About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Wednesday 7 September 2011

சபாஷ் சரியான பதிலடி

உத்திர பிரதேச முதல்வர் மாயாவதி செருப்பு வாங்க தனி விமானம் அனுப்பியது பற்றிய பேச்சுக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் பதிலடி கொடுத்துள்ளார்.

மாயாவதியின் ஆடம்பரம், அதிகாரத்தை தவறாவக பயன்படுத்துதல், உயிர்பயம் போன்றவற்றைக்கொண்ட தகவல்களை அமெரிக்காவின் டெல்லி தூதரகம் தனது தலைமையகத்துக்கு அனுப்பிய செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.

அதில் மாயாவதி செருப்பு வாங்க தனி விமானத்தை மும்பைக்கு அனுப்பினார் என்று விக்கிலீக்ஸ் வெளியிருந்தது. ஆனால் மாயாவதி இதனை கடுமையாக மறுத்து பேசியிருந்தார்.விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை உத்திரபிரதேச மாநில மன நல மருத்துவமனையில் சேர்த்துவிடுவதாகவவும் கூறியிருந்தார்.

அதற்கு பதிலளித்த விக்கிலீக்ஸ் நிறுவனரான அசாஞ்சே, மாயாவதி திருந்த வேண்டும், மன்னிப்புக்கேட்க வேண்டும் என கோரியுள்ளார். வேண்டுமானால் என்னை இந்தியா கொண்டு செல்ல தனி விமானம் அனுப்பட்டும் என்றும் நான் அதிகமாக நேசிக்கும் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெற தயார் எனவும் கூறியுள்ளார். மாயாவதிக்கு இங்கிலாந்திலிருந்து நல்ல செருப்புகளை வாங்கி வரவும் தயார் என பதிலடி கொடுத்துள்ளார்.

மாயாவதி அவரின் மறைந்த கட்சி தலைவருக்கு நினைவுப்பூங்கா கட்டுவதில் 60 கோடிக்கும் மேல் மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இவர் கட்ச்சிக்காரர்கள் இவருக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பண மாலாய் போட்டார்கள். இந்த பணம் எல்லாம் யாருடைய பணம். இப்படி ஊழல் மேல் ஊழல் செய்யும் இவரையெல்லாம் எத்தனை அன்னா ஹசாரே வந்தாலும் திருத்த முடியாது. திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இந்த பெருச்சாளிகள் பார்த்து திருந்தா விட்டால் நாடு குட்டிச்சுவராகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

மாயாவதிக்கு பதிலடி(செருப்படி) கொடுத்த விக்கிலீக்ஸ் அசாஞ்சேவுக்கு வாழ்த்துக்கள்.

33 comments:

  1. இந்தியாவில் அரசியல்வாதிகள் எதைவேணுமென்றாலும் செய்யலாம் என்ற நிலை காணப்படுவது கவலைக்குரியது

    ReplyDelete
  2. //மாயாவதிக்கு பதிலடி(செருப்படி) கொடுத்த விக்கிலீக்ஸ் அசாஞ்சேவுக்கு //

    இந்த மனுசன் பெயரைப்போல் அஞ்சா நெஞ்சன் தான்

    ReplyDelete
  3. //மாயாவதிக்கு செருப்படி கொடுத்த விக்கிலீக்ஸ் அசாஞ்சேவுக்கு வாழ்த்துக்கள்.//

    இதைப் பதிவாக்கிய அண்ணன் காந்திக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @ நண்டு @நொரண்டு -ஈரோடு,

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. //அம்பலத்தார் said...
    இந்தியாவில் அரசியல்வாதிகள் எதைவேணுமென்றாலும் செய்யலாம் என்ற நிலை காணப்படுவது கவலைக்குரியது//

    மாற்றம் வருமா என பார்க்கலாம்.

    ReplyDelete
  6. @ K.s.s.Rajh

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  7. //சத்ரியன் said...
    //மாயாவதிக்கு செருப்படி கொடுத்த விக்கிலீக்ஸ் அசாஞ்சேவுக்கு வாழ்த்துக்கள்.//

    இதைப் பதிவாக்கிய அண்ணன் காந்திக்கும் வாழ்த்துக்கள்.//

    வாங்க தல....

