இரவு நிலா வெளிச்சத்தினில்
எல்லோரும் கூடி உணவருந்தும் சுகம்
இப்போது இல்லையே
உலகக் கதை பேசும் சுகம்
இப்போது இல்லையே
இப்போது இல்லையே
திருவிழா காலங்களில் ஆண்களும்
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே
கும்மியடித்து மகிழும் காலம்
இப்போது இல்லையே
கார்த்திகை தீபத்திற்கு பெண்களெல்லாம்
ஏரியில் விளக்கு விடுவது
இப்போது இல்லையே
நம் வீட்டு குழம்பு ருசிக்காதபோது
பக்கத்துவீட்டு குழம்பு வாங்கி சாப்பிடும் சுகம்
இப்போது இல்லையே
வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே
எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!
இப்போது இல்லையே
வெயில் கால கூரைவீட்டு குளிர்ச்சி
ஏசி போட்ட எந்தன் வீட்டில்
இப்போது இல்லையே
எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!
//எல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!//
ReplyDeleteநகரவாழ்க்கையில் இப்படி எத்தனை சின்னச் சின்ன.சந்தோசங்களை தொலைத்து வாழ்கின்றோம்.
@K.s.s.Rajh
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
மீண்டும் கிராமத்தை எண்ணி ஏங்க வைக்கும் கவிதை அழகு.
ReplyDeleteவெயில் காலத்தில்
ReplyDeleteமண்பானையில் வைத்த குளிர்ந்த குடிநீரை
குடிக்கும் வாய்ப்பு இன்று இல்லையே!!!
தண்ணீர் சோறை வெங்காயத்தையும், மிளகாயையும் கடித்து சாப்பிடும் வாய்ப்பு இல்லையே..
ReplyDeleteமண்ணின் மரபுகளை
ReplyDeleteமீண்டும் எண்ணிப் பார்க்க வைத்த கவிதை!!!!!!!!
கிராமத்து பக்கம் போயி ரொம்ப நாளாச்சுங்க
ReplyDeleteஆம் ...உண்மையான வரிகள் .வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மைதாங்க சொர்கத்தோட இன்னொரு பேர் கிராமம்!
ReplyDeleteஇதை நான் சொந்த ஊருக்கு போகும் போதெல்லாம் உணர்வேன்!
ninaivootiya pagirvukku nandri!
ஊர் கூடி திருவிழா நடத்துவாங்களே!
ReplyDeleteபொது இடங்களில் பிரச்சனைனா அவங்கவங்க கிராமத்துகாரங்க தப்பே செய்திருந்தாலும் விட்டுகொடுக்காம சண்டைக்கு போவாங்களே!..இன்னும் நிறைய....
கிராமத்து சொர்க்கம் என்றுமே நரகத்தில்(நகரத்தில்)கிடைக்காது நண்பா.... பதிவு ஆதங்கம் அருமை நண்பா
ReplyDelete//சிவகுமார் said...
ReplyDeleteமீண்டும் கிராமத்தை எண்ணி ஏங்க வைக்கும் கவிதை அழகு.//
தங்கள் வருகைக்கும் கருத்துரௌக்கும் மிக்க நன்றி.
//முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteமண்ணின் மரபுகளை
மீண்டும் எண்ணிப் பார்க்க வைத்த கவிதை!!!!!!!!//
வெயில் காலத்தில்
மண்பானையில் வைத்த குளிர்ந்த குடிநீரை
குடிக்கும் வாய்ப்பு இன்று இல்லையே!!!//
ஆமாம் முனைவரே, இதுபோல எத்தனையோ சுகங்களை இழந்து நிற்கிறோம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
//தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteகிராமத்து பக்கம் போயி ரொம்ப நாளாச்சுங்க//
கிராமம் எல்லாம் கிட்டதட்ட நகரம் போல மாறிடுச்சி திரு பிரகாஷ். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஆம் ...உண்மையான வரிகள் .வாழ்த்துக்கள்.//
நன்றி சார் தங்கள் கருத்துரைக்கு.
//கோகுல் said...
ReplyDeleteஉண்மைதாங்க சொர்கத்தோட இன்னொரு பேர் கிராமம்!
இதை நான் சொந்த ஊருக்கு போகும் போதெல்லாம் உணர்வேன்!
ninaivootiya pagirvukku nandri!//
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி கோகுல்.
//thirumathi bs sridhar said...
ReplyDeleteஊர் கூடி திருவிழா நடத்துவாங்களே!
பொது இடங்களில் பிரச்சனைனா அவங்கவங்க கிராமத்துகாரங்க தப்பே செய்திருந்தாலும் விட்டுகொடுக்காம சண்டைக்கு போவாங்களே!..இன்னும் நிறைய....//
ஆமாங்க, இதுபோல இன்னும் நிறய விசயங்களை இழந்துட்டோம்ங்க thirumathi bs sridhar.
