About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 9 October, 2010

panangoor

                                                             பனங்கூர்  
                எங்கள் ஊர் அரியலூர் மாவட்டம், ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்தை சேர்ந்த  அழகிய கிராமம். ஆனால் அது ஒரு சிறிய கிராமம் தான் . சுமார் 100  வீடுகளை மட்டுமே கொண்டுள்ளது. மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 500  பேர் மட்டும் தான் இருப்பார்கள். அனால் எங்கள் ஊரில் இப்பொழுது ஏழை என்று சொல்லும் அளவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் எங்கள் ஊரில் உள்ள அத்தனை இளைஞர்களும் ஏதாவது ஒரு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் மிகவும் பசுமையாகவும் செழிப்பாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. ஏனென்றால் விவசாய நிலங்கள் யாவும் விற்கப்பட்டு விட்டது. இப்பொழுது  எங்கள் ஊரைச் சுற்றிலும் சிமெண்டுக்கு தேவையான சுண்ணாம்புக்கல் எடுக்கப்படுகிறது. மக்கள் ஒருபுறம் சந்தோசத்தை அனுபவித்தாலும் மறுபுறம் கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள். சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கு அவர்கள் வைக்கும் வெடி வீடுகளை அதிரவைக்கிறது. இதனால் நம்மை நகரத்தை நோக்கி நகர வைக்கிறது. நகரத்தில் எல்லாமும் கிடைத்தாலும் கிராமத்துக்கு ஈடு இணை இல்லை என்பதை சந்தோஷத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இப்படிக்கு
காந்தி. கோ

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க