    ReplyDelete
  8. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    தலைப்பு கரெக்டு .//

    மிக்க நன்றி திரு கருன் அவர்களே

    ReplyDelete
  9. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  11. இந்தம்மாக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி தான்

    ReplyDelete
  12. அகில உலக போலிசு அமெரிக்காவுக்கே, அல்வா கொடுத்த அசாஞ்சேவுக்கு மாயாவதி ஒரு மேட்டரே இல்லை.இனியாவது திருந்தம்மா!!!!

    ReplyDelete
  13. //திருடனால் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல இந்த பெருச்சாளிகள் பார்த்து திருந்தா விட்டால் நாடு குட்டிச்சுவராகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.///

    சரியா சொன்னீங்கண்ணே, என்ன செய்வது இவர்களா திருந்தினால்தான் உண்டு ஆனால் திருந்துவார்களா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

    தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!

    ReplyDelete
  14. //ஆமினா said...
    இந்தம்மாக்கு கொஞ்சம் லொள்ளு ஜாஸ்தி தான்//

    ஆமாங்க, கொழுப்பும் ஜாஸ்திங்க.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  15. //R.Elan. said...
    அகில உலக போலிசு அமெரிக்காவுக்கே, அல்வா கொடுத்த அசாஞ்சேவுக்கு மாயாவதி ஒரு மேட்டரே இல்லை.இனியாவது திருந்தம்மா!!!!//

    இவங்களாவது திருந்துவதாவது, வாய்ப்பே இல்லைங்க.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  16. @ மாணவன்

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி சிம்பு.

    ReplyDelete
  17. பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ஜனநாயக நாட்டில் மாயாவதி ஒரு சர்வாதிகாரியாக இருப்பது வேதனையளிக்கிறது..

    ReplyDelete
  18. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சிட்டிசன்(குடிமகன்) அவர்களே.

    ReplyDelete
  19. //எத்தனை அன்னா ஹசாரே வந்தாலும் திருத்த முடியாது.//இது நல்லாயிருக்கே!அன்னா ஹசாரே போராடி பெற்றதில் ஊழல் செய்த யாரையாவாது கண்டுபிடிச்சு உள்ள தள்ளியிருக்காங்களா?

    ReplyDelete
  20. பரவாயில்லையே நம்ம ஊர் அரசியல்வாதி போல
    அவரும் பதிலுக்கு பதில் நன்றாகப் பேசுகிறாரே
    இந்தியா வந்தால் கொடிகட்டிப் பறப்பாரோ
    சொல்லிச் சென்ற விதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நல்ல பதிவு பாராட்டுகள் .....

    ReplyDelete
  22. @ thirumathi bs sridhar

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  23. @ Ramani

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  24. //அம்பாளடியாள் said...
    நல்ல பதிவு பாராட்டுகள் ...//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  25. kவிழிப்புணர்வுப்பதிவு.. ! குட்

    ReplyDelete
  26. @ சி. பி.செந்தில்குமார்

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி தல.

    ReplyDelete
  27. //மேரிஜோசப் said...
    nalla padivu//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  28. ரொம்ப நல்லா இருந்தது ஆனா மனசுதான் கெடந்து அடிச்சுக்குது. நாட்டுல அவ அவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கு நாயா உழைக்கிறான். ஆனா இவங்க எல்லாம் இப்படி நடந்துகிறாஙக

    ReplyDelete
  29. ஹலோ காந்தி .. மாம்ஸ் ... எப்புடி இருக்கீங்க ... நான் ஸ்ரீதர் தற்பொழுது சுண்டக்குடி இல் இருகோம் ... உங்கள் பதிவு அற்புதம் ... this is my email id srithar.chit@gmail.com ...give me u r contact number..this is my number 00971556694245.... i am very very happy now because now seen our native name panangoor.blogspot.com.....

    ReplyDelete
  30. மாறாது அய்யா! மாறாது, மனமும் குணமும் மாறாது.
    (காப்பி பேஸ்டு உள்பட)

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க