About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Thursday 18 August 2011

என் கேள்விக்கென்ன பதில்?

 நண்பர்களே, ஒவ்வொருவரும் குழந்தையாக இருக்கும்போது நம் பெற்றோர்களிடம் அது ஏன் அப்படி இருக்கிறது இது ஏன் இப்படி இருக்கிறது என்று கேள்விக்கணைகளாய் தொடுப்போம். அவர்களுக்கு தெரிந்தவரை நமக்கு சொல்லித்தந்திருப்பார்கள். அதேபோல இன்று நமக்குள் எழும் சந்தேகங்களை நம் நண்பர்களிடம் அல்லது புத்தகம் படிப்பதன் வாயிலாக அல்லது இணையம் மூலமாக தெரிந்துக்கொள்ளுவோம். ஆனால், சில கேள்விகளுக்கு இணையத்தில் கூட நேரடியான பதில் கிடைக்காது.

எனவே எனக்கு எழுந்த சந்தேகங்களை கேள்விகளாக தொடுத்துள்ளேன். உங்களுக்கு பதில் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

விவசாயம்:


கேள்வி : விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாகவும் தொழிற்சாலைகளாகவும் ஆக்கப்படுகின்றது. 2030 ல் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும். இப்படியே போனால் எதிர்காலத்தில் மக்கள்த்தொகையும் அதிகமாகிடும், விளை நிலங்களும் குறைந்துவிடும். அப்போது சாப்பாட்டுக்கு என்ன வழி?

அறிவியல்:


கேள்வி :  நிலவில் தண்ணீர் இருக்கிறதா, மனிதன் வாழ்வதற்கு ஏற்ற இடமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார்கள், அப்படி என்றால் புவியீர்ப்பு சக்தி குறைவான நிலவில் மனிதன் எப்படி வாழ்வது? முதலில் நிலவில் ஆராய்ச்சி எதற்க்காக என்பதை கொஞ்சம் தெளிவாக யாராவது சொல்லுங்கள்.

ஆத்திகம் நாத்திகம்:


கேள்வி: கடவுள் இருக்கிறாரா இல்லையா ? அப்படி கடவுள் இருந்தால் ஏழைகளையே சோதிப்பது ஏன்?(ஏழைகளை சோதிப்பான் ஆனால் கைவிடமட்டான் என்று பின்னூட்டம் போடாதீர்கள்). அப்படியே பணக்காரர்களை சோதித்தால் அவர்கள் பணத்தை வைத்து சமாளித்துக்கொள்கிறார்கள். (உதாரணம்: ரஜினியின் சமீப உடல் நிலை சம்பவம்). இதுவே ஏழையாக இருந்தால் இந்நேரம் சுடுகாட்டை பார்த்திருப்பார்கள். ரஜினியின் சம்பவம் ஒரு உதாரணம் மட்டுமே. இதுபோல இன்னும் நிறய இருக்கிறது. எனவே கடவுள் இருக்கிறார் என்றால் யாராவது தெளிவான விளக்கம் கொடுங்கள்.

குறிப்பு: நான் நாத்திகன் இல்லை.

அரசியல்:

கேள்வி: வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்கிறார்களே, அப்படி வாக்களித்த குடிமகனாகிய அன்னா ஹசாரேவுக்கு ஏற்பட்ட நிலமை என்னவென்று உங்களுக்கு தெரியும். மீண்டும் மீண்டும் எதாவது ஒரு ஊழல்வாதியைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். கட்டாயம் நாம் வாக்களிக்க வேண்டுமா? அனைவரும் வாக்களிப்பு புறக்கணிப்பு நடத்தினால் என்ன?

உங்களின் மேலான பதிலை எதிர்ப்பார்க்கிறேன். நன்றி
6 comments:

 1. மீண்டும் மீண்டும் எதாவது ஒரு ஊழல்வாதியைத்தான் தேர்ந்தெடுக்கிறோம். கட்டாயம் நாம் வாக்களிக்க வேண்டுமா?///சபாஷ் சரியான கேள்வி..

  ReplyDelete
 2. கேள்விகள் சூப்பரு.... ஆனா பதிலை நாங்க சொல்லனுமா? என்ன கொடுமை சரவணன்...

  ReplyDelete
 3. வேடந்தாங்கல் கருண், தமிழ்வாசி பிரகாஷ், karurkirukkan ஆகியோருக்கு நன்றி. பதிலை எதிர்ப்பார்த்தேன் நண்பர்களே.

  ReplyDelete
 4. உங்களுடைய கேள்விகளுக்கு எனக்கு தெரிந்த பதில்கள்

  விவசாயம் – குறைந்த நிலத்தில் அதிக மகசூலை ஈட்ட விஞ்ஞானம் கற்றுகொடுக்கும். கடலில் விவசாயம் செய்ய மனிதன் கற்றுகொள்வான்

  அறிவியல் –அமெரிக்கா உலகை ஏமாற்றி விட்டதோ? என்ற சந்தேகம் எழத்தான் செய்கிறது. 1969-ல் நிலவை தொட்ட அமெரிக்கா, 40 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்தப்பட்சம் நிலவிற்கு பயணிகள் சேவையை துவக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நமுடைய சந்திராயன் சொல்லித்தான் அவர்களுக்கு நிலவில் நீர் இருப்பதேதெரியும். வரலாறு அமெரிக்காவிற்கு மிகமுக்கியம் போலும் திரித்து எழுதிவிட்டார்கள். மனிதன் நிலவில் வாழும் காலம் நிச்சயமாக வரும்.. ஆனால் ஐந்து நூற்றாண்டுகளாவது ஆகும்.

  ஆன்மீகம் – விலங்குகளால் பகுத்தறிய முடியாதென்பதுபோல நிச்சயமாக ஒரு மனிதனால் கடவுள் இருக்கிறானா இல்லையா என்றெல்லாம் சொல்லமுடியாது, ஏனெனில் அது அவனுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். நீர், நெருப்பு, ஆகாயம்,காற்று, நிலம் ஆகியவைதான் கடவுள்.

  அரசியல் – நிச்சயமாக நீங்கள் வாக்களிக்க வேண்டும்.. எனது பழைய பதிவில் குறிப்பிட்டதைப்போல தேர்தல் ஆணையம் சில சீர்திருத்தங்களை செய்தால் நிச்சயமாக மாற்றம் கிட்டும்.

  http://kudimakan.blogspot.com/2011/04/2011.html

  தேர்தல் ஆணையம் கீழ் வருவனவற்றையும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 1. 49 - ஒ பதிவுசெய்ய தனி பொத்தானை கொடுத்திருக்கலாம் 2 . வாக்களியுங்கள் என வலியுறுத்திய ஆணையம் ஒரு கட்சிக்காக வாக்களிப்பதை விட நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் மூலம், கட்சிகளை நல்ல வேட்பாளர்களை தேர்வுசெய்ய நிர்பந்திக்க முடியும் என நம்புகிறேன். 3. வேட்பாளர்களின் சொத்து விபரம் மற்றும் கல்வித்தகுதி போன்ற விவரங்களை வாக்களர்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும், பெரும்பாலான வாக்களர்களுக்கு தமது தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் யார் யார் போட்டியிடுகின்றனர் என்பது குறித்து அறிந்திருப்பதில்லை.

  ReplyDelete
 5. @ குடிமகன்,

  நன்றி. எல்லா கேள்விகளுக்குமே பாசிட்டிவா பதில் சொல்லியிருக்கீங்க. இப்படியான் பதிலை தான் நான் எதிர்பார்த்தேன்.மீண்டும் நன்றி.

  ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க