About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Thursday 1 September 2011

ஜப்பானைப் பார்த்தாவது மாறுவாரா மன்மோகன் சிங்.

ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடா கடந்த 29 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளில் 6 வது பிரதமராக தேர்வாகி உள்ள நோடாவிற்கு பல சாவல்களை சந்திக்க வேண்டியுள்ளது.ஜப்பானில் இந்தாண்டு நடந்த நிலநடுக்கம், சுனாமி, புக்குஷிமா அணுமின் நிலைய கதிர்வீச்சு பாதிப்பு என அடுத்தடுத்து பல பேரிழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த இழப்புகளைக் களைய முன்னாள் பிரதமர் நவோட்டோ கான் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்தது.

புதுப்பித்தல் ஆற்றல் மசோதாவை பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்ற அவர், தொடர் நெருக்கடியால், கடந்த 26ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால், புதிய பிரதமராக பொறுப்பேற்க ஜப்பான் ஜனநாயக கட்சியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர். நேற்று நடந்த தேர்தல் முடிவில், நோடாவுக்கு 215 ஓட்டுகளும், காய்எடாவுக்கு 177 ஓட்டுகளும் கிடைத்தன. இதையடுத்து நோடா அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டார். கடந்த 2010ம் ஆண்டு நோடா, ஜப்பானின் நிதியமைச்சராக இருந்து, நிதிநிலையை உயர்த்தியவர். 
ஜப்பானின் வளர்ச்சிக்கு அங்குள்ள மக்களின் உழப்பு மட்டுமல்ல, அங்குள்ள அரசியலமைப்பு முறையும் முக்கிய காரணம்.


நம் நாட்டில் திரு மன்மோகனுக்கு, எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் சூப்பர் க்ளு போட்டு ஒட்டியது போல பிரதமர் நாற்காலியை விட்டு நகரமாடேங்குறார். அவர் சிறந்த பொருளாதார மேதையாக இருந்தாலும் காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ராம் போன்ற பிரச்சினைகளின் போது, தான் பதவி விலகி தான் நேர்மையானவர் என்பதை நிரூபித்திருக்க வேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பார்பட்டவராக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை. அதற்கு பதில் தன்னைவிட சிறந்தவர்களுக்கு வழி விட்டால் நன்றாக இருக்கும். அது தான் தலைமைப்பண்புக்கு அழகு. ஜப்பானைப் பார்த்தாவது மாறுவார்களா இந்திய அரசியல்வாதிகள். 33 comments:

 1. ம்ன்மோகன் சிங்கிற்க்கு வயதாகிவிட்டது...

  முதலில் அவரை மாற்றினால் தான் எல்லாம் சரியாகும்.

  ReplyDelete
 2. //# கவிதை வீதி # சௌந்தர் said...
  ம்ன்மோகன் சிங்கிற்க்கு வயதாகிவிட்டது...

  முதலில் அவரை மாற்றினால் தான் எல்லாம் சரியாகும்.//

  தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

  ReplyDelete
 3. அது தான் தலைமைப்பண்புக்கு அழகு.!!!!!!

  ReplyDelete
 4. ஜப்பானைப் பார்த்தாவது மாறுவார்களா இந்திய அரசியல்வாதிகள். -

  நம்மாளப் பார்த்து ஜப்பான் காராங்க மாறுனாலும் மாறுவாங்க..

  ஜப்பான் காரங்களப் பார்த்து நம்மாளுங்க மாற மாட்டாங்க நண்பா.!!!

  ReplyDelete
 5. பதவி ஆசை நண்பா பதவி ஆசை

  ReplyDelete
 6. நாங்க யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டோம்ம்னு காத பொத்திக்கிட்டார் போல!

  ReplyDelete
 7. //முனைவர்.இரா.குணசீலன் said...
  ஜப்பானைப் பார்த்தாவது மாறுவார்களா இந்திய அரசியல்வாதிகள். -

  நம்மாளப் பார்த்து ஜப்பான் காராங்க மாறுனாலும் மாறுவாங்க..

  ஜப்பான் காரங்களப் பார்த்து நம்மாளுங்க மாற மாட்டாங்க நண்பா.!!! //

  சரியா சொன்னீங்க முனைவரே. கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 8. //கவி அழகன் said...
  பதவி ஆசை நண்பா பதவி ஆசை//

  பதவி ஆசையால் நாட்டையே குட்டி சுவராக ஆக்குகிறார்களே நண்பா. இவர்களையெல்லாம் என்ன செய்வது.

  தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 9. வயசு போனாலும் பதவி ஆசை இவங்களை விட்டு போகுது இல்லை சிறந்த உதாரணம் தாத்தா(அப்பாட சைக்கில் கேப்ல தாத்தாவை கலாச்சாச்சு)
  நல்லா சொல்லி இருக்கிறீங்க நண்பா நல்ல பதிவு

  இன்று என் கடையில்-(பகுதி-6)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்-
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/6.html?spref=fb

  ReplyDelete
 10. //கோகுல் said...
  நாங்க யார் என்ன சொன்னாலும் கேக்க மாட்டோம்ம்னு காத பொத்திக்கிட்டார் போல!//

  இந்த மாதிரி ஒரு கல்லுளி மங்கனை பார்த்ததில்லை.

  தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா .

  ReplyDelete
 11. //K.s.s.Rajh said...
  வயசு போனாலும் பதவி ஆசை இவங்களை விட்டு போகுது இல்லை சிறந்த உதாரணம் தாத்தா(அப்பாட சைக்கில் கேப்ல தாத்தாவை கலாச்சாச்சு)
  நல்லா சொல்லி இருக்கிறீங்க நண்பா நல்ல பதிவு

  இன்று என் கடையில்-(பகுதி-6)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்-//

  இதோ பார்த்திடுவோம். கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பா.

  ReplyDelete
 12. நெத்தியடி நண்பரே!என்னதான் சொல்லுங்கள்,திருந்தாத ஜென்மங்கள் இவ்ர்கள்.

  ReplyDelete
 13. //ஸ்ரீதர் said...
  நெத்தியடி நண்பரே!என்னதான் சொல்லுங்கள்,திருந்தாத ஜென்மங்கள் இவ்ர்கள்.//

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா.

  ReplyDelete
 14. மன்மோகன் ஒரு பொம்மை பிரதமர்தானே நண்பா?

  இந்தபொம்மை போனால் இன்னொரு பொம்மை

  ReplyDelete
 15. இங்கு தலைமைக்கே போட்டி .அதனால் தான் இத்தனை தலை வலிகள் .

  ReplyDelete
 16. //நிவாஸ் said...
  மன்மோகன் ஒரு பொம்மை பிரதமர்தானே நண்பா?

  இந்தபொம்மை போனால் இன்னொரு பொம்மை//

  வித்தியாசமான பொம்மையையாவது நாம பார்க்கலாம் இல்லையா.
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

  ReplyDelete
 17. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  இங்கு தலைமைக்கே போட்டி .அதனால் தான் இத்தனை தலை வலிகள் .//

  ஆமாம் சகோ, தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 18. விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. ஜப்பானைப் பார்த்தாவது மாறுவார்களா இந்திய அரசியல்வாதிகள்?

  ReplyDelete
 20. ஃபால்லோவர் விட்ஜெட்டை கானோமே?

  அருமையான அலசல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. //shanmugavel said...
  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.//

  தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. //அந்நியன் 2 said...
  ஃபால்லோவர் விட்ஜெட்டை கானோமே?

  அருமையான அலசல் வாழ்த்துக்கள்.//

  ஃபால்லோவர் விட்ஜெட் இருக்கிறது நண்பரே. முடிந்தால் இணையுங்கள்.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா.

  ReplyDelete
 23. முதல்ல பி எம் மை மாத்தனும்

  ReplyDelete
 24. //சி.பி.செந்தில்குமார் said...
  முதல்ல பி எம் மை மாத்தனும்//

  ரிமோட் கன்ரோல் சரியில்லைங்க. அதனால் தான் பி எம்மை மாத்த முடியல.

  தங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 25. //சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பார்பட்டவராக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருப்பதில் எந்த பயனும் இல்லை. அதற்கு பதில் தன்னைவிட சிறந்தவர்களுக்கு வழி விட்டால் நன்றாக இருக்கும். அது தான் தலைமைப்பண்புக்கு அழகு. ஜப்பானைப் பார்த்தாவது மாறுவார்களா இந்திய அரசியல்வாதிகள். ///

  மிகச்சரியாக சொன்னீங்கண்ணே, ஆனால் நாடு எப்படி போனால் நமக்கென்ன நாம் சிறப்பாக ஊழல் செய்து வசதி வாய்ப்புகளோடு இருந்தால் சரிதான் என்ற நிலையில்தான் நம் இந்திய அரசியல்வாதிகள். இந்த நிலை மாறுமா??? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

  ReplyDelete
 26. @ மாணவன் (எ) சிம்பு,

  மாறுமா???? என்கிற கேள்விக்குறிக்கு நம் அடுத்த தலைமுறையிலாவது விடை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 27. என்ன சொன்னாலும் நம்ம அதிசய பிரதமர் அசைந்து கொடுக்கமாட்டார் என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை ..

  ReplyDelete
 28. @ அரசன்,

  அதிபர் மற்றும் பிரதமர் இருவருமே பொம்மையாக இருப்பது நம்ம நாட்டில் தான்.

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 29. சரியான கருத்துக்கள்.

  ReplyDelete
 30. நன்றி திரு சசிகுமார் அவர்களே

  ReplyDelete
 31. யாரப்பாத்து என்ன கேள்வி கேக்குறதுன்னு இல்ல....ஒரு தாடி வளந்த பச்சை குழந்தை கிட்ட இப்படி பேசிறது தப்பு ஹிஹி!

  ReplyDelete
 32. இனிய நண்பனுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. @ விக்கியுலகம்,

  தங்கள் முதல் கருத்துரைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க