About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Thursday 25 August 2011

விஜய் நடத்தும் அரசியல் நாடகம்

 ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.


தமிழ் திரையுலகம் நேற்றைக்கு முந்தின நாள் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதில் நடிகர் விஜய் கலந்துக்கொள்ளவில்லை. அதற்கு தன்னிடம் கலந்தாலோசிக்காமல் உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். அதனால் நான் வரவில்லை என எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். சந்திரசேகர் இவ்வாறு கூறியது தன்னை மதிக்காததால் அல்ல, தன் மகனை மதிக்காததால் தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அப்படியென்றால் அன்னா ஹசாரே இவரிடம் கலந்தாலோசித்து உண்ணாவிரதம் இருக்கிறாரா? இன்று ஏன் அன்னா ஹசாரேவை சந்தித்து அவருடன் உண்ணாவிரதம் இருக்கஅவரது மகனை டெல்லி அனுப்பனும்.

விஜய் ஒரு சுய நலவாதி. தன் சுய நலத்துக்காக, தன்னை பிரபலபடுத்திக் கொள்வதற்காக தான் டெல்லி சென்றுள்ளாரே தவிர, ஊழலை ஒழிக்கனும் என்கிற ஆர்வத்தில் இல்லை. இவர் கொடுக்கும் 30 மூட்டை அரிசிக்கும் 100 கறவை மாட்டுக்கும் வயதான பாட்டிகளை தன்னுடன் நிறுத்திக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர். (சில நடிகர்கள் தங்களை பிரபலபடுத்திக்காமல் பல உதவிகளை செய்கின்றனர்)

நிஜமாகவே மக்களுக்கு சேவை செய்ய இவருக்கு ஆசையிருந்தால், எவ்வளவோ அனாதைக்குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உதவிகள் செய்யலாம். இன்றும் எத்தனையோ ஏழை மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கிறார்கள் அவர்களுக்கு படிப்புக்கு நிதியுதவி செய்ய்யலாம்.

வாக்காளர்களாகிய அப்பாவி மக்களே இந்த மாதிரி நாடக காரர்களிடம் தமிழ் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள். அப்புறம் இவருக்கு எதிராக ஒருநாள் நாம் உண்ணாவிரதம் இருக்க வேண்டிய சூழல் வரும்.


30 comments:

  1. இவர்கள் எல்லா இடமும் நடித்தே பிழைப்பை ஓட்டிக்கொள்வார்கள்.நடிக்கத் தெரியாத அப்பாவி ஜனங்கள் வேடிக்கை தான் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. //கணினி மஞ்சம் said...
    இவர்கள் எல்லா இடமும் நடித்தே பிழைப்பை ஓட்டிக்கொள்வார்கள்.நடிக்கத் தெரியாத அப்பாவி ஜனங்கள் வேடிக்கை தான் பார்க்கலாம்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. எவ்வளவு விழுந்து புரண்டாலும் ஓட்டுவது தான் ஓட்டும் ..
    நடிக்கட்டும் நடிக்கட்டும் ...

    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  4. //எவ்வளவு விழுந்து புரண்டாலும் ஓட்டுவது தான் ஓட்டும் ..
    நடிக்கட்டும் நடிக்கட்டும் ...

    நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே //

    தங்கள் கருத்துரைக்கு நன்றி அரசன்.

    ReplyDelete
  5. யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

    ReplyDelete
  6. //விஜய் ஒரு சுய நலவாதி. தன் சுய நலத்துக்காக, தன்னை பிரபலபடுத்திக் கொள்வதற்காக தான் டெல்லி சென்றுள்ளாரே தவிர, ஊழலை ஒழிக்கனும் என்கிற ஆர்வத்தில் இல்லை. இவர் கொடுக்கும் 30 மூட்டை அரிசிக்கும் 100 கறவை மாட்டுக்கும் வயதான பாட்டிகளை தன்னுடன் நிறுத்திக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர். (சில நடிகர்கள் தங்களை பிரபலபடுத்திக்காமல் பல உதவிகளை செய்கின்றனர்)

    நிஜமாகவே மக்களுக்கு சேவை செய்ய இவருக்கு ஆசையிருந்தால், எவ்வளவோ அனாதைக்குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு உணவு மற்றும் கல்வி உதவிகள் செய்யலாம். இன்றும் எத்தனையோ ஏழை மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்பை தொடர முடியாத சூழலில் இருக்கிறார்கள் அவர்களுக்கு படிப்புக்கு நிதியுதவி செய்ய்யலாம்.///

    நீங்கள் சொல்வது சரிதான் சகோ.
    இந்தவிடயத்தில்.நடிகர் ராகவா லாரண்ஸ் எவ்வளவோ மேல்.எத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கு.உதவிகள் செய்கின்றார்.ஆனால் அவர்.தனது உதவிகளை எப்போதும் சொல்லித்திரிந்த்து இல்லை.

    ReplyDelete
  7. எண்ணதான் நினைச்சாலும் அவரால முடியாது..
    நீங்கள் சொல்வது சரி நண்பா.

    ReplyDelete
  8. எதோ செய்கிறாரே என்று விட்டுவிடுங்கள்...

    ReplyDelete
  9. விஜய் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டருங்க....