//மாய உலகம் said...
ReplyDeleteகிராமத்து சொர்க்கம் என்றுமே நரகத்தில்(நகரத்தில்)கிடைக்காது நண்பா.... பதிவு ஆதங்கம் அருமை நண்பா//
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.
அனைவரது ஏக்கத்தையும் பதிவாக்கி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
ReplyDelete//shanmugavel said...
ReplyDeleteஅனைவரது ஏக்கத்தையும் பதிவாக்கி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி திரு shanmugavel
அன்பின் காந்தி - கிராமம் கிராமம் தான் - நகரம் நகரம் தான் - இர்ண்டையும் ஒப்பு நோக்கிப் பயனைல்லை. நம் விதி நாம் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. என்ன செய்வது .... நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநிஜம் தான்.
ReplyDelete//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் காந்தி - கிராமம் கிராமம் தான் - நகரம் நகரம் தான் - இர்ண்டையும் ஒப்பு நோக்கிப் பயனைல்லை. நம் விதி நாம் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. என்ன செய்வது .... நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
//Rathnavel said...
ReplyDeleteநிஜம் தான்.//
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
ஒளிப்படத்தை பார்த்தவுடன் என்மனம் இருபது ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது..
ReplyDeleteஎங்கள் வீட்டில் ஒரு சோடி சிவப்பு நிற காளை மாடு மற்றும் டயர் வண்டி( அப்போ மாட்டுவண்டியில் லேட்டஸ்ட் மாடல்) இருந்தது, அப்பா உர மூட்டைகளை ஏற்றி விட்டு மாட்டை வண்டியில் பூட்டி அனுப்பிவிடுவார் பிறகு சந்தையில் காய்கறிகளை வாங்கிக்கொண்டு வருவார். மூன்று மைல் தொலைவை ஆட்கள் யாருமில்லாமல் பல வளைவுகளை கடந்து வீடு வந்துசேர்ந்திருக்கும் வண்டி..
அதற்குப்பிறகு நிறைய மாடுகள் வந்து சென்றுவிட்டன.. ஆனாலும் அந்த சிவப்பு மாடுகளை போல் எதுவுமில்லை....
தொடரட்டும் உங்கள் கவிதைகள்...
@ குடிமகன்,
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
அருமை நண்பரே !
ReplyDelete//murugesan said...
ReplyDeleteஅருமை நண்பரே !//
மிக்க நன்றி நண்பா.
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர்போலாகுமா. கிராமத்து வாழ்க்கைக்கு இணை ஏதுமில்லை
ReplyDelete@அம்பலத்தார்
ReplyDeleteஆமாம் நண்பா, கிராமத்து வாழ்க்கைக்குக் ஈடு இணை ஏதும் இல்லை.
தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா
நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சரி
ReplyDeleteஆயினும் அதையும் தங்களைப்போல் ரசிக்கவும்
ரசிக்கத் தக்க அளவில் பதிவாக்கித் தரவும்
மனமும் அதிக ஈடுபாடும் வேண்டும்
படங்களும் பதிவும் அருமை
மிக்க நன்றி திரு Ramani அவர்களே.
ReplyDeleteஎல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!/
ReplyDeleteபடங்களும் பதிவும் அருமை
கடந்தகால நினைவுகள் இங்கு கவிதையானதோ!:......
ReplyDeleteஅந்த விருந்து உண்ட காலமதை மனம் நினைத்து புளுங்குதோ!:.......அந்த மாட்டுவண்டி என் மனதையும் வாட்டிச் செல்லுது சகோ .
உங்கள் அழகிய கவிதைக்கு என் பாராட்டுகள் ...................
//இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஎல்லாமே நகர (நரக) மயமாகிவிட்ட இவ்வுலகில் மீண்டும் கிடைக்குமா என் கிராமத்து சொர்க்கம்!!!/
படங்களும் பதிவும் அருமை//
தங்கள் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.
//அம்பாளடியாள் said...
ReplyDeleteகடந்தகால நினைவுகள் இங்கு கவிதையானதோ!:......
அந்த விருந்து உண்ட காலமதை மனம் நினைத்து புளுங்குதோ!:.......அந்த மாட்டுவண்டி என் மனதையும் வாட்டிச் செல்லுது சகோ .
உங்கள் அழகிய கவிதைக்கு என் பாராட்டுகள் ...................//
அந்த வாழ்க்கை மீண்டும் வராதா என மனம் எத்தனையோ முறை ஏங்கியுள்ளது ஏங்குகிறது. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.
நண்பரே, சிறந்த கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDelete@ Ashokkumar.K
ReplyDeleteதங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.
elimayana kavithai
ReplyDelete