About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Friday 5 August 2011

சிங்கப்பூரும் பசுமையும்

 நண்பர்களே, பசுமையின் அவசியத்தை பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் அதை செயல்முறைப்படுத்துவதில் அந்த அளவு ஈடுபாடு காட்டமாட்டோம்.
உலக வெப்பமயமாதல் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லாதது போல நாம் நடந்துக்கொள்வோம்.

இப்படியே போனால் நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் மீதம் வைத்திருப்பது இழப்பு மட்டுமே. இப்போ சிங்கப்பூருக்கு வருவோம்.


சிங்கப்பூர் சுத்தமான நாடு, சாலையில் உட்கார்ந்து கூட சாப்பிடலாம் என்று நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆமாம் சுத்தமான நாடு தான். சுத்தம் மட்டும் இல்லை பசுமையான நாடும் கூட.

இங்கு எங்கு பார்த்தாலும் மரங்கள் இருக்கும். எல்லா சாலையோரங்களிலும் மரங்கள் நடப்பட்டிருக்கும். அதேபோன்று சாலை இல்லாத மற்ற இடங்களில் புல் பதித்திருப்பார்கள். ஒரு இடத்தில் கூட வெறுமனே மண்ணை பார்க்க முடியாது.

சிங்கப்பூரில் அடிக்கடி மழை பெய்கிறது.  இங்கு அடிக்கடி மழை பொழிய காரணம் இங்கு எல்லா இடங்களும் மரங்களாலும், புல்வெளிகளாலும் பசுமையாக இருப்பதுதான். அதேபோன்று மழை பொழிவதால் தான் பசுமையாகவும் இருக்கிறது.

இதுபோல அடிக்கடி மழை பொழியவில்லை என்றால் இங்கு உள்ள வெப்பத்துக்கு ஈடுகொடுக்க முடியாது.  இங்கு பொழியும் மழை நீர் மண்ணுக்குள் செல்வது மிகவும் குறைவு. அனைத்து இடங்களிலும் வாய்க்கால்கள் வைத்து மழை நீரை கடலில் சேர்த்துவிடுகிறார்கள். அதனால் ஒரு வாரத்திற்கு மழை இல்லையென்றால் வெப்பம் மிகவும் அதிகமாக காணப்படும்.

இப்படி ஒரு பதிவு எழுத காரணம் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அய்யா அவர்கள் தான். போன வாரம் குமுதத்தில் படித்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒரு நாள் திடீரென நடிகர் விவேக்கிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. எதிர்முனையில் திரு அப்துல் கலாம் அவர்கள், தமிழ் நாடு முழுக்க பசுமையாக்கணும். அதற்கு 10 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு நீங்கள் பொறுப்பு. 10 லட்சத்து ஒண்ணாவது மரக்கன்றை நான் நடுறேன் என்றாராம்.

டிசம்பர் மாதத்திற்குள் முடிங்க என்று கலாம் அன்புக்கட்டளை போட்டிருக்கார்.
அதற்க்காக விவேக்கும் இப்போது பரபரப்பா செயல்பட்டுகிட்டு இருக்காராம். இந்த திட்டத்துக்கு பெயர் (GREEN KALAM).

எதிர்கால சந்ததியினருக்காக கலாம் இந்த அளவுக்கு பாடுபடுகிறார். அதுபோல நாமும் நமக்காகவும் நமது வருங்கால சந்ததியினருக்காகவும் ஆளுக்கு ஒரு மரக்கன்றை நட்டால் வீடும் நாடும் நல்லா இருக்கும்.

சிங்கப்பூரை போன்று தூய்மையாக வைத்திருக்க முடியாவிட்டாலும் பசுமையாக வைத்திருக்க முயற்சிக்கலாமே.

4 comments:

  1. சிங்கையின் மழை பொழிவுத் தண்ணீர் எதுவும் கடலில் கலந்து வீணாவதில்லை;சேமிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
    சிங்கையின் நீர்த்தேவையின் 25 சதத்தை மழை நீரின் மூலம் ஈடுகட்டுகிறார்கள்..

    ReplyDelete
  2. //எதிர்கால சந்ததியினருக்காக கலாம் இந்த அளவுக்கு பாடுபடுகிறார். அதுபோல நாமும் நமக்காகவும் நமது வருங்கால சந்ததியினருக்காகவும் ஆளுக்கு ஒரு மரக்கன்றை நட்டால் வீடும் நாடும் நல்லா இருக்கும்.

    சிங்கப்பூரை போன்று தூய்மையாக வைத்திருக்க முடியாவிட்டாலும் பசுமையாக வைத்திருக்க முயற்சிக்கலாமே. ///

    உண்மைதாண்ணே, இதை நாம் அனைவரும் மனதில் கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக நாமும் பசுமையான பாரதத்தை உருவாக்கலாம்...

    பயனுள்ள சிறந்த தகவல்களை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிண்ணே!

    ReplyDelete
  3. அறிவன்#11802717200764379909 said...

    //சிங்கையின் மழை பொழிவுத் தண்ணீர் எதுவும் கடலில் கலந்து வீணாவதில்லை;சேமிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
    சிங்கையின் நீர்த்தேவையின் 25 சதத்தை மழை நீரின் மூலம் ஈடுகட்டுகிறார்கள்..//

    தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  4. @ சிம்பு, கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க