    ReplyDelete
  10. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    ReplyDelete
  11. எல்லோருக்குமே எம்.ஜி.ஆர் போல
    ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது
    அது படுத்துகிற பாடுதான் எல்லாம்
    அருமையான பதிவு

    ReplyDelete
  12. விஜயை நினைத்தால்.... //நெனப்புதான் பொழப்ப கெடுத்துதான்// என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருதுண்ணே.....

    சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!

    ReplyDelete
  13. //shanmugavel said...
    யோசிக்க வேண்டிய விஷயம்தான்.//

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  14. // K.s.s.Rajh said...
    நீங்கள் சொல்வது சரிதான் சகோ.
    இந்தவிடயத்தில்.நடிகர் ராகவா லாரண்ஸ் எவ்வளவோ மேல்.எத்தனை மாற்றுத்திறனாளிகளுக்கு.உதவிகள் செய்கின்றார்.ஆனால் அவர்.தனது உதவிகளை எப்போதும் சொல்லித்திரிந்த்து இல்லை.//

    ஆமாம் நண்பா, லாரன்ஸ் ஒரு போதும் பிரபலபடுத்திக்கொள்வதில்லை. சில நிகழ்ச்சிகளில் அவர் நடத்தும் அறக்கட்டளைக்கு நிதி உதவி கேட்பதற்காக, சில நேரங்களில் அவர் நடத்தும்
    அறக்கட்டளையின் பெயரை வெளிப்படுத்துவார்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  15. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    எண்ணதான் நினைச்சாலும் அவரால முடியாது..
    நீங்கள் சொல்வது சரி நண்பா.//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  16. //ரெவெரி said...
    எதோ செய்கிறாரே என்று விட்டுவிடுங்கள்..//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  17. //Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா. உங்களின் மேற்கண்ட பதிவை வாசித்தேன் ஐயா. அந்த மலைப்பகுதியில் ஒரு வீடு இருந்தால் நல்லா இருக்கும்னு தோனுது. அருமையான இடங்கள்.

    ReplyDelete
  18. //Ramani said...
    எல்லோருக்குமே எம்.ஜி.ஆர் போல
    ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது
    அது படுத்துகிற பாடுதான் எல்லாம்
    அருமையான பதிவு//

    தங்களின் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  19. //மாணவன் said...
    விஜயை நினைத்தால்.... //நெனப்புதான் பொழப்ப கெடுத்துதான்// என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருதுண்ணே.....

    சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே!//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சிம்பு.

    ReplyDelete
  20. விஜய்க்கு ஆசை இருக்கு, ஆனா என்ன பண்றதுன்னு தெரியல,காமெடியாயிட்டாரு

    ReplyDelete
  21. //வெங்காயம் said...
    விஜய்க்கு ஆசை இருக்கு, ஆனா என்ன பண்றதுன்னு தெரியல,காமெடியாயிட்டாரு//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம் அண்ணே,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

    ReplyDelete
  23. //மாணவன் said...

    வணக்கம் அண்ணே,
    உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று இன்றைய வலைச்சரப் பதிவில் வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!//

    என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்திய அண்ணன் வைகைக்கும் அதை தெரியப்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றி சிம்பு.

    ReplyDelete
  24. //
    அப்படியென்றால் அன்னா ஹசாரே இவரிடம் கலந்தாலோசித்து உண்ணாவிரதம் இருக்கிறாரா? இன்று ஏன் அன்னா ஹசாரேவை சந்தித்து அவருடன் உண்ணாவிரதம் இருக்கஅவரது மகனை டெல்லி அனுப்பனும்.
    //

    நல்ல கேள்வி

    ReplyDelete
  25. இவனுங்க முதலில் வாங்குற சம்பளத்த கணக்குல காட்டுரங்களா ?

    ReplyDelete
  26. அரசியிலில் இதெல்லாம் சகயமப்பா

    ReplyDelete
  27. @ "என் ராஜபாட்டை"- ராஜா said...
    இவனுங்க முதலில் வாங்குற சம்பளத்த கணக்குல காட்டுரங்களா ?

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

    ReplyDelete
  28. //கவி அழகன் said...
    அரசியிலில் இதெல்லாம் சகயமப்பா//

    இனிமேலும் அப்படி நடக்கக்கூடாது நண்பா. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  29. எல்லோருக்குமே எம்.ஜி.ஆர் போல
    ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது
    அது படுத்துகிற பாடுதான் எல்லாம்
    அருமையான பதிவு

    சரியாச் சொன்நீங்கையா .எனக்கும் இந்த
    நினைப்புத்தான் வந்தது .அருமை சகோ
    பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள் .வாங்க
    நம்ம கடைக்கும்,,, .

    ReplyDelete
  30. //அம்பாளடியாள் said...
    எல்லோருக்குமே எம்.ஜி.ஆர் போல
    ஆகவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது
    அது படுத்துகிற பாடுதான் எல்லாம்
    அருமையான பதிவு

    சரியாச் சொன்நீங்கையா .எனக்கும் இந்த
    நினைப்புத்தான் வந்தது .அருமை சகோ
    பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள் .வாங்க
    நம்ம கடைக்கும்,,, .//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி. ஏற்கனவே உங்கள் கடையின் வாடிக்கையாளர் நான்.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க