About Me

My photo
அரியலூர், தமிழ்நாடு, India
உலகத்தையும் இந்த மக்களையும் புரிந்துக்கொள்ள நினைக்கும் சாதாரண மனிதன்.

Wednesday 16 March 2011

சுனாமி இதுவரை



video
சுனாமி தாக்கிய விபரம்:


1. 1700 ல் அமெரிக்காவின் கலிஃபோர்னியா, கொலம்பியா, ஓரிகன், வாஷிங்க்டன் போன்ற இடங்களில் ரிக்டர் அளவில் 9 ஆக ஏற்பட்ட நில நடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமி ஏற்ப்பட்டுள்ளது. உயிர் சேதம் பற்றிய தகவல் இல்லை.

2. 1755  நவம்பரில் போர்ச்சுக்கலில் உள்ள லிஸ்பன் எனுமிடத்தில் ரிக்டர் அளவில் 8.7 உருவான நில நடுக்கத்தினால் சுனாமி ஏற்ப்பட்டு 60,000 பேர் இறந்துள்ளனர்.

3. 1868 ஆகஸ்டில் சிலியில் ரிக்டர் அளவில் 9 ஆக பதிவான நில நடுக்கத்தில் தென் அமெரிக்காவில் சுனாமி உருவாகி 25000 பேர் இறந்துள்ளனர்.

4. 1883 ல் சுமத்ரா மற்றும் வடக்கு ஜாவாவில் ஏற்ப்பட்ட சுனாமியின் காரணமாக எரிமலை வெடித்து 36000 பேர் இறந்துள்ளனர்.

5. 1896 ஜூன் மாததில் ஏற்பட்ட நில நடு நடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்ப்பட்டு 27000 பேர் இறந்துள்ளனர்.

6.1906 ஜனவரியில் ஈகுவடர் மற்றும் கொலம்பியாவில் ரிக்டர் அளவில் 8.8 ஆக ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சுனாமி உருவாகி 500 பேர் இறந்துள்ளனர்.

7. 1946 ஏப்ரலில் அலாஸ்காவில் ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவான நில நடுக்கத்தினால் ஏற்ப்பட்ட சுனாமியானது ஹவாய் தீவை தாக்கியதில் 165 பேர் இறந்துள்ளனர்.

8. 1960 மே மாதம் தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 ஆக ஏற்ப்பட்ட நில நடுக்கத்தினால் சுனாமி உருவாகி 1716 பேர் இறந்துள்ளனர்.

9. 1964 மார்ச் மாதம் அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம்ஸ் சதுக்கத்தில் ரிக்டர் அளவில் 9.5 ஆக ஏற்பட்ட நில நடுக்கத்தில் 131 பேர் வரை இறந்துள்ளனர்.

10. 1976 ஆகஸ்டில் பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவில் 9.5 ஆக பதிவான நில நடுக்கத்தினால் சுனாமி ஏற்ப்பட்டு 5000 பேர் வரை இறந்துள்ளனர்.

11. 1998 ஜூலையில் நியூ ஜெனீவாவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நில நடுக்கத்தினால் சுனாமி ஏற்பட்டு 2200 பேர் வரை இறந்துள்ளனர்.

12. 2004 டிசம்பரில் இந்திய பெருங்கடலில் ரிக்டர் அளவில் 9 ஆக ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சுனாமி உருவாகி இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் 3,20,000 பேர் வரை இறந்துள்ளனர். இதுவரை ஏற்பட்ட சுனாமியில் இதுதான் அதிகமான உயிர் சேதத்தை ஏற்படுத்திய பேரழிவாகும்.

13. 2005 மார்ச்சில் சுமத்ராவில் 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் சுனாமி உருவாகி 1300 பேர் வரை இறந்துள்ளனர்.

14. 2007 ல் சாலமன் தீவில் ரிக்டர் அளவில் 8.1 ஆக பதிவான நில நடுக்கத்தில் உருவான சுனாமியால் 28 பேர் இறந்துள்ளனர்.

15. 2010 பிப்ரவரியில் சிலியில் நடந்த நிலனடுக்கத்தினால் ஏற்பட்ட சுனாமியால்
122 பேர் இறந்துள்ளனர்.

16. 2011 மார்ச்-ல் ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9  ஆக பதிவான கடுமையான நில நடுக்கத்தினால் சுனாமி உருவாகி 10,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாகவும், மேலும் 30,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
video