்ப பிடித்திருந்தது. இருந்தும் பூனை குறுக்கே வந்ததால் அந்த வரனை வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
மூடநம்பிக்கை சம்பவம் 3.
ஒருவருக்கு பயங்கர வயிற்று வலி. ஏன் ஆஸ்பத்திரிக்கு போக வில்லைன்னு கேட்டால் இன்னக்கி நாள் சரியில்லை என்றும் அப்படி மீறி போனால் இவர் உயிருக்கு ஆபத்தாகி விடுமாம். அதனால் உள்ளூர் மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு வரவைத்து வலி நிற்க ஊசிப்போட்டுக்கொண்டுள்ளார்.
மூடநம்பிக்கை சம்பவம் 4.
நண்பர் ஒருவரிடம் அவசரமாக பணம் கொஞ்சம் தேவைப்படுகிறது என்று கேட்டிருந்தேன். காலையில் சரி என்றவர், மாலையில் நாளைக்கு வாங்கிக்கலாம் என்றார். ஏனென்றால் அன்று செவ்வாய் கிழமையாம்.
மழை வேண்டி கழுதையை திருமணம் செய்வது, குழந்தையை நரபலி கொடுப்பது என்று இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றது. இவையெல்லாம் எப்பவோ நடந்த சம்பவம் அல்ல . இப்பொழுதும் நடந்துகொண்டு இருப்பவை தான்.
திருமணம் செய்வதற்கு ஜாதகம் பார்த்தால் அது நம்பிக்கை. ஆனால் அந்த ஜாதகம் பார்ப்பதற்க்கு கூட அவர் வீட்டில் உள்ள தினசரி காலண்டரில் நல்ல நேரம் பார்த்து கிளம்புகிறார்களே அதை என்ன சொல்வது. அதை தான் மூடநம்பிக்கை என்கிறேன்.
மேலை நாடுகளில் ஜாதகம் பார்ப்பது கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன் நம்மூரிலும் முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையோர் ஜாதகம் பார்த்து திருமணம் செய்வது கிடையாது. அவர்கள் சந்தோசமாக தான் இருக்கிறார்கள். இந்துக்களாகிய நம் மக்கள் தான் பையன் அல்லது பெண்ணை பிடிச்சிருந்தாலும் கூட ஜாதகம் சரியில்லையென்றால் ஒதுக்கி விடுகிறார்கள்.
மூட நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரு கேள்வி, ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்கும் 5 வருடத்திற்கு ஒருமுறை கிரகம் மாறுகிறதா ?
சகோதர சகோதரிகளே, இந்த பதிவின் நோக்கம் ஜோதிடம் பார்ப்பவர்களை புண்படுத்துவதற்காக அல்ல. ஆனால் ஜோதிடம் சொல்வது தான் நூறு சதவீதம் சரி என்று நம்பிக்கொண்டு இருக்காதீர்கள் என்று தான் நான் கூறுகிறேன்.
Labels:
மூடநம்பிக்கை,
ஜோதிடம்
Monday, 5 September 2011
நண்பரின் இழப்பு
நண்பர்களே இது ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் நடந்த சம்பவம்.
ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் தன்னுடன் ஒரே அக்காவுடன் பிறந்த நண்பர் ஒருவர் தன்னுடைய 19 வது வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் சொந்த ஊரில் இருந்தால் முன்னேற முடியாது என்பதால் எல்லோரைப்போலவும் வெளிநாட்டு கனவு அவருக்கும் வந்தது. அவரும் வெளி நாடு ( சிங்கப்பூர்) சென்றார்.
சிங்கப்பூரில் கிட்டதட்ட 11 வருடம் வேலை செய்தார். தனக்கு 27 வயதாக இருக்கும் போது சொந்தம் இல்லாத ஒருப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பணத்திற்க்காக 4 வருடம் சிங்கப்பூரில் தன் வாழ்க்கையை ஓட்டினார். திருமணத்திற்கு பிந்தைய இந்த 4 வருட சிங்கப்பூர் வாழ்க்கையின் போது அவரின் மனைவிக்கு குழந்தை உருவாகவில்லை. அதனால் தனது சிங்கப்பூர் வாழ்க்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு 2008 ஆம் ஆண்டு கடைசியில் தாய் நாடான தமிழகம் நோக்கி புறப்பட்டார். 2009 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அவரின் மனைவி. எல்லா விசயங்களிலும் நன்றாக யோசித்து தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் இவர்.
அதே போலவே யோசித்து 2009-ல் சிறுதொழில் ஒன்றை தொடங்கினார். மினிவேன் வாடகைக்கும், கைத்தொலைப்பேசி விற்பனை மற்றும் பழுதுபார்த்தல், மீன் வளர்த்தல் போன்ற தொழில் நடத்தி வந்தார். தொழில் நன்றாக போனது. எல்லா செலவுகளும் போக வருடத்திற்கு 2 லட்சம் மீதம் பண்ண முடிந்தது. இது கிட்ட தட்ட சிங்கப்பூரில் சம்பாதிக்கும் சம்பாத்தியம் அளவுக்கு ஈடானது என்றே சொல்லலாம்.
இப்படி சந்தோசமாக போனவரின் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடியுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு நாள் வழக்கம் போல தனது மொபைல் கடையை மூடிவிட்டு தனது மீன்குளத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் மோட்டாரை பழுது பார்ப்பதற்காக (இவருக்கு எலக்ட்ரிக்கல் வேலையும் தெரியும்) தனியாளாக போனவர் அங்கேயே மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டார்.
இன்று இரவு கடையிலே தூங்கிவிட்டார் போல என்று நினைத்திருந்த மனைவிக்கு தெரியாது அவர் நிரந்தரமாக தூங்கிவிட்டார் என்பது. காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு அவரின் மனைவிக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
11 வருடம் தாயை பிரிந்தும் 4 வருடம் மனைவியை பிரிந்தும் வாழ்ந்த அவருக்கு, தன் வாழ்க்கையின் வசந்தகாலம் ஆரம்பமாகும்போது இப்படி உலகத்தை விட்டே போய் விட்டாரே. எல்லோரிடத்திலும் சிரித்த முகத்தோடு பேசுபவர், வீண் வம்புக்கு போகாதவர், தாய்க்கு நல்ல பிள்ளையாகவும் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருந்த இவருக்கு ஏன் இப்படி நடந்தது. இப்போது இவரின் மனைவி இரண்டாவது முறையாக 7 மாத கற்பிணியாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு யார்? வயதான மாமியார் இன்னும் எவ்வளவு காலம் இவருக்கு ஆதரவளிப்பார்.
ஜாதகம் பார்த்து, நாள் நட்சத்திரம் குறித்து, கடவுள் சாட்சியாக அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் செய்த இவருக்கு நேர்ந்த கதியை பாருங்கள் நண்பர்களே. என்னத்த சொல்லி அழுவது, எப்படி மனதை தேற்றிக்கொள்வது என்றே தெரியாமல், மீளாத துக்கம் தாளாத சோகத்தில் நடுக்கடலில் சூறாவளியில் சிக்கிக்கொண்ட படகைப்போல தத்தளிக்கிறார்கள். கடவுளுக்கு கண்ணிருந்தால் இதுபோல இனி யாருக்கும் நடக்காமல் பார்த்துக்கொள்ளட்டும் (அ) பார்த்து பார்த்து நல்லவர்களையே கொல்லட்டும்.
Subscribe to:
Posts (Atom)