About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Tuesday 12 July 2011

மடிக்கணிணியின் பேட்டரி ( Battery life ) நேரத்தை அதிகரிக்க சில வழிகள்

      நன்பர்களே நீங்கள் மடிக்கணணி பயன்படுத்துபவர்களாக இருப்பீர்களானால்,  நீங்கள் உங்கள் மடிக்கணணியின் Battery Life பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் அதை அதிகரிக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.



      1. Wireless சாதனங்கள்: உங்களுக்கே தெரியும் Wireless சாதனங்கள் எப்படி Battery இன் Life ஐ குறைக்கும் என்று. இதில் முக்கியமானது என்னவென்றால் Wi-fi மற்றும் Bluetooth போன்றவை உபயோகத்தில் இல்லாத போது அவற்றை off செய்யவும்.
      2. Screen Brightness ஐ சரி செய்தல்: Battery  கொஞ்சம் அதிக நேரம் வேலை செய்யணும் என்றால் திரையின் Brightness ஐ உங்கள் வசதிக்கு ஏற்ற படி குறைத்துக் கொள்ளுங்கள்.
      3. USB மற்றும் CD/DVD: இவையும் Wireless போல தான் இவ்வாறான சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத போது அவற்றை துண்டித்து (Remove) விடுதல் நல்லது. மேலும் i-POD ஐ மடிக்கணணியில் Charge போடுவதையும் தவிர்த்து விடுங்கள். ஏனென்ற்றால் அது அதிகமான சக்தியை உள்வாங்கும்.
      4. அதிகமான RAM ஐ உபயோகியுங்கள்: குறிப்பாக சொல்லபோனால் RAM இன் செயல்பாடு அதிகமானால் அது தற்காலிக விளைவாக உங்கள் Hard Disk இன் வேலையை அதிகரிக்கும். அதுவும் உங்கள் Battery ஐ குறைக்கலாம். எனவே உங்கள் RAM capacity ஐ அதிகமக்கினால்  உங்கள் Battery கொஞ்சம் கூட வேலை செய்யும்.
      5. Background applications: உங்கள் கணனியில் Background Apps கள் CPU இன் வேலைப்பளுவை அதிகரிக்கும். குறிப்பாக Messengers, Clock Apps போன்றன. இவை தேவையில்லாத நேரங்களில் நிறுத்தி விடப்படுவது சிறந்தது.
      6. Battery ஐ charge இல் போடும் நேரம்: Battery எந்நேரமும் Charge இல் போடுவது ஒரு தவறான வேலை. அதனால் நீங்கள் உபயோகப்படுத்தாத போது charge ல் இருந்து remove பண்ணுங்கள்.


      இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க