About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 10 September 2011

என் பதிவை காப்பியடித்த இணயத்தளத்திற்கும் வலைப்பதிவருக்கும் நன்றி


நண்பர்களே, வலையுலகத்துக்கு புதியவரான என் பதிவை பிரபல இணையதளமும் ஒரு வலைப்பதிவரும் காப்பி செய்து வெளியிட்டுள்ளனர்.


மாயாவதி செருப்பு வாங்க தனி விமானம் பயன்படுத்தியது பற்றி, மாயாவதிக்கும் விக்கிலீக்ஸ் அசாஞ்சேவுக்கும் நடந்த வார்த்தைப் போரை பற்றி கடந்த பதிவில் சபாஷ் சரியான பதிலடி என்ற தலைப்பில் கடந்த 7 ஆம் தேதி எழுதியிருந்தேன். அந்த பதிவை ஒரு வலைப்பதிவர் நேற்று காப்பி பண்ணி அவர் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார்.

இதே பதிவை tamilcnn.com என்ற இணையத்தளமும் காப்பியடித்து வெளியிட்டுள்ளன. என் பதிவை காப்பி செய்த இணையத்தளம் மற்றும் பதிவரின் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.


வலைத்தளத்துக்கு புதிதாக வருபவர்கள் தவறு என்று தெரியாமல் காப்பி செய்வது இயல்பு. நாளடைவில் அவர்கள் அவர்களை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் இணையதளங்கள் காப்பியடிக்கிறதே அவர்களை என்ன செய்ய?

என் மனதில் தோன்றும் கருத்துக்கள் மற்றவர்களை சென்றடைவதற்குத்தான் நான் பதிவிடுகிறேன். அதே பதிவை மற்றவர்கள் காப்பி செய்து பதிவிடும்போது என் கருத்துக்கள் அவர்கள் மூலமாக இன்னும் சிலருக்கு சென்றடையும் எனும்போது சந்தோசமே. அதனால் அந்த இணயத்தளத்திற்கும், வலைப்பதிவருக்கும் நன்றி.  ஆனால் அவர்கள் அப்படி செய்யும் போது என் வலைப்பூ முகவரியும் கொடுத்திருக்க வேண்டும். அப்படி கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி. 

நான் செய்த எழுத்துப்பிழையைக்கூட ( பண மாலை என்பதற்கு பதில் பண மாலாய் ) மாற்றாமல் வெளியிட்டிருக்கிறீர்கள். இனிமேல் காப்பியடித்தால் படித்துப்பார்த்து எழுத்துப்பிழையை சரி செய்து வெளியிடுங்கள். 


57 comments:

  1. //வலையுலகத்துக்கு புதியவரான என் பதிவை பிரபல இணையதளமும் ஒரு வலைப்பதிவரும் காப்பி செய்து வெளியிட்டுள்ளனர்.//

    கை கொடுங்க! நீங்க பிரபலமாகிட்டீங்க-ன்னு அர்த்தம். கங்கிராட்ஸ்! :-))

    ReplyDelete
  2. காந்தி...
    மனம் தளராதிங்கள்... இந்த பதிவுலகில் இதை தவிர்க்க முடியாது...

    என்னுடைய கவிதைகள் வெளியிட்ட கொஞ்ச நேரத்திற்க்குள் கிட்டதட்ட 5 அல்லது 6 தளங்களில் காபி செய்து விடுகிறார்கள்...

    என்ன செய்வது இவ்வளவுதான் அவர்களுடைய அறவு...

    ReplyDelete
  3. தாங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு பதிவர்களின் லிங்கை நீக்கிவிடுங்கள்..
    இதன் மூலம் அவர்களுக்கு இன்னும் அதிக வாசகர்கள் செல்லார்கள்...

    நாம் ஏன் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்...

