About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Thursday 11 August 2011

என்னத்த எழுதுறது

  நன்பர்களே, என்னத்த எழுதுறது என்னத்த எழுதுறதுனு யோசிச்சு யோசிச்சே ஏழு நாள் ஓடிடுச்சு. வலைப்பதிவில் நான் பின்தொடரும் பல பதிவர்கள் தினமும் ஒரு பதிவு அல்லது இரண்டு மூன்று நாளைக்கு ஒரு பதிவாவது போட்டு விடுகிறார்கள். எப்படிதான் இப்படியெல்லாம் யோசிக்கிறார்களோ தெரியல.


நான் இப்போ ஒரு மாதமா தான் எனக்கு தெரிஞ்சதை பகிர்ந்துகிட்டு வரேன். அடுத்து என்னத்த எழுதலாம்னு நினைச்சா, ஒன்னுமே மண்டைக்கு (மண்டையா அல்லது மரமண்டையா) வரமாட்டேங்குது.  எப்படியாவது இன்னக்கி இதைவச்சே எழுதிடனும்னு முடிவுபண்ணிட்டேன்.

எதையாவது நம்ம யோசிக்கிறத யாராவது எழுதிடுறாங்க ( இப்பிடி தான் சொல்லி தப்பிச்சிக்கனும்). கவிதை எழுதலாம்னு நினைச்சேன், அப்படி நான் எழுதனும்னு நினைச்சதையெல்லாம் அண்ணங்கள், மனவிழி சத்ரியன் வெறும்பயஅன்புடன் நான் கருனா இவங்க எழுதிட்டாங்க. (இவங்க எழுத போறதுகூட நான் நினைக்கிறது தாங்க, நம்புங்க).

வரலாறு பற்றி எழுதலாம்னா, மொத்த வரலாற்று நாயகர்களையும் நம்ம மாணவன் (அட பள்ளிக்கூடத்து பையன்னு நெனைச்சா, உலக வரலாற்றையே கைக்குள்ள வச்சிருக்காரு) எழுதிகிட்டு இருக்காரு.

அரசியல் பத்தி எழுதலாம்னு நெனைச்சா அண்ணன் உண்மைத்தமிழன் ,  மற்றும் பலர் தேதி வாரியா (கலைஞர் போல) அரசியல்ல என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புட்டு புட்டு வச்சிகிட்டிருக்காங்க.

பத்திரிக்கை செய்தி, பலான பலான ( அதாங்க செக்ஸ்) மேட்டரெல்லாம் அலசலாம்னு பார்த்தா இணையத்தில் வெளியாகுறத்துக்குள்ள அண்ணன் ஞானமுத்து ப(லான)க்காவான படத்த போட்டு அவர் வெளியிட்டுடுறாரு.

கணிணி பற்றிய செய்திகளுக்கு நிறய பேர் இருக்காங்க. சரி, காபி பேஸ்ட் பண்ணிடலாம்னு பார்த்தா, அவர்களை எப்படி பார்க்கிறாங்கங்கறதை சாமியின் மன அலைகள் லசொல்லியிருக்காரு. அதனால காபி பேஸ்டும் பண்ண முடியல.


அதனால நான் சொல்லிக்க விரும்புறது என்னனா, என் தலைமைல புதுசா ஒரு சங்கம் அமைக்கலாம்னு முடிவு செஞ்சிருக்கேன், சங்கத்தோட தலைப்பு என்னன்னு தானங்க யோசிக்கிறீங்க,


சொந்தமா யோசிக்க தெரியாதோர் சங்கம் ( அதாங்க மூளையில்லாதோர் சங்கம்). அதுக்கு தலைவன் நாந்தாங்க. சேருவோர் சேரலாம், அனுமதி இலவசம்.

திட்டனும்னு நெனைக்கிறவர்கள் கீழே உங்களுக்காண இடம் இருக்கு அங்கே உங்க இஷ்டம் போல திட்டிட்டு போங்க.
7 comments:

 1. ஹா..ஹா... கலக்கல் அண்ணே :)

  ReplyDelete
 2. //என்னத்த எழுதுறது//

  இப்படி ஒரு தலைப்பே வச்சே சூப்பரா எழுதிட்டீங்க.... :)

  ReplyDelete
 3. கவலைய விடுங்கண்ணே உங்களுக்குத் தெரிஞ்சத எழுதுங்க.... (அட எதாவது தெரிஞ்சாதானே எழுதன்னு கேட்குறீங்களா? எதாவது எழுதுங்கபா யார் யாரோ எழுதுறாங்க நம்ம எழுதக்கூடாதா என்ன?) :)

  ReplyDelete
 4. கல்யாணப் பரிசு படத்திலே
  பட்டுக்கோட்டையார்
  பாட்டு பத்தியே ஒரு பாட்டு எழுதி இருப்பார்
  அதுபோல ஒன்றும் இல்லாதது குறித்தே
  மிகஅருமையான பதிவைக் கொடுத்து
  ஜமாய்துவிட்டீர்கள்
  இதுக்குத்தான் நிறைய சரக்கு வேணும்
  உங்களிடம் அது நிறைய இருக்கு
  எனவே நீங்கள் இந்த சங்கத்திற்கு
  தலைவராகும் தகுதியை இழந்து விடுகிறீர்கள்
  தொடர்ந்து பதிவு தரும் வழியைப் பாருங்கள்
  சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @ மாணவன்,

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

  ReplyDelete
 6. @Ramani said...

  //இந்த சங்கத்திற்கு தலைவராகும் தகுதியை இழந்து விடுகிறீர்கள் தொடர்ந்து பதிவு தரும் வழியைப் பாருங்கள்.சூப்பர் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்.//

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இப்படியாவது தலைவன் ஆகிடலாம்னு நினைச்சா விடமாட்டேங்குறீங்களே சார்.

  ReplyDelete
 7. படத்துல மண்டைய தொறந்து காட்டிட்டு,

  சங்கம் ஆரம்பிக்கப் போறாராம்ல!

  எப்புடியெல்லாம் பதிவு தேத்தறாய்ங்கய்யா...!

  ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க