About Me
- காந்தி பனங்கூர்
- அரியலூர், தமிழ்நாடு, India
- உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.
Saturday, 16 October 2010
பனங்கூர்
பனங்கூரை பற்றி
ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்தில் மொத்தம் ஆறு கிராமங்கள் அடங்கும், அவை
1 ஆலந்துறையார் கட்டளை
2 பனங்கூர்
3 வாழைக்குழி
4 மேலக்காங்கியனூர்
5 கீழக்காங்கியனூர்
6 சிறுதொண்டாங்காணி
இப்பொழுது எங்கள் பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஆலந்துரையார் கட்டளையை சேர்ந்த திரு சுப்பிரமனியன் என்பவர், இவருக்கு சிறு வயது தான், ஆனாலும் திரமையாக செயல்படுகிறார். இவர் வந்த பிறகு தான் தெருக்களில் எப்பொழுதும் மின்விளக்கு ஒளிர தொடங்கியது.
எங்கள் ஊரில் உள்ள பொது வசதிகள்,
1. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி
2. தண்ணீர்த் தேக்கத் தொட்டி
3. பொது தொலைக்காட்சி அறை (இப்பொழுது செயலிழந்து விட்டது)
4. பகுதி நேர அங்காடி (இப்பொழுது தான் திறப்பு விழா செய்யப்பட்டுள்ளது செப் 2010) எப்பொழுது செயல்படுத்துவார்கள் என்று தெரியாது.
இப்படிக்கு
காந்தி. கோ
பனங்கூர்
Thursday, 14 October 2010
Saturday, 9 October 2010
panangoor
பனங்கூர்
எங்கள் ஊர் அரியலூர் மாவட்டம், ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்தை சேர்ந்த அழகிய கிராமம். ஆனால் அது ஒரு சிறிய கிராமம் தான் . சுமார் 100 வீடுகளை மட்டுமே கொண்டுள்ளது. மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 500 பேர் மட்டும் தான் இருப்பார்கள். அனால் எங்கள் ஊரில் இப்பொழுது ஏழை என்று சொல்லும் அளவுக்கு யாரும் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் எங்கள் ஊரில் உள்ள அத்தனை இளைஞர்களும் ஏதாவது ஒரு வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் மிகவும் பசுமையாகவும் செழிப்பாகவும் இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. ஏனென்றால் விவசாய நிலங்கள் யாவும் விற்கப்பட்டு விட்டது. இப்பொழுது எங்கள் ஊரைச் சுற்றிலும் சிமெண்டுக்கு தேவையான சுண்ணாம்புக்கல் எடுக்கப்படுகிறது. மக்கள் ஒருபுறம் சந்தோசத்தை அனுபவித்தாலும் மறுபுறம் கஷ்டத்தையும் அனுபவிக்கிறார்கள். சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கு அவர்கள் வைக்கும் வெடி வீடுகளை அதிரவைக்கிறது. இதனால் நம்மை நகரத்தை நோக்கி நகர வைக்கிறது. நகரத்தில் எல்லாமும் கிடைத்தாலும் கிராமத்துக்கு ஈடு இணை இல்லை என்பதை சந்தோஷத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Subscribe to:
Posts (Atom)