    ReplyDelete
  4. ஆமினா said...
    :-)

    தங்கள் வருகைக்கும் டெம்ப்ளேட் கமெண்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. //சேட்டைக்காரன் said...
    //வலையுலகத்துக்கு புதியவரான என் பதிவை பிரபல இணையதளமும் ஒரு வலைப்பதிவரும் காப்பி செய்து வெளியிட்டுள்ளனர்.//

    கை கொடுங்க! நீங்க பிரபலமாகிட்டீங்க-ன்னு அர்த்தம். கங்கிராட்ஸ்! :-))//

    ஹி ஹி ஹி, கருத்துரைக்கு மிக்க நன்றிங்க சேட்டைக்காரன்.

    ReplyDelete
  6. பிரபலம் ஆகனும்னு சிலர் என்னென்னவோ எழுதுறாங்க.உங்களுக்கு இப்படி ஒரு காற்று.ஆமாம் எப்படி இதை கண்டுபிடிச்சீங்கனு சொன்னால் கேட்டுப்போம்.உங்க பெயரை போடாம விட்டது தவறுதான்.

    ReplyDelete
  7. //# கவிதை வீதி # சௌந்தர் said...
    தாங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டு பதிவர்களின் லிங்கை நீக்கிவிடுங்கள்..
    இதன் மூலம் அவர்களுக்கு இன்னும் அதிக வாசகர்கள் செல்லார்கள்...

    நாம் ஏன் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்...//
    நான் சொல்வது உண்மைனு தெரியனும் என்பதற்காக தான் நண்பா அந்த லிங்கை கொடுத்தேன். இதோ நீக்கிடுறேன்.

    கருத்துரைக்கு மிக்க நன்றி சௌந்தர்.

    ReplyDelete
  8. உங்க லிங்க் குடுத்திருந்தா பரவா இல்லை..

    ReplyDelete
  9. //இனிமேல் காப்பியடித்தால் படித்துப்பார்த்து எழுத்துப்பிழையை சரி செய்து வெளியிடுங்கள். // ஓ ...அப்படியா ... சரி .

    ReplyDelete
  10. //thirumathi bs sridhar said...
    பிரபலம் ஆகனும்னு சிலர் என்னென்னவோ எழுதுறாங்க.உங்களுக்கு இப்படி ஒரு காற்று.ஆமாம் எப்படி இதை கண்டுபிடிச்சீங்கனு சொன்னால் கேட்டுப்போம்.உங்க பெயரை போடாம விட்டது தவறுதான்.//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  11. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    உங்க லிங்க் குடுத்திருந்தா பரவா இல்லை..//

    ஆமாம் கருன்.

    ReplyDelete
  12. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    //இனிமேல் காப்பியடித்தால் படித்துப்பார்த்து எழுத்துப்பிழையை சரி செய்து வெளியிடுங்கள். // ஓ ...அப்படியா ... சரி .//

    செய்வதை திருந்த செய் என்று சொல்வார்கள். அதுபோல தவறு செய்தாலும் திருந்த செய்யட்டும் என்பதற்கு தான் அப்படி சொல்லியிருக்கேன் சகோ.

    ReplyDelete
  13. சகோ இது காலங்காலமாக நடக்கிறது காப்பி அடிப்பவர்கள் கிழே ஒரு வரியில் இது எங்கிருந்து எடுத்தேன் என்று சொன்னால் என்ன குறைந்த போய் விட போகிறார்கள் ஒன்னும் புரியவில்லை.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  14. //ஹைதர் அலி said...
    சகோ இது காலங்காலமாக நடக்கிறது காப்பி அடிப்பவர்கள் கிழே ஒரு வரியில் இது எங்கிருந்து எடுத்தேன் என்று சொன்னால் என்ன குறைந்த போய் விட போகிறார்கள் ஒன்னும் புரியவில்லை.

    பகிர்வுக்கு நன்றி நண்பரே//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  15. இந்த இனையதளக்காரங்கள் நம்மளை நம்பித்தான் இருக்கான்கள் நண்பா.இவங்கள் காப்பி அடித்த என்பதிவை நீக்கச்சொல்லி மெயில் அனுப்பி எந்த ரிப்லேயும் இல்லை....இவங்கள் பல பதிவர்களின் பதிவுகளை காப்பி அடித்துதான் இனையதளத்தை நடத்துறாங்க..திருத்த முடியாத க........................தைகள்

    ReplyDelete
  16. வேதனையைக்கூட வேடிக்கையாக சொல்லியிருக்கிறீர்கள்.... அவர்கள் உங்கள் தளத்தை குறிப்பிட்டு நன்றியாவது போட்டிருக்கலாம்....

