About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Monday 1 August 2011

ஐபோன் மற்றும் கூகுளின் ஆன்ட்ராய்டுக்கு போட்டியாக, விண்டோஸ்-மேங்கோ!

மைக்ரோசாப்ட் நிறுவனம் கைப்பேசிகளுக்கான சிறப்பம்சங்களுடன் கூடிய 500 புதியவகை மென்பொருளை இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் பின்னுக்குத் தள்ளப்பட்ட மைக்ரோசாப்ட், கைப்பேசி சந்தையில் தான் இழந்த இடத்தை மீட்கும் முயற்சியில் தீவிரவாக இறங்கியுள்ளதை அடுத்து, 500 புதிய சிறப்பம்சங்களுடன் சந்தைக்கு வருமென்று மைக்ரோசாப்ட் கைப்பேசி நிறுவனத்தின் துணைத்தலைவர் டெர்ரி மியர்சன் தெரிவித்துள்ளார்.

இணைய தொடர்புக்கு இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9, Auto Focus வசதியுடன் கூடிய 13.2 மெகா பிக்சல் துல்லியமுள்ள கேமரா,32 GB கொள்ளளவு கொண்ட நினைவகம் (Memory) ஆகிய சிறப்பம்சங்களுடன் வரும் செப்டம்பரில் சந்தைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைலுக்காக உருவாக்கப்படும் இந்த புதிய மென்பொருளுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் மேங்கோ என்று பெயரிட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களின் வருகையால் இழந்த சந்தையை மீட்டெடுக்கும் நோக்கில் தீவிரவாமக இறங்கியுள்ளன.  மைக்ரோசாஃப்ட்டின் இந்த அறிவிப்பு, தொழில்நுட்ப விரும்பிகளால் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. 


மைக்ரோசாஃப்டை எதிர்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும், கூகுளின் ஆண்ட்ராய்டும் தங்கள் தயாரிப்புகளில் மேலும்பல புதுமைகளை புகுத்தும்பட்சத்தில் நவீன கைப்பேசி பிரியர்களுக்குக் கொண்டாட்டம்தான்.



No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க