About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Wednesday 24 August 2011

ஜன் லோக்பால் மசோதாவால் ஊழலை ஒழிக்க முடியுமா?

ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினர் கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு நாடு முழுவதும் பேராதரவு கிடைத்து வருகிறது. இதைக்கண்டு அஞ்சிய பிரதமரும் ராகுலின் உத்தரவுப்படி ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

அப்படி இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் ஊழல் ஒழிந்து விடுமா? இந்த மசோதாவினால் ஊழல் புரிந்தவர்களை தண்டிக்க மட்டும் தான் முடியுமே தவிர, ஊழலை தடுக்க முடியாது என்பதே உண்மை.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உறுதியோடு இருந்தாலே ஊழல் ஒழிந்து விடும். கொடுப்பவர்கள் இருப்பதால் தான் வாங்குபவர்கள் இருக்கச் செய்கிறார்கள்.

முதலில் லஞ்சம் கொடுக்காமல் இருப்பதற்காண விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அந்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். நம்மிடம் அந்த விழிப்புணர்வு இல்லாததால் தான் லஞ்சம் கரைபுரண்டோடுகிறது.

நம்மிடம் ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது, போக்குவரத்து காவல்துறை அதிகாரி நம்மை பிடித்தால் அவரிடம் லஞ்சம் கொடுத்து அப்போது விடுபட நினைக்கிறோமே தவிர, அதற்கு பதிலாக ஓட்டுனர் உரிமம் பெற முயற்சிப்பதில்லை. இப்படி எவ்வளவோ விசயங்கள் நம்மிடமிருந்து ஆரம்பிக்கிறது.
video

அரசாங்கம் இலவசங்களை கொடுத்தால் அதை வாங்குவதற்கு தான் தயாராக இருக்கிறோமே தவிர, அதை வேண்டாம் என்று சொல்ல யாரும் இல்லை. இலவசம் தருகிறோம் என்று சொல்லும் போது யாராவது எங்களுக்கு இலவசம் வேண்டாம் அதற்கு பதிலாக தரமான கல்வி, சாலை, போதுமான போக்குவரத்து, குடி நீர் , மருத்துவமனை போன்ற வசதிகளை செய்து தாருங்கள் என்று கேட்கிறார்களா?

முடிந்தால் நீங்கள் ஒவ்வொருவருவரும் உங்களுக்கு தெரிந்த நால்வரிடம் லஞ்சம் கொடுக்காதீர்கள் லஞ்சம் வாங்காதீர்கள் என்று எடுத்துரையுங்கள். அந்த நால்வர் இன்னும் நால்வருக்கு சொல்வார்கள். ஊழலை உடனே வேரருக்க முடியாவிட்டாலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

ஒவ்வொருவரும் தினமும் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியோடு வெளியில் சென்றாலே போதுமானது.

லஞ்சம் கொடுப்பவர்களின் கைகள் கட்டப்பட்டால், லஞ்சம் வாங்குபவர் கைகள் தானாக கட்டப்பட்டுவிடும். முடிந்தால் இன்று முதல் எந்த சூழ் நிலையிலும் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுங்கள். வாருங்கள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முயற்சிப்போம்.


24 comments:

  1. வணக்கம் அண்ணே ,,
    நல்லதொரு தரமான பதிவு ..
    ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய நேரமிது ..

    ReplyDelete
  2. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ராஜா (அரசன்).

    ReplyDelete
  3. //ஒவ்வொருவரும் தினமும் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியோடு வெளியில் சென்றாலே போதுமானது.//

    மொத்த இடுகைக்கும் முத்தாய்ப்பு வைத்ததுபோன்ற கருத்து. இத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். மிக்க நன்றி!

    ReplyDelete
  4. சேட்டைக்காரன் said...
    //ஒவ்வொருவரும் தினமும் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்ற உறுதிமொழியோடு வெளியில் சென்றாலே போதுமானது.//

    மொத்த இடுகைக்கும் முத்தாய்ப்பு வைத்ததுபோன்ற கருத்து. இத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன். மிக்க நன்றி!//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. பதிவும் அருமை!

    பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள விடியோவும் அருமை!!

    உறுதிமொழி ஏற்கப்பட்டது, முடிந்தவரையில் தொடர்ந்து செயல்படுத்துவேன்!!!

    ReplyDelete
  6. நான் வெளியூர் ஆள் என்பதால் ஓட்டு மட்டும் தான்.பாஸ்

    ReplyDelete
  7. குடிமகன் said...

    பதிவும் அருமை!

    பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள விடியோவும் அருமை!!

    உறுதிமொழி ஏற்கப்பட்டது, முடிந்தவரையில் தொடர்ந்து செயல்படுத்துவேன்!!!

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குடிமகன்.

    ReplyDelete
  8. //K.s.s.Rajh said...
    நான் வெளியூர் ஆள் என்பதால் ஓட்டு மட்டும் தான்.பாஸ்//

    உங்க ஊரில் நீங்க லஞ்சம் கொடுக்காதீங்க பாஸ். தங்கள் கருத்துரைக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  9. நண்பரே....உங்களின் பதிவை போலவே தான் என் பதிவும்

    ReplyDelete
  10. முடியுமான்னு தெரியலையே?

    ReplyDelete
  11. //!* வேடந்தாங்கல் - கருன் *! said...
    முடியுமான்னு தெரியலையே?//

    "முயற்சி திருவினையாக்கும்" என்று எங்கோ படித்த ஞாபகம் வருது கருன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  12. நல்ல கருத்து தான் சொல்லியுள்ளீர்கள்.கருன் சொல்வது போல முடியுமா ,அப்போதைக்கு தமது காரியம் ஆக வேண்டும் என்று தானே நினைக்கிறார்கள் நண்பரே. இருந்தாலும் தங்கள் எண்ணம் நடை முறைக்கு வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

    ReplyDelete
  13. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி M.R

    ReplyDelete
  14. அன்புள்ள நண்பருக்கு உங்களின் கருத்துரை என்னை மேலும் மேலும் சிறப்பாக சிந்திக்க ஊக்கப்படுத்துகிறது . நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிலாநிழலின் வெளிச்சத்தில் நடை பயில வருகை தாருங்கள்
    அன்புடன்
    அ.குரு

    ReplyDelete
  15. எவ்வளவு கொடுப்பீங்க வோட்டு போட? -:)

    பதிவும் அருமை..பதிவுடன் இணைக்கப்பட்டுள்ள விடியோவும் அருமை...
    என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...

    ReplyDelete
  16. //ரெவெரி said...
    எவ்வளவு கொடுப்பீங்க வோட்டு போட? -:)//

    உறுதி மொழி எடுத்தாச்சே, அதனால உங்களுக்கு பதிலுக்கு ஓட்டு போட்டுடுறேன். இது எப்படி இருக்கு.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  17. வாருங்கள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முயற்சிப்போம்.

    ReplyDelete
  18. நண்பா இந்த ஹசாரே போரட்டத்தின் உண்மை முகம்னு நான் ஒரு பதிவே போட்டுட்டேன்............முடிந்தால் படித்து பாருங்கள்............இந்த போராட்டம் எப்படி தெரியுமா இருக்கு சந்திரமுகில ரஜினி ஒரு வசனம் வடிவேலுவை பார்த்து சொல்லுவாரு "ஒருத்தனுக்கு எந்திரிக்கவே முடியலையாம், அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்" இந்த மாதிரிதான் இந்த போராட்டம் இவனுங்க குடுக்குறதை நிருதுனாதானே அங்கே வாங்குறத நிறுத்துவாங்க.......................இது தெரியமா இந்த கிழட்டு பய மக்களை ஏமாத்திகிட்டு இருக்கான்.

    ReplyDelete
  19. // நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    வாருங்கள் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க முயற்சிப்போம்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  20. @ அபு சனா.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    கண்டிப்பாக உங்கள் பதிவை பார்க்கிறேன்.

    ReplyDelete
  21. //நவ்ஸாத் said...
    தரமான பதிவு சகா ! !//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  22. //சி.பி.செந்தில்குமார் said...
    நல்ல முயற்சி//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க