About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 20 August 2011

கருப்பு பணத்தை மீட்டால் இந்தியா தான் நம்பர் 1

 நண்பர்களே, சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வந்தால் இந்தியா தான் உலகின் நம்பர் 1 என்று ஒரு குறுஞ்செய்தி உலா வருகிறது. உங்களுக்கும் கூட வந்திருக்கும் என்று நம்புகிறேன்.


அதாவது மொத்த கருப்பு பணம் 1456 லட்சம் கோடி என்கிறார்கள். ஸ்பெக்ட்ராம் ஊழலுக்கு 10 பூஜியம் தான் வந்தது. இதுக்கு எத்தனை பூஜியம் வரும்னு தெரியல. 
அந்த பணத்தை மீட்டால் என்னவெல்லாம் பண்ணலாம்னு ஒரு பட்டியலே போட்டு இருக்கிறார்கள். இதோ உங்கள் பார்வைக்கு.

1. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 60000 கோடி கிடைக்குமாம்.

2. ஒவ்வொரு கிராமத்துக்கும் 100 கோடி கிடைக்குமாம். ( ஹை ஜாலி, எங்க கிராமத்துல 100 வீடு தான் )

3. அடுத்த 20 வருடங்களுக்கு யாரும் வரி செலுத்த வேண்டியதில்லையாம். 

4. பெட்ரோல் லிட்டர் 25 ரூபாய்க்கும், டீசல் 15 ரூபாய்க்கும், பால் 8 ரூபாய்க்கும் கிடைக்குமாம்.

5. சீன சுவரை விட இந்திய எல்லை வலுப்பெற்றதாகிடுமாம். 

6. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் போல 1500 பல்கலை நிறுவலாமாம்.

7. பாரிசில் உள்ளது போல 28000 கிலொமீட்டருக்கு ரப்பர் ரோடு போடலாமாம். 

8. இலவச மருந்தகங்களுடன் 2000 மருத்துவமனைகள் உருவாக்கலாமாம். 

9. 95 கோடி மக்களுக்கு சொந்த வீடு கிடைக்குமாம். 

அப்போ, கருப்பு பணம் வந்துடுச்சினா நான் வேலைக்கு போக வேண்டியதில்லை. எங்க ஊர்ல 100 வீடு தான். அதனால எனக்கு 1 கோடி கிடைக்கும்ல. 




18 comments:

  1. // !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    அப்படியா? //

    வாங்க! வாங்க!! வாங்க!!!

    ReplyDelete
  2. //அப்போ, கருப்பு பணம் வந்துடுச்சினா நான் வேலைக்கு போக வேண்டியதில்லை. எங்க ஊர்ல 100 வீடு தான். அதனால எனக்கு 1 கோடி கிடைக்கும்ல //

    ஆசை யார விட்டது.... ஹைய்யோ... ஹய்யோ.

    பகிர்வுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  3. யாரு சொன்னா இந்தியா ஏழை நாடுன்னு..?????????

    ReplyDelete
  4. @ //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ம் ...//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  5. // MUTHARASU said...
    //அப்போ, கருப்பு பணம் வந்துடுச்சினா நான் வேலைக்கு போக வேண்டியதில்லை. எங்க ஊர்ல 100 வீடு தான். அதனால எனக்கு 1 கோடி கிடைக்கும்ல //

    ஆசை யார விட்டது.... ஹைய்யோ... ஹய்யோ.

    பகிர்வுக்கு நன்றி நண்பா...//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா

    ReplyDelete
  6. //முனைவர்.இரா.குணசீலன் said...
    யாரு சொன்னா இந்தியா ஏழை நாடுன்னு..?????????//

    நாடு பணக்கார நாடு தான், மக்கள் தான் ஏழை.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே

    ReplyDelete
  7. அண்ணே இதுல இம்புட்டு வேல செய்யளாமா?மக்கள் பாவம்யா

    ReplyDelete
  8. அடப்பாவி இப்படியா ஒரு மனிசன் ஜோசிப்பான்

    ReplyDelete
  9. ஆமாம்.எனக்கும் வந்தது.

    ReplyDelete
  10. //K.s.s.Rajh said...
    அண்ணே இதுல இம்புட்டு வேல செய்யளாமா?மக்கள் பாவம்யா //

    இவ்வளவு செய்ய முடியாவிட்டாலும் இதில் பாதி செய்தாலே போதும்.

    தங்கள் வருகைக்கு நன்றி சகோதரா.

    ReplyDelete
  11. // கவி அழகன் said...
    அடப்பாவி இப்படியா ஒரு மனிசன் ஜோசிப்பான்//

    இதை தான் நானும் யோசிச்சேன். இப்படியெலாமா யோசிப்பாங்க.

    தங்கள் வருகைக்கு நன்றி சகோதரா.

    ReplyDelete
  12. // shanmugavel said...
    ஆமாம்.எனக்கும் வந்தது.//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    ReplyDelete
  13. வெள்ளையர்கள் கொள்ளையடித்து
    கொண்டுபோனதைவிட
    நம்மவர்கள் கொள்ளையடித்து
    கொண்டுபோய் இருப்பது
    கூடுதலாக இருக்கும் போல் இருக்கிறதே
    என்ன என்ன செய்யலாம் என்கிற
    பட்டியல் படித்து அசந்து போனேன்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. //Ramani said...
    வெள்ளையர்கள் கொள்ளையடித்து
    கொண்டுபோனதைவிட
    நம்மவர்கள் கொள்ளையடித்து
    கொண்டுபோய் இருப்பது
    கூடுதலாக இருக்கும் போல் இருக்கிறதே
    என்ன என்ன செய்யலாம் என்கிற
    பட்டியல் படித்து அசந்து போனேன்
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    ReplyDelete
  15. இந்த மெயில் ஃபார்வெர்ட்ஸ் தொல்ல தாங்கமுடிலப்பா......

    ReplyDelete
  16. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
    இந்த மெயில் ஃபார்வெர்ட்ஸ் தொல்ல தாங்கமுடிலப்பா......//

    தங்களின் வருகைக்கும் பின்தொடர்தலுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க