About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Saturday 2 July 2011

சிங்கப்பூரில் சின்னத்திரை விருதுகள் : பிரதான விழா 2011


  நம் தமிழ் மக்களுக்கு சிங்கபூர் பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. ஏனென்றால் தமிழ் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது ஒருவராவது சிங்கப்பூரில் இருப்பார்கள். அதனால் அவர்கள் சிங்கப்பூரையும் அதன் சுற்றுப்புறம் பற்றியும் சொல்லியிருப்பார்கள்.

ஓ.கே விஷயத்திற்கு வருவோம், இங்கு மீடியாகொர்ப் என்ற தொலைக்காட்சி நிறுவனம் உள்ளது. அது ஆறு சேனல்களை கொண்டுள்ளது. அதில் தமிழ் ஒளிவழியும் ஒன்று. அது தான் வசந்தம் தமிழ் தொலைக்காட்சி.

இந்த வசந்தம் தொலைக்காட்சி வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 12 மணி வரை செயல்படும். வார இறுதி மற்றும் பொது விடுமுறை நாட்களில் மதியம் 1 மணி முதல் இரவு 12.30 மணி வரையும் செயல்படும்.


நம்ம ஊரில் நிகழ்ச்சிகள் படைப்பது போலவே தான் இங்கும் நிகழ்ச்சிகள் படைப்பார்கள், ஆனால் இங்கு தூய தமிழில் நிகழ்ச்சிகள் படைப்பார்கள்.

இப்படி படைக்கப்ப்டும் நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் நாடக தொடர்களுக்கும் மற்றும் அதில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் தொழிழ் நுட்ப கலைக்னர்களுக்கும் தான் கடந்த 26 ஜூன் மாதம் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது நிகழ்ச்சியின் பெயர் பிரதான விழா. இதில் மொத்தம் 26 விருதுகள் வழங்கப்பட்டன. இதில் முக்கியமான விருது வாழ் நாள் சாதனையாளர் விருது.

இந்த விருதை வழங்குவதற்க்கு சிங்கப்பூரின் தகவல் தொலை தொடர்பு அமைச்சர் வந்திருந்தார். இந்த விருது 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரின் தமிழ் நாடகம் மற்றும் தொலைக்காட்சி துறையில் சிறப்பாக பணியாற்றிய பெண்மணியான திருமதி சித்ராதேவிக்கு வழங்கப்பட்டது.


இதுபோல நம்ம ஊரிலும் சின்னத்திரை நடிகர் நடிகையருக்கு விருது தந்து கௌரவித்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

இது உங்களுக்கான இடம், எதாவது சொல்லிட்டு போங்க