    ReplyDelete
  17. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி

    திரு கவி அழகன்
    திரு ரத்னவேல்

    ReplyDelete
  18. //K.s.s.Rajh said...
    இந்த இனையதளக்காரங்கள் நம்மளை நம்பித்தான் இருக்கான்கள் நண்பா.இவங்கள் காப்பி அடித்த என்பதிவை நீக்கச்சொல்லி மெயில் அனுப்பி எந்த ரிப்லேயும் இல்லை....இவங்கள் பல பதிவர்களின் பதிவுகளை காப்பி அடித்துதான் இனையதளத்தை நடத்துறாங்க..திருத்த முடியாத க........................தைகள்//

    ஆமாம் நண்பா. இவனுங்களை திருத்தவே முடியாது.

    ReplyDelete
  19. //மாய உலகம் said...
    வேதனையைக்கூட வேடிக்கையாக சொல்லியிருக்கிறீர்கள்.... அவர்கள் உங்கள் தளத்தை குறிப்பிட்டு நன்றியாவது போட்டிருக்கலாம்....//

    ஆமாம் நண்பா, மாறுவார்களா பார்க்கலாம்.

    ReplyDelete
  20. உங்களுக்கு வாழ்த்துகள் தோழரே உங்களது சிந்தனையின் மகிமை அவர்கள் உணர்ந்து விட்டார்கள் உங்களின் நாமமும் இடப்பட்டிருந்தால்தான் சிறப்பாக அமைந்திருக்கும் என்ன செய்வது இப்படியும் இருக்கிறார்கள் என்று நாம் எம்மைத்தேற்றிக்கொள்ளத்தான் முடிகிறது

    ReplyDelete
  21. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி திரு நேசமுடன் ஹாசிம்

    ReplyDelete
  22. உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த அவர்கள் வாழ்க.திருடனாய் பார்த்து திருந்தினால்னால்தான் உண்டு.

    ReplyDelete
  23. //R.Elan. said...
    உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்த அவர்கள் வாழ்க.திருடனாய் பார்த்து திருந்தினால்னால்தான் உண்டு.//

    திருந்துவார்களா பார்க்கலாம். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  24. ஆகா உங்களிடமும் திருடிவிட்டனரா சகோ .....!!!! இப்ப இந்ததத் திருட்டு
    எங்கெல்லாம் நிகழுதோ எம்பெருமானே!....இவருக்கு பெரிய மனசு
    அதனால தன் மனவேதனையைக் காட்டிக்கொள்ளவில்லைப் பாவம் .
    நேற்றுத்தான் இன்னொரு பதிவரும் தன் கவலையை வெளியிட்டிருந்தார் .இதைத்
    தடுக்க யார்தான் முன்வருவார்????????.......இப்படி செய்பவர்களுக்கு வெக்கம்
    இல்லையா?????........சொந்தமா எதையாவது முயற்சிக்கலாமே????......
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....

    ReplyDelete
  25. காந்தி நீங்க போட்டிருக்கும் லிங்க்ல போய் இந்த ப்ளாக்ஸ்பாட் வெப்ட் அட்ரஸ் கொடுத்து அங்க பகிர நினைச்சேன் சில கருத்துகளை... ஆனா அங்கே அதற்கான இடம் இல்லை போலிருக்கு... பரவாயில்லை இங்கயே சொல்லிவிடுகிறேன்...

    நானும் காபி பேஸ்ட் செய்திருக்கேன்... தினமலர், விகடன் இதில் இருக்கும் கண்டெண்டென்ஸ் நான் முத்தமிழ் மன்றத்தில், ஈகரை, கலைத்தமிழ் முற்றத்தில் பேஸ்ட் செய்துட்டு நன்றி விகடன் நன்றி தினமலர் அப்டின்னு போட்ருவேன்பா...இது தான் பண்பு....

    ஒருவரிடம் பெறும் நல்லவைக்கு அவருக்கு நன்றி சொல்லி அவரின் தளத்தையும் அறிமுகப்படுத்தி இருந்தால் அவர் உயர்வாக மதிக்கவும் பட்டிருப்பார்....

    என்ன சொல்வதுன்னு தெரியலை....

    காபி பேஸ்ட் செய்வது தப்பில்லை ஆனால் எடுத்தவருக்கு நன்றியும் எடுத்த இடத்தையும் மறக்காம குறிப்பிடவேண்டும்.. இது இன்னாரின் சொத்து நான் இதை உங்களுடன் ப்கிர்கிறேன். இது அவருடைய தளம் அப்படின்னு சொல்லனும்...இந்த பண்பு எல்லாருக்குமே இருக்கவேண்டும் என்பதை உணர்த்த நீங்க அன்பாவும் அமைதியாவும் இங்க பதிவிட்டிருப்பதால் நீங்கள் இன்னமும் எங்கள் எல்லோர் மனதிலும் உயர்ந்திருக்கீங்க காந்தி....

    நார்மலா யாரும் கோபப்படுவாங்க.. தன்னுடையது இப்படி ஆனதுன்னு தெரிஞ்சால்... ஆனால் நீங்க பொறுமையா பதில் சொல்லி இருக்கீங்க...இதை படிப்பாங்க அவங்க கண்டிப்பா.... அப்ப புரிஞ்சு மன்னிப்பு கேட்டு உங்களுக்கு நன்றி சொல்லலாம்பா...

    ReplyDelete
  26. //அம்பாளடியாள் said...
    ஆகா உங்களிடமும் திருடிவிட்டனரா சகோ .....!!!! இப்ப இந்ததத் திருட்டு
    எங்கெல்லாம் நிகழுதோ எம்பெருமானே!....இவருக்கு பெரிய மனசு
    அதனால தன் மனவேதனையைக் காட்டிக்கொள்ளவில்லைப் பாவம் .
    நேற்றுத்தான் இன்னொரு பதிவரும் தன் கவலையை வெளியிட்டிருந்தார் .இதைத்
    தடுக்க யார்தான் முன்வருவார்????????.......இப்படி செய்பவர்களுக்கு வெக்கம்
    இல்லையா?????........சொந்தமா எதையாவது முயற்சிக்கலாமே????......
    மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .....//

    இதை தடுக்க யாரும் முன்வர மாட்டார்கள் என்பதால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

    தங்கல் கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  27. ஆகா எல்லோருடைய பின்னூட்டத்தையும் பார்த்தவுடன் எனக்கும் ஒரு அருமையான யோசனை தோன்றுகின்றது .பேசாமல் எழுதுகின்றபோது ஆங்காங்கே எழுத்துப் பிழைகளை விட்டுச் சென்றால் நமது ஆக்கம்தான் என்பதனை உறுதிப்படுத்தப் பிற்காலத்தில் உதவும். இது எழுத்துப் பிழைகளை விடுபவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.இது எப்படி ஹி....ஹி ...ஹி ....

    ReplyDelete
  28. @ மஞ்சுபாஷிணி

    //ஒருவரிடம் பெறும் நல்லவைக்கு அவருக்கு நன்றி சொல்லி அவரின் தளத்தையும் அறிமுகப்படுத்தி இருந்தால் அவர் உயர்வாக மதிக்கவும் பட்டிருப்பார்....//

    ஆமாம் சகோதரியே, நம் வலைப்பூ முகவரியை போடுவதில் அவர்களுக்கு அப்படி என்ன கஷ்டம்னுதான் தெரியலங்க.

    தங்கள் விரிவான கருத்துரைக்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  29. //அம்பாளடியாள் said...
    ஆகா எல்லோருடைய பின்னூட்டத்தையும் பார்த்தவுடன் எனக்கும் ஒரு அருமையான யோசனை தோன்றுகின்றது .பேசாமல் எழுதுகின்றபோது ஆங்காங்கே எழுத்துப் பிழைகளை விட்டுச் சென்றால் நமது ஆக்கம்தான் என்பதனை உறுதிப்படுத்தப் பிற்காலத்தில் உதவும். இது எழுத்துப் பிழைகளை விடுபவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.இது எப்படி ஹி....ஹி ...ஹி ....//

    ஹா ஹா ஹா அந்த எழுத்துப்பிழை எதேச்சையாக நடந்ததுங்க. ஆனால் அதுவே இப்போ சாட்சியா அமைந்துவிட்டது.

    மீண்டும் ஒருமுறை கருத்துரைத்ததற்கு மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  30. இப்படியும் இருக்கிறார்களே..... வேறென்ன சொல்ல ...... :((

    ReplyDelete
  31. நண்பரே மன்னிக்கும் குணம்தான் தவறு செய்பவர்களுக்கு தரும் மிகப்பெரிய தண்டணை . உங்களின் கற்பனையை திருடிய திருட்டு தீவிரவாதிகளுகு சரியான தண்டனை தந்துள்ளீர்கள் வாழ்துகள்

    ReplyDelete
  32. //துபாய் ராஜா said...
    இப்படியும் இருக்கிறார்களே..... வேறென்ன சொல்ல ...... :((//

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி திரு துபாய் ராஜா

    ReplyDelete
  33. //அ.குரு said...
    நண்பரே மன்னிக்கும் குணம்தான் தவறு செய்பவர்களுக்கு தரும் மிகப்பெரிய தண்டணை . உங்களின் கற்பனையை திருடிய திருட்டு தீவிரவாதிகளுகு சரியான தண்டனை தந்துள்ளீர்கள் வாழ்துகள்//

    நன்றிங்க குரு. தங்கள் கடையில் எதாவது புது வரவு இருக்குங்களா?

    ReplyDelete
  34. காந்தி,

    ”கள்ளநோட்டு” அடிக்கிறா மாதிரி,

    இவிய்ங்க,

    ”கள்ளபதிவு” அடிக்கிறவய்ங்களோ...?

    TEXT - காப்பி பண்ண முடியாதபடிக்கு ப்லொக்கெர்-ல எதுவும் OPTION இருக்கான்னு பாக்கனுமே!

    ReplyDelete
  35. மனம் தளராதீங்க மாப்ள

    ReplyDelete
  36. இதையும் பாருங்க.. உங்க வாழ்க்கைகாக... http://illamai.blogspot.com

    ReplyDelete
  37. சத்ரியன் said...
    காந்தி,

    //”கள்ளநோட்டு” அடிக்கிறா மாதிரி,

    இவிய்ங்க,

    ”கள்ளபதிவு” அடிக்கிறவய்ங்களோ...?

    TEXT - காப்பி பண்ண முடியாதபடிக்கு ப்லொக்கெர்-ல எதுவும் OPTION இருக்கான்னு பாக்கனுமே!//

    Text lock பண்ண வழி இருக்கு அண்ணா, அதை எல்லோரும் பயன்படுத்துவதில்லை. அதனால் தான் காப்பியடிப்பவர்களுக்கு வசதியா போகுது.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி அண்ணா.

    ReplyDelete
  38. //வைரை சதிஷ் said...
    மனம் தளராதீங்க மாப்ள//

    நீங்களெல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை மச்சான்.

    ReplyDelete
  39. //Admin said...
    இதையும் பாருங்க.. உங்க வாழ்க்கைகாக... http://illamai.blogspot.com//

    அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த பதிவுகளை படத்தோடு அருமையா விளக்கியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. என்ன சொல்வதென்று தெரியவில்லை நண்பரே! இணையம் அனைத்தையும் எளிதாக்கிவிட்டது Copy & Paste செய்வது உள்பட. அந்த ப்ளாக்ஸ்பாட் பதிவர் தற்போது உங்கள் தள முகவரியை குறிப்பிட்டுள்ளார்.

    இன்னொன்று,மாலாய் மட்டுமின்றி "தவறாவக, சேர்த்துவிடுவதாகவவும், கட்ச்சிக்காரர்கள்" இவற்றையும் மாற்றாமல் அப்படியே பேஸ்ட் செய்துள்ளார்கள். ஒரே ஒரு வார்த்தையை மட்டும் சரி செய்துள்ளார்கள்.

    இவர்களை என்ன செய்வது?

    ReplyDelete
  41. மிக்க நன்றி Abdul Basith.

    இதோ இப்போ சரிபார்த்துட்டு அவரின் தள முகவரியை என் பதிவிலிருந்து நீக்கி விடுகிறேன்.

    ReplyDelete
  42. ஆஹா,
    முதல் முதல்ல வரேன். திருட்டுப்போன ஷாக்ல இருக்கீங்களே தோழர். சரி விடுங்க.. இது வலைப்பதிவுல அடிக்கடி நடக்குற கருத்துக்கொள்ளை. என்ன திருடனா பாத்து திருந்தினாத்தான்..

    வலைப்பூவை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள்.

    ReplyDelete
  43. இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்தத் தேசியக்கொடி பிடித்த தம்பி அழகா நடக்கறாரு. அவர்தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தாரு.

    ReplyDelete
  44. காந்தி அந்த தளத்துக்கு போய் பார்த்தேன்.. அட பாவமே..!!! இதுவரை அந்த தளம் 22376 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ள.கொஞ்சம் வருத்தமா தான் இருக்குது .....

    ReplyDelete
  45. நானும் உங்களோடு
    என் புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/gmailblogger-2.html

    ReplyDelete
  46. //ஆதிரா said...
    இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்தத் தேசியக்கொடி பிடித்த தம்பி அழகா நடக்கறாரு. அவர்தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தாரு.//

    தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிங்க ஆதிரா.

    வேனும்னா அந்த தேசிய கொடி வச்சிருக்கிற தம்பிய உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க ஆதிரா.

    ReplyDelete
  47. //மணிவண்ணன் said...
    காந்தி அந்த தளத்துக்கு போய் பார்த்தேன்.. அட பாவமே..!!! இதுவரை அந்த தளம் 22376 தடவைகள் பார்வையிடப்பட்டுள்ள.கொஞ்சம் வருத்தமா தான் இருக்குது .....//

    22376 தடவை என்பது கூட பொய் வேலையா தான் இருக்கும் நண்பா.

    தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மணிவண்ணன்.

    ReplyDelete
  48. >நான் செய்த எழுத்துப்பிழையைக்கூட ( பண மாலை என்பதற்கு பதில் பண மாலாய் ) மாற்றாமல் வெளியிட்டிருக்கிறீர்கள். இனிமேல் காப்பியடித்தால் படித்துப்பார்த்து எழுத்துப்பிழையை சரி செய்து வெளியிடுங்கள்

    நக்கலு?/

    ReplyDelete
  49. இது வழக்கமா நடக்கிறதுதான் நண்பா.

    நம் எழுத்துக்களை, சிந்தனைகளை யார் சொந்தம் கொண்டாடினாலும் அது அவர்களுடையதாகிவிடாது நண்பா..

    காலம் நிச்சயம் பதில் சொல்லும்.

    எனது பல பதிவுகளை பலரும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    சிலர் பெயர் சொல்லி நன்றி சொல்வதுண்டு
    சிலர் சுட்டி இடுவதுண்டு

    சிலர் அவர்களுடையதாகவே வெளியிடுவதும் உண்டு.
    இப்படிப்பட்டவர்களை மனக்குறைபாடுடையவர்களாகவே நான் கருதுவேன்.

    அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    ReplyDelete
  50. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"

    ReplyDelete
  51. அன்பு நண்பா 127 உயிர்களின் கேள்விகளை..

    அடக்கம் செய்யவா அறிவியல் என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கிறேன்..

    காண அன்புடன் அழைக்கிறேன்.

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    ReplyDelete
  52. ஆமா எப்படி கண்டு பிடிச்சிங்க. மத்தவங்களும் ஜாக்கிரதையா இருக்கலாமே.

    ReplyDelete
  53. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க