About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Friday 22 July 2011

இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிய பாடகர் மனோ. (ஒலி நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது)

 நேற்று முன் தினம் உங்களுக்காக பாடகர் மனோ மற்றும் க்ரிஷ், சுசித்ரா ஆகியோர் இலங்கை செல்வது பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதுபோலவே அவர்களும் இலங்கை சென்றது உண்மை தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 


ஆனால் அவர்கள் அங்கு நடக்கவிருந்த நிகழ்ச்சியில் பங்குபெறவில்லை. ஏனென்றால் அவர்களை அங்கு நிகழ்ச்சிக்காக அழைத்தவர்கள் அவர்களிடம் பொய் சொல்லி, அங்கு நடக்கவிருக்கும் விளையாட்டு நிகழ்ச்சிக்காக இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று சொல்லி அழைத்திருந்ததாக மனோ கூறியுள்ளார்.


ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர் என்பது தான் உண்மை. இதனை அறியாத அவர்கள் 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர்.

மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்துவிட்டு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினர்.

இந்த விஷயம் தொடர்பாக பாடகர் மனோ இலங்கை FM க்கு அளித்த ஒலி நேர்காணல் மேலே இணைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க