About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Monday 18 July 2011

நேற்று அட்டாக் பாண்டி, இன்று வீர பாண்டி

           நில அபகரிப்பு குற்றச்சாட்டில் மதுரையின் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகிரியின் தீவிர(வாதியுமான)ஆதரவாளரான அட்டாக் பாண்டியை சில நாட்களுக்கு முன்பு தான் கைது செய்தார்கள். இப்பொழுது அவர் பெயரில் 7 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். (தாடியுடன் அட்டாக் பாண்டி)


         அந்த சூடு அடங்குவதற்குள், சேலத்தில் வீர (இப்போ வீரம் இல்லை) பாண்டியாரின் பினாமி என கருதப்படும் ராஜேந்திரனை கைது செய்துள்ளார்கள். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், மற்றும் அவரது மகன் ஆகியோரது நிலங்கள் சில இவரது பெயரிலேயே பதிவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

            
            கைது செய்யப்பட்டுள்ளவரின் பெயர் ராஜேந்திரன். அஸ்தம்பட்டி என்ற இடத்தைச் சேர்ந்த இவர், சேலம் தி.மு.க.வில் பெரிய பதவிகள் எதிலும் இல்லாதவர். ஆனால், வீரபாண்டியாரின் மகனுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டவர் என்று கூறப்படுகின்றது.
            
          சேலத்தைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலங்களை அடையாளம் காட்டுவதும், அவற்றை தனது பெயரில் பத்திரப் பதிவு செய்து கொள்வதும்தான் இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்று என்கிறது போலீஸ் தரப்பு. உரிமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பெறும்போது, அவை அமைச்சருக்குத்தான் என்றே சொல்லப்படுமாம். அதற்கும் மசியாதவர்களை மிரட்ட அமைச்சரின் ஆட்கள் அனுப்பி வைக்கப்படுவார்களாம்.

            இவரை எப்படிச் சிக்க வைக்கலாம் என்று காத்திருந்த சேலம் போலீஸ், ஆட்சி மாற்றத்தின்பின் அதைச் செய்துள்ளது. நிலத்தைப் பறிகொடுத்த ஒருவரை வைத்து புகார் கொடுக்கச் செய்து, ராஜேந்திரனைக் கைது செய்திருக்கின்றது.

            சேலத்தைச் சுற்றியுள்ள நிலங்கள் பல முதலில் ராஜேந்திரனின் பெயருக்குப் பதிவு செய்யப்படுவதும், அதன்பின் வீரபாண்டியாரின் தூரத்து உறவினர் ஒருவர் அந்த நிலங்களைக் கவனித்து வருவதும் தெரியவந்துள்ளது.

அண்ணன் அழகிரிக்கு ஒரு வெண்டுகோள்: தப்பி தவறியும் மதுரைக்கு வந்துடாதீங்க. அனேகமா அடுத்த ஆப்பு உங்களுக்கா தான் இருக்கும். 

1 comment:

  1. வணக்கம் நண்பரே

    உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

    http://www.valaiyakam.com/

    ஓட்டுப்பட்டை இணைக்க:
    http://www.valaiyakam.com/page.php?page=about

    ReplyDelete

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க