About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Thursday 28 July 2011

அனைவரையும் கொல்ல உத்தரவிட்ட இலங்கை-- சேனல் 4 புதிய வீடியோ வெளியீடு

 நன்பர்களே எற்கனவே சேனல் 4 வெளியிட்ட இலங்கையின் கொலைக்களங்கள் பற்றிய வீடியோவை பார்த்திருப்பீர்கள். இப்போது சேனல் 4 இலங்கையில் கடைசி நேரத்தில் நடந்த யுத்தத்தின் போது சரணடைய வந்த நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை கொல்ல உத்தரவிட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது.


கோத்தபாய ராஜபக்ஷவின் நேரடி உத்தரவின் பேரில் இறுதிப் போர் இடம்பெற்றதாக தற்போது சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தெரிவிக்கப்படுகிறது. 


இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுடன் நேரடியாகத் தொடர்புகொண்ட கோத்தபாய எந்த இழப்பு வந்தாலும் பரவாயில்லை யுத்தத்தை முடித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். சிறிய இடம் ஒன்றையே நீங்கள் கைப்பற்ற இருக்கிறது. அதனால் யாரைக் கொன்றாலும் பரவாயில்லை என அவர் அறிவித்துள்ளார். 


அதோடு மட்டும் நின்றுவிடாது, சரணடையும் போராளிகளையும் மற்றும் அரசியல் தலைவர்களையும் கண்ட இடத்தில் சுடுமாறும் இவர் கூறியதாக, ஷவேந்திர சில்வாவுக்கு மிக நெருக்கமன சிப்பாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது இந்த உத்தரவுகளை கோத்தபாய நேரடியாக ஷவேந்திர சில்வாவுக்கு வழங்கும்போது அருகில் நின்ற சிப்பாய் ஒருவர் இப்போது சாட்சியாக மாறியுள்ளார். அவர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த வீடியோ தயாராகி சனல் 4 தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது. 


இந்த வீடியோ காரணமாக இலங்கை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது கோத்தபாய ஒரு போர் குற்றவாளி என நேரடியாக ஒரு சாட்சி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். 



கண்டிப்பாக ராஜபக்ஷேவும் அவரது சகோதரரும் தண்டிக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் மனம் கொஞ்சமாவது திருப்தியடையும்.



No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க