About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Wednesday 3 August 2011

என்ன கொடுமை சார் இது !!! ரஜினி ரசிகர்கள் 1008 பேர் மொட்டை.

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் திரும்பியதால், மகிழ்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்க்ள 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு அன்னதானம் வழங்கினர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.


எனக்கு தோன்றிய சில கேள்விகள்:


1. இவர்களின் (மொட்டையடித்துக்கொண்டவர்களின்) தாய் தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் இவர்கள் இப்படி சாமிக்கு வேண்டிக்கொண்டு மொட்டை போடுவார்களா?


2.  அல்லது இவர்களில் யாராவது ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் ரஜினிகாந்த் மொட்டை போட்டுக்கொள்வாரா?


3. இவர் சம்பாதித்த பணத்தை தமிழ் நாட்டில் தொழிற்சாலை அமைத்து இந்த மக்களுக்கு வேலை கொடுப்பாரா? கர்நாடகாவில் ரஜினிக்கு சொந்தமாக கல்வி நிறுவனம் மற்றும் தொழிற்சாலை உள்ளதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.


 ரஜினி நல்ல குணமுடையவர் தான், அவர் குணமடையனும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற செயல்கள் தேவையற்றது. 10 comments:

 1. சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாத சனம் .
  வேதனைப்படுவதை தவிர வேறென்ன செய்ய ..
  27.7.11 ஆனந்தவிகடன் இல் ரஜனி ரசிகன் ! கண்ணீர் கதை
  சிறு கதை படிக்கவும்

  ReplyDelete
 2. தமிழனின் இன்றைய அடிமை இழி நிலைக்கு முக்கிய காரணம் சினிமா. இது தமிழினத்திற்கே அவமானம்.

  ReplyDelete
 3. நேற்றுதான் என்னுடைய இருநூறாவது பதிவில் இந்த எழவை பற்றி எழுதினேன், அதுக்குள்ளே இப்படி ஒரு செய்தியா??????? சத்தியமா சொல்லுறேன் இவனுங்கெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை...............நம்ம தமிழகத்தை இந்த சினிமா காரர்களிடமிருந்து............அந்த ஆண்டவன்தான் காப்பாத்தனும்................

  ReplyDelete
 4. @ thennavan, தங்கள் வருகைக்கு நன்றி.
  ஆமாம் சினிமாவை பொழுதுபொக்காக பார்க்க தெரியாத மக்கள் தான் நம் மக்கள். இவர்களை திருத்தவே முடியாது

  ReplyDelete
 5. @ Abu sana, தங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பதிவை நான் இன்னும் பார்க்க வில்லை. விரைவில் பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. //ரஜினி நல்ல குணமுடையவர் தான், அவர் குணமடையனும் என்று நினைப்பதில் தவறில்லை. ஆனால் இதுபோன்ற செயல்கள் தேவையற்றது. //

  சரியா சொன்னீங்கண்ணே, ரஜினிக்கு ஒரு நல்ல ரசிகனாய் இருப்பதாய் தவறில்லை ஆனால் இதுபோன்ற செய்லகளெல்லாம் ரொம்பவும் ஓவர்...

  ReplyDelete
 7. @ சிம்பு, கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. இவனுங்களோட அலும்பு தாங்கமுடியலைடா சாமி..

  இதுல இந்த மீடியாக்கள் வேறு கடந்த ஒரு மாதமா, ரஜினி உடல்நிலை பற்றிய பிளாஷ் நியூஸ் ஓட்டுரானுங்க..

  முடிஞ்சா இந்த கூட்டத்த வச்சி, ஆக்கப்பூர்வமா எதையாவது பண்ணுங்கப்பா....

  ReplyDelete
 10. @ குடிமகன்,
  தங்கள் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க