About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Tuesday 2 August 2011

தமிழ் நாட்டை குனிய வைத்து குட்டுகிறது - மத்திய அரசு

 நன்பர்களே, தமிழீழம் உருவாகாமல் போனதற்கு இந்தியாவும் காரணம் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அத்தோடு நிறுத்தி விடாமல் மத்திய அரசு இலங்கையை தனது பங்காளியாக பாவித்து, அவ்வப்போது அங்குள்ள கொலைக்கூட்டத்தின் தலைவர்களை அழைத்து மரியாதை செய்வது தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.

காமன்வெல்த் விளையாட்டின் போது ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்ப்பு கொடுத்தது. பிறகு அந்த நாட்டின் எம்.பி க்களை வரவைத்து அவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுத்தது.

இப்போது ராஜபக்சேவின் சகோதரருக்கும் நேற்று இந்திய பாராளுமன்றத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது தான் தமிழகத்தின் அ.தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் எம்.பி க்கள் SHAME SHAME  என கோஷம் எழுப்பியுள்ளார்கள்.

இதனை சோனியாவுக்கு கூழகும்பிடு போடும் சபா நாயகர் மீராகுமார் கண்டித்துள்ளார். அத்தோடு இல்லாமல் இலங்கை எம்.பி காளிடம் மன்னிப்பு கோருவ்தாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, ப்ரிட்டன் போன்ற நாடுகள் இலங்கையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.  அமெரிக்கா கூட குரல் கொடுக்க துவங்கியுள்ள நிலையில்  இந்தியா வாயை மூடிக்கொண்டு மௌனம் சாதிப்பது ஏன்?

தமிழினத்தை அழித்தது போல் ஹிந்திக்கார மக்களையோ அல்லது சீக்கிய மக்களையோ அழித்தால் இந்த அரசு பார்த்துக்கொண்டு இருக்குமா?

இலங்கையில் நடந்தேரிய வன்முறைகளை சானல் 4 ஊடகத்தின் வழியாக ஒளிபாரப்பிய போதும் இந்திய அரசு இலங்கை மீது எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

ராஜீவ் காந்தி என்ற ஒரு உயிருக்காக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் உயிர்களை பலிவாங்கிவிட்டார் இந்த இத்தாலிக்காரி.

இதன் மூலம் தமிழ் மக்களை தம் நாட்டு மக்களாக மன்மோகனும், சோனியாவும் பார்க்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு தனது கடுமையான கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்காவிட்டால் தமிழர்களையும் தமிழ் நாட்டையும் மத்திய அரசு கேவலப்படுத்திக்கொண்டு தான் இருக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க