About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Friday 8 July 2011

வி.வி.ஐ.பி க்கள் செல்லும் விமானம்: வாடகை பாக்கி வைத்திருக்கும் மத்திய அரசு


                  நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாது தத்தளிக்கும் தேசிய விமான சேவை ஏர் இந்தியா, தனக்கு கடன் பாக்கி வைத்திருப்பவர்களிடம், அதை உடனடியாகக் கொடுக்கும்படி கேட்டுள்ளது. இது சாதாரண ஒரு செய்திதான். ஆனால் இந்தச் செய்தியிலுள்ள விசேஷ அம்சம் என்ன தெரியுமா?

ஏர் இந்தியாவுக்கு கடன் பாக்கி வைத்திருப்பவர்களில் அதிக தொகை பாக்கி வைத்திருப்பவர்கள், சாட்சாத் மத்திய அரசுதான்! (ஏர் இந்தியாவும் மத்திய அரசு நிறுவனம்தான்!)


ஏர் இந்தியாவின் 2010-2011ம் ஆண்டுக் கணக்குகளில், மத்திய அரசு கொடுக்க வேண்டிய கடன் பாக்கி, 1,222 கோடி ரூபா! மத்திய அரசின் சார்பில் ஏர் இந்தியாவில் பயணம் செய்தவர்களின் டிக்கெட்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை இது.

மத்திய அரசு இதை இன்னமும் செட்டில் செய்யாமல் இருக்கின்றது.

ஏர் இந்தியாவுக்கு ஆட்டோ மீட்டர்போல கடகடவென ஓடும் மற்றொரு செலவு, அவர்களிடமுள்ள போயிங் 747 விமானங்களைப் பராமரிக்கும் செலவு. அப்படியிருந்தும் இந்த விமானங்களை ஏன் ஏர் இந்தியா இன்னமும் வைத்திருக்கின்றது தெரியுமா?

பிரதமர் உட்பட, வி.வி.ஐ.பி.களின் தனிப் பயணங்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்டுள்ள விமானங்கள் இவை.
மொத்தம் 5 போயிங் 747-400 சீரீஸ் விமானங்களை வி.வி.ஐ.பி.களின் பயணங்களுக்காக தமது ஹாங்கர்களில் நிறுத்தி வைத்திருக்கிறது ஏர் இந்தியா. இவை சாதாரண ரூட்களில் பயணிகளுக்காக ரெகுலராக உபயோகப்படுத்தப் படுவதில்லை.


காரணம், இந்த விமானங்களின் உட்புற இன்டீரியர் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. பயணிகள் பயணம் செய்வதற்கு தனி கேபின்கள், குளியலறை வசதி, கன்பிரன்ஸ் ரூம் என்று இந்த போயிங் விமானங்களின் உட்புறம் மாற்றப்பட்டுள்ளன.

இதனால், சாதாரண ரூட்களில் இவற்றை பயணிகள் விமானங்களாக உபயோகிக்க முடியாது.
வெளியே சொல்லாதீர்கள், மற்றொரு ரகசியமான விஷயத்தைக் கூறுகிறேன். இந்த 5 விமானங்களில் 3 விமானங்கள் மாத்திரமே ஏர் இந்தியாவுக்கு சொந்தமானவை. மற்றைய இரு விமானங்களும் லீஸ் பண்ணப்பட்ட விமானங்கள்.

வி.வி.ஐ.பி. பயணங்களுக்காக சும்மா ஹாங்கருக்குள் நிறுத்தி வைத்திருந்தாலும், மாதாமாதம் வாடகைப் பணம் கட்டவேண்டும்!

பராமரிப்புச் செலவு அதிகம் என்று இந்த விமானங்களை தமது ஃபிளீட்டிலிருந்து அகற்ற ஏர் இந்தியா 2009ல் முடிவெடுத்தது. ஆனால், மத்திய அரசு தடுத்து விட்டது. தமது வி.வி.ஐ.பி. பயணங்களுக்கு அந்த விமானங்கள் தேவை என்று கூறிவிட்டது.

2009ல் இருந்ததைவிட, இந்த விமானங்களின் விற்பனை விலை தற்போது 15 மில்லியன் டொலர் குறைவாகி விட்டது. இப்போது இவற்றை விற்றால்கூட, 15 மில்லியன் நஷ்டத்துடனே விற்கவேண்டியிருக்கும்.
அப்படி விற்றாவது, ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுக்க பாருங்கப்பா!!!